என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஞ்சனா"

    • தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியான “ராஞ்சனா” படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
    • இப்படத்தில் இடம்பெற்ற ஹூவா மை தேரா பாடலுக்கு ஒரு இளம் தம்பதி நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    நடிகர் தனஷ் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இந்தி படம் "ராஞ்சனா". இப்படத்தில் இடம்பெற்ற ஹூவா மை தேரா பாடலுக்கு ஒரு இளம் தம்பதி நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடகர் ஜஸ்விந்தர் சிங் மற்றும் ஷிராஸ் உப்பல் ஆகியோர் பாடியிருந்த இந்த பாடல் ஹிட் ஆகி இருந்தது.

    இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இந்த பாடலுக்கு சக்தி கோக்ரு-முகன் கோத்தாரி என்ற இளம்ஜோடி நடனமாடிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது. இந்த வீடியோ பலரையும் கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். 

    • இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார்.
    • தனது 50-வது படமான 'ராயன்' படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். மேலும், தனது 50-வது படமான 'ராயன்' படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். ராயன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் தாண்டி இந்தியிலும் 'ராஞ்சனா', 'ஷமிதாப்', 'அத்ராங்கி ரே' ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இந்தியில் மீண்டும் ஆனந்த் எல்.ராயுடன், தனுஷ் இணைந்து தேரே இஷ்க் மெயின் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் ராஞ்சனா படத்தைப் போல் ஒரு காதல் காவியமாக உருவாகவுள்ளது.

    ஆனந்த எல் ராய் இயக்கத்தில் தனுஷ் இப்படத்தின் மூலம் மூன்றாவது முறை இணைந்து பணியாற்றவுள்ளார்.

    தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தொடங்கலாம் என்றும், முதல்கட்டமாக வாரணாசியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

     

    இந்நிலையில், காதலை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×