search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமன்வெல்த் பளுதூக்குதல்"

    • ஆண்கள் சீனியர் பிரிவில் சுபம் தோட்கர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    • ஜூனியர் பிரிவில் சித்தாந்தா 260 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்தார்.

    காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. சீனியர், ஜூனியர், இளையோர் என மூன்று பிரிவினருக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    இன்று 61 கிலோ எடைப்பிரிவு ஆண்களுக்கான சீனியர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சுபம் தோட்கர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அவர், இன்றைய இறுதிப்போட்டியில் மொத்தம் 259 கிலோ (ஸ்னாட்ச் பிரிவில் 115, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 144 கிலோ) எடையை தூக்கி முதலிடத்தை பிடித்தார்.

    ஜூனியர் பிரிவில் சித்தாந்தா 260 கிலோ (112kg+148kg) எடையை தூக்கி சாதனை படைத்தார். இறுதிச் சுற்றில் சக வீரர் சங்கர் லபுங்கை 12 கிலோ எடை வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    மகளிர் பிரிவில் இந்தியாவின் பாபி ஹசாரிகா 189 கிலோ (84+105) எடையை தூக்கி தங்கம் வென்றார். கடந்த முறை வெள்ளி வென்ற நிலையில் இந்த முறை தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் மால்டா நாட்டின் தெனிஷயி வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் ஆப்பிரிக்க வீராங்கனை அன்னேக் ஸ்பைஸ் வெண்கலம் வென்றார். 

    ×