என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டுர் காரம்"

    • நடிகர் மகேஷ்பாபு தற்போது ‘குண்டுர் காரம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தை இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு தற்போது 'குண்டுர் காரம்' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'ஆலா வைகுந்தபுரமுலோ' படத்தை இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'குண்டுர் காரம்' திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில், இந்த படத்திலிருந்து நடிகை பூஜா ஹெக்டே விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பூஜா ஹெக்டேவிற்கு போதிய கால்சீட் இல்லாததால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் 'வாத்தி' பட நடிகை சம்யுக்தா இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    பூஜா ஹெக்டே- சம்யுக்தா

    சமீபத்தில் 'குண்டுர் காரம்' திரைப்படத்தில் இருந்து தமன் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகேஷ் பாபு நடித்துள்ள திரைப்படம் 'குண்டுர் காரம்'.
    • இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குண்டுர் காரம்'. இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், 'குண்டுர் காரம்' திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஆந்திராவில் உள்ள குண்டூர் பகுதியில் நடைபெற்றது. இதில் கட்டுக்கடங்காத ரசிகர்கள் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். ஆனால் ரசிகர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு நாற்காலிகளை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

    இதை பார்த்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தடியடி நடத்தினர். கூட்ட நெரிசலில் பழைய குண்டுர் காவல் நிலையத்தின் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கட ராவின் கால் முறிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


    ×