search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலம்பு செல்வர் மபொசி"

    • கள் இறக்குவதற்கு தமிழகத்தில் அனுமதி வழங்க வேண்டும்.
    • நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 118-வது பிறந்த நாள் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் கே.வி.எஸ். சரவணன் தலைமையில் தியாகராய நகரில் கொண்டாடப்பட்டது.

    பிறந்தநாளையொட்டி ம.பொ.சி. உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சங்க நிறுவனர் டாக்டர் கே.வி.எஸ்.சரவணன் பேசுகையில், தமிழகத்தை சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரரும் தமிழறிஞருமான சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் அரசு அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

    பனைத்தொழில் பாதிப்படையும் வகையில் பதனீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கள் இறக்குவதற்கு தமிழகத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் எம்.பி.மணி, அன்பழகன், உதயா, ஜெயசங்கர், உதய சங்கர், மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வடசென்னை, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×