search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை பள்ளிகள்"

    • பள்ளிகளுக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாடு முழுவதும் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவமங்கள் அதிகரித்து வருகுிறது. குறிப்பாக, விமானங்கள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில், சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    அஸ்தினாபுரம் அருகே உள்ள என்.எஸ்.என் மற்றும் ரோசரி ஆகிய பள்ளிகளுக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகளுக்கு விரைந்த பெற்றோர் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

    மாணவர்கள் அனைவரும் வெளியே அனுப்பிய நிலையில், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் பள்ளியை ஆய்வு செய்து வருகிறது.

    வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உத்தேச கால அட்டவணை மாணவர்கள் நலன்கருதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
    • 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15 முதல் 27-ந் தேதி வரை நடைபெறும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.மார்ஸ், அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் (2023-24) பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதற்கான உத்தேச கால அட்டவணை மாணவர்கள் நலன்கருதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15 முதல் 27-ந் தேதி வரையும், அரையாண்டுத் தேர்வுகள் டிச.11-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும் நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்புக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 3-வது வாரத்தில் நடத்தப்படும்.

    இது தவிர 12, 11 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான அலகு மற்றும் திருப்புதல் தேர்வுக்கான, 6 முதல் 9-ம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    இதைப் பின்பற்றி மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த தேவையான நடவடிக்கைகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×