என் மலர்
நீங்கள் தேடியது "ஐடென்டிட்டி"
- நடிகை திரிஷா தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்து வருகிறார்.
- இவர் தற்போது 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் திரிஷா அடுத்ததாக மலையாள நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளார். அதாவது, அகில் பால்-அனஸ்காஸ் ஆகிய இரண்டு இயக்குனர்களும் இணைந்து இயக்கும் திரைப்படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
இதற்கு ரசிகர்கள் திரிஷா, டோவினோ தாமஸ்சைவிட 6 வயது பெரியவர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
- திரிஷா தனது காட்சிகள் அனைத்திலும் விறுவிறுப்பாக நடித்துள்ளார்.
மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் திரிஷா.
சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் திரிஷா தற்போது மலையாள நடிகர் டோவினோ தாமசுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அகில்பால் - அனஸ்கான் என 2 இயக்குனர்கள் இணைந்து இயக்கிய புதிய படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் டோவினோ தாமசுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் கடைசியாக '2018' படத்தில் நடித்திருந்தார். கேரளாவில் வெள்ளம் வந்தபோது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்துப் பேசிய படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் கேரளா திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது 'ஐடென்டிட்டி' படத்தில் டோவினோ தாமஸ் - திரிஷா ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது இதில் திரிஷா தனது காட்சிகள் அனைத்திலும் விறுவிறுப்பாக நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இப்படத் தயாரிப்புகுழு இது தொடர்பாக திரிஷாவை பாராட்டி உள்ளது. இப்படத்தில் விரைவாக காட்சிகளில் நடித்து முடித்ததற்கு திரிஷாவுக்கு படக்குழு நன்றி தெரிவித்தது. மேலும் படத்தின் இயக்குனர் அகில் பால், "உங்களுடன் பணிபுரிவது இனிமை வாய்ந்த ஒரு அனுபவமாக இருந்தது என குறிப்பிட்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி.
- இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.
டொவினோ தாமஸ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் ஏ.ஆர்.எம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐடென்டிட்டி.
இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அகில் பால் மற்றும் அனாஸ் கான் இணைந்து இயக்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு டொவினோ நடிப்பில் வெளியான ஃபாரன்சிக் திரைப்படத்தை இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் வினய் ராய், மந்திர பேடி, ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராகம் மூவீஸ் மற்றும் கான்ஃபிடண்ட் க்ரூப் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தை ஜனவரி 2 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டொவினோ தாமஸ் நடித்துள்ள திரைப்படம் ஐடென்டிட்டி.
- திரைப்படம் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டொவினோ தாமஸ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் ஏ.ஆர்.எம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டொவினோ தாமஸ் நடித்துள்ள திரைப்படம் ஐடென்டிட்டி.
இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை அகில் பால் மற்றும் அனாஸ் கான் இணைந்து இயக்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு டொவினோ நடிப்பில் வெளியான ஃபாரன்சிக் திரைப்படத்தை இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் வினய் ராய், மந்திர பேடி, ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ஜுன் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராகம் மூவீஸ் மற்றும் கான்ஃபிடண்ட் க்ரூப் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

திரைப்படம் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் இதுவரை உலகளவில் 23.20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டை தற்பொழுது வசூலித்துள்ளது. திரைப்படத்தின் பட்ஜெட் 15 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு சம்பவத்தை நேரில் பார்த்த திரிஷா அந்த குற்றவாளியை கண்டு பிடிக்க காவல் அதிகாரிக்கு உதவுகிறார். டொவினோ தாமஸ் குற்றவாளிகளின் புகைப்படங்களை வரையும் ஒரு ஆர்டிஸ்டாக உள்ளார். யார் அந்த குற்றவாளி? அதற்கு பின்னணி என்ன? குற்றவாளியை கண்டுப்பிடித்தார்களா? என்பதே படத்தின் மையமாக எடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்