என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் குழந்தை சாவு"
- ராதிகாகுமாரி வலது பாதங்காலில் பாம்பு கடித்து விட்டது.
- சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
பீகார் மாநிலம் முஜாபர்பூர் மாவட்டம், ராம்பூர், பிரயாகை பகுதியை சேர்ந்தவர் ரினாதேவி (39). இவரது கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
ரினாதேவி ஈரோடு மாவட்டம், ஈங்கூர், குட்டப்பாளையம் பகுதியில் தனது குழந்தைகளுடன் தங்கி சிப்காட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இவரது மகள் ராதிகா குமாரி (10) எழுதிங்கள் பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை ராதிகாகுமாரி வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது அவரது வலது பாதங்காலில் பாம்பு கடித்து விட்டது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் உயர் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை ராதிகாகுமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்றிரவு பெண் குழந்தைக்கு திடீர் என உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- அங்கு மருத்துவ பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளை சத்தமிட்டு கூப்பிட்டுள்ளார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், சிவாடி அருகே உள்ள ஊத்துப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது30) விவசாயி. இவருக்கும், ஆனந்தி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆனந்தி பிரசவத்திற் காக, பாளையம்புதூர் அரசு சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆனந்திக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பெண் குழந்தை பிறந்த நாளன்று இருந்து சேர்க்கப் பட்ட மருத்துவமனை யிலேயே தாயும், குழந்தையும் அங்கேயே சிகிச்சையில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை பெண் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியதாக கூறப்படுகிறது. நேற்றிரவு பெண் குழந்தைக்கு திடீர் என உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது பிரசவ வார்டில் இருந்த குழந்தையின் தாயார் ஆனந்தி, அங்கு மருத்துவ பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளை சத்தமிட்டு கூப்பிட்டுள்ளார். ஆனால் அப்போது யாரும் அவரது சத்தத்தை கேட்டு பணியில் இருந்தவர்கள் குழந்தைக்கு சிகிச்சை வழங்க வரவில்லை என கூறப்படுகிறது.
இரவு 11.30 மணி என்பதால், பிரசவ வார்டை பூட்டி விட்டு, மருத்துவர்கள் யாரும் இல்லாமல், ஒரு நர்சு மட்டுமே அவரது அறையில் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அப்போது மருத்துவ பணியில் இருந்தவர்கள் யாரும், பிரசவ வார்டில் உள்ள பெண் குழந்தைக்கு சிகிச்சை வழங்க யாரும் வராததாலும், இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததாலும் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மந்தப்பட்ட மருத்துவமனை முன்பு இன்று காலை திரண்டு, அலட்சிய போக்கால் பெண் குழந்தையின் இறப்பு காரணமான மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினர் விரைந்து வந்து, பாதிக்க ப்பட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சமரச பேச்சு வார்த்தைக்கு பின், குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக சம்மந்தப்பட்ட துறையினர் உறுதியளித்த பின்னர், இறந்த பெண் சிசுவின் சடலத்தை பெற்றோர்கள் வாங்கி சென்றனர். பிறந்த மூன்று நாட்களே ஆன பெண் குழந்தை பிரசவித்த மருத்துவமனையிலே இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்