என் மலர்
நீங்கள் தேடியது "விடுதலை-2"
- சென்னையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.
- வெற்றிமாறன், விஜய்யுடன் இணைவது குறித்து பேசியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது சூரியின் விடுதலை-2 படத்திலும் சூர்யாவின் வாடிவாசல் பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது விஜய்யுடன் இணைவது குறித்து வெற்றிமாறன் பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய், அசூரன் பட வசனத்தை பேசியது எனக்கு சந்தோஷம். விஜய்யுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். தற்போது விஜய் இரண்டு படங்களில் பிசியாக இருக்கிறார், நானும் விடுதலை-2 மற்றும் வாடிவாசல் படங்களில் பிசியாக இருக்கிறேன். இப்படங்களின் பணிகள் முடிந்த பிறகு கண்டிப்பாக விஜய்யுடன் விரைவில் இணைவேன் என்றார்.
- தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்.
- சூர்யா நடித்துள்ள ‘கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் 'விடாமுயற்சி' படத்தில் நடித்திருக்கிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'விடாமுயற்சி' படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
சூர்யாவின் திரை பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் 'கங்குவா', 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைக்கு வர இருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது விடுதலை இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்ற புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அடுத்ததாக நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார் கவின். இந்த படத்திற்கு `கிஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படமும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் `எல்ஐசி'. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் தவிர எஸ்.ஜே.சூர்யா, கிரித்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படமும் தீபாவளி ரேசில் இணையும் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த 5 படங்களும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஐந்து படங்கள் ரிலீசாவது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார்.
- கொட்டுக்காளி, விடுதலை-2 ஆகிய படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.
வெண்ணிலா கபடி குழு படத்தில் புரோட்டா சாப்பிடும் நகைச்சுவை காட்சியில் நடித்து பிரபலமானவர் சூரி. தொடர்ந்து பல படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வந்தார்.
இந்நிலையில் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை அடைந்தது.

அடுத்ததாக சமீபத்தில் வெளியான கருடன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக இவரது நடிப்பில் கொட்டுக்காளி, விடுதலை-2 ஆகிய படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.

இந்நிலையில் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சூரி சென்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்சில் கூலிங் கிளாஸ் போட்டபடி கால் மேல் கால் போட்டுக்கொண்டு சூரி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு, இது நம்ம புரோட்டா சூரியா? என கேட்டு ஏராளமான பார்வையாளர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காமெடியனாகவும், கதாநாயகனாகவும் என்னை மக்கள்தான் கொடுத்தார்கள்.
- விடுதலை-2 படம் டிசம்பர் 20-ந்தேதி வெளியாக உள்ளது.
திருச்செந்தூர்:
நடிகர் சூரி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்தடுத்து சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். விடுதலை-2 படம் டிசம்பர் 20-ந்தேதி வெளியாக உள்ளது. உலகின் தலை சிறந்த மேதைகளில் இளையராஜாவும் இருப்பார். 83 வயதிலும் பாடல் எழுதி இசை அமைத்து பாடி உள்ளார்.

தமிழ் சினிமாவில் அவர் இருக்கும் இந்த கால கட்டத்தில் நானும் உள்ளேன் என்பதை பாக்கியமாக நினைக்கிறேன். இறைவன் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் இளையராஜாவுக்கு கொடுத்து இன்னும் பல படங்களில் அவர் இசையமைக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.
அற்புதமான வாழ்வியலை கொடுக்கக் கூடிய இசையமைப்பாளர் அவர். காலத்திற்கும் நாம் படித்து கொண்டே இருக்க வேண்டிய புத்தகம் தான் இளையராஜா.
கதாநாயகனாக நன்றாக தான் போய்க்கொண்டிருக்கிறது. காமெடியனாகவும், கதாநாயகனாகவும் என்னை மக்கள்தான் கொடுத்தார்கள். விடுதலை பாகம்-2 படத்துக்கு பிறகு வெற்றிமாறன் பங்களிப்பில் ஒரு படத்திற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளது.

கங்குவா திரைப்படம் நன்றாக உள்ளது. எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு எளிய ரசிகனாக குடும்பத்துடன் சென்று பார்த்தேன். 4 பேர் சொல்லும் எதிர்மறை கருத்துக்களை பார்க்க வேண்டாம். நிறைய பேர் கூறும் நல்ல கருத்துக்களை பார்க்க வேண்டும்.
கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்கள். அந்த எண்ணத்திற்கு நான் தலை வணங்குகிறேன். பல பேருடைய உழைப்பு இந்த படத்தில் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள்.
எதிர்மறை விமர்சனம் செய்தால்தான் வரவேற்கப்படுகிறது என நினைத்து சிலர் தன்னை பிரபலப்படுத்தி கொள்ள காமிரா முன்பு எதிர்மறை விமர்சனத்தை செய்து வருகின்றனர்.
தனுஷ், நயன்தாரா விவகாரத்தை நான் பார்க்க வில்லை. அது இரண்டு பேருக்கும் உட்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.