என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நட்சத்திர தோஷம்"
- சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு.
- கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம்.
கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப் பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.
சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு. கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம். மயிலாடுதுறை அருகே உள்ள காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கிருத்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வளம் பெறலாம் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கிருத்திகை நட்சத்திரப் பெண்கள் புண்ணிய நதிகள் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திர நாட்களில் இந்தக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளிக் கிழமை அதிக நன்மைகள் தரும் தினமாக அமைந்திருக்கின்றது.
இந்நாட்களில் கிருத்திகை நட்சத்திரத்தின் நல்ல மின் காந்த கதிர்வீச்சுகள் பூமியில் படரும் அது மிகவும் நல்லது. அத்தி மரம் கிருத்திகை நட்சத்திரத்திற்கு உரிய மரமாகும். இந்த மரத்தின் உடலில் பால் நிரம்பி இருக்கும். அந்தப் பால் கார்மேகங்களை தன் பக்கம் இழுக்கும் குணம் கொண்டது.
இதன் குச்சிகளை எரித்தால் அதன் புகை மழை பொழியும் கருமேங்களை வரவழைக்கும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.
கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள் மனித உடலில் படும் போது பல வகையான உடல் மாற்றம், மன மாற்றம் நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 20 நிமிடம் கட்டிப்பிடிக்கலாம் அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.
கிருத்திகை தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்புப் பூவும் நீரும் கைகளில் ஏந்தி சூரிய பகவானே எனது தோஷத்தைப் போக்கியருளும் என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கவும். 108 தடவைகள் இதனை செய்யலாம்.
கோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமைத் தானம் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு சிவப்புப் பூமாலை அணியலாம். சிவப்புப் பூவால் அர்ச்சித்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத்தரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்