search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் அட்டவணை"

    • சிறுவன் ஒதுக்கி உள்ள நேரங்கள் பார்வையாளர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    • காலை எழும் நேரத்தில் இருந்து இரவு தூங்குவது வரையிலான செயல்களுக்கு சிறுவன் ஒதுக்கும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    6 வயது சிறுவனின் அட்டவணை டுவிட்டரில் வைரலாகி வருகிறது. லைபா என்பவர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், தனது உறவினர் ஒருவரின் 6 வயது மகனின் தினசரி கால அட்டவணையை பகிர்ந்துள்ளார். அதில், அந்த சிறுவனின் தினசரி வழக்கங்கள் அட்டவணையில் நேர்த்தியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நேரத்தை நிர்வகிப்பதற்காக சிறுவனின் முயற்சி பாராட்டை பெற்றுள்ளது. ஆனாலும் அதில் சிறுவன் ஒதுக்கி உள்ள நேரங்கள் பார்வையாளர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அதாவது, காலை எழும் நேரத்தில் இருந்து இரவு தூங்குவது வரையிலான செயல்களுக்கு சிறுவன் ஒதுக்கும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், படிப்பதற்காக மதியம் 2.30 மணி முதல் 2.45 மணி வரை என வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கி உள்ளான். ஆனால் காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சண்டையிடுவதற்கான நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று தாத்தா, பாட்டியுடன் மாம்பழம் சாப்பிடுவதற்கு மற்றும் சில வேடிக்கையான விஷயங்களுக்காகவும் நேரத்தை குறிப்பிட்டுள்ளான். இந்த பதிவு 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அதை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    ×