search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் சொத்து"

    • திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் அபகரிப்பு செய்யப்பட்டது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சார்பதிவாளர் சிவசாமி உட்பட 16 பேரை கைது செய்தனர். கோவில் இடத்தை தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார், மாவட்ட பதிவாளர் ரமேஷ், தாசில்தார்கள் பாலாஜி, ரமேஷ்கண்ணா ஆகியோர் மீதும் சட்டப்படி எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி இன்று காலை வழுதாவூர் சாலையில் திராவிடர் விடுதலைக்கழகம் லோகு அய்யப்பன் தலைமையில் பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஜான்குமார் எம்.எல்.ஏ., வருவாய்த்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 

    ×