search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா பஸ்"

    • அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன் கோரிக்கை
    • பேச்சிப்பாறை, திற்பரப்பு பகுதிகளில் தினமும் 2 கேரளா பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட நிர்வாகத்தினருக்கு, அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை, திற்பரப்பு பகுதிகளில் தினமும் 2 கேரளா பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அதில் திற்பரப்பில் இருந்து செல்லும் பஸ் திருவனந்தபுரம் காயங்குளம் வரைக்கும் பேச்சிப்பாறையில் இருந்து செல்லும் பஸ் திருவனந்தபுரம் பஸ் நிறுத்தம் வரைக்கும் சென்று கொண்டு இருந்தது.

    குலசேகரம், பேச்சிப்பாறை, திற்பரப்பு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள், தேன் பெட்டி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் இங்கிருந்து கேரளாவிற்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் உறவுகாரர்கள் கேரளாவில் தான் உள்ளனர்.

    கேரளாவில் உள்ள உயர்தர தனியார் ஆஸ் பத்திரிகளுக்கு சிகிச்சை பெறுவதற்கும் இங்கியிருந்து தான் அதிக அளவு பொது மக்கள் கேரளாவுக்கு சென்று வருகிறார்கள். ஏழை நடுத்தர மக்கள் இங்கிருந்து செல்வதற்கு கேரளா பஸ்சில் தான் பயணித்து வந்தார்கள். இந்த 2 பஸ்களும் கொரோனா காலத்தில் நிறுத்திவிட்டார்கள். அதன் பிறகு இதுவரைக்கும் கேரளா பஸ்கள் இயக்கப்படவில்லை.

    தற்போது தமிழக பேருந்துகள் பேச்சிப்பாறை, திற்பரப்பில் இருந்து தலா ஒரு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் கேரளா போக்குவரத்து துறையிடம் பேசி நிறுத்தப்பட்ட 2 பஸ் களை மீண்டும் பேச்சிப்பாறை, திற்பரப்பு ஆகிய பகுதிகளுக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×