search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்கை"

    • மிக பிரமாண்டமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று நவராத்திரி.
    • சரஸ்வதி தேவிக்கு கூத்தனூரில் மட்டுமே தனிக்கோவில் உள்ளது.

    வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை போலவே, மிக பிரமாண்டமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று, நவராத்திரி. இந்த விழாவில் துர்க்கையை முன்னிறுத்தி அப்பகுதி மக்கள் வழிபாட்டை நடத்துவார்கள். தமிழ்நாட்டிலும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும், வட மாநிலங்களில் உள்ள ஆர்ப்பாட்டம் இங்கே இருக்காது என்றாலும், தெய்வீகமான வழிபாட்டு முறையை தமிழ் மக்கள் கையாளுவார்கள்.

    புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரையான ஒன்பது நாட்கள், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியர் என்று அழைக்கப்படும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரை வழிபாடு செய்ய வேண்டும்.

    முதல் மூன்று நாட்கள் பார்வதி (துர்க்கை) வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் முறையாக நடத்தப்படும்.

    துர்கா தேவி

    நெருப்பின் ஒளி பொருளிய அழகும், ஆவேசப்பார்வையும் கொண்டு வீரத்தின் அடையாளமாகத் திகழும் தெய்வம் இவர். இச்சா சக்தியாக போற்றப்படும் இந்த துர்க்கையை, 'கொற்றவை', 'காளி' என்ற பெயர்களிலும் வழிபாடு செய்வார்கள். போர் வீரர்களின் தொடக்கம் மற்றும் முடிவின் வழிபாட்டுக்குரிய இந்த அன்னை, சிவ பிரியை ஆவார். இந்த அன்னை, மகிஷாசூரன் என்ற அரக்கனுடன் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக போரிட்டாள். இந்த ஒன்பது நாட்களையே நவராத்திரியாக கொண்டாடுகிறோம்.

    10-வது நாளில் அவளுக்கு வெற்றி கிடைத்தது. அந்த நாளை நாம் 'விஜயதசமி' என்று வழிபடுகிறோம். வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜூவாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை. தீப துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை ஆகியோர் துர்க்கையின் அம்சங்கள். இவர்களை "நவ துர்க்கை' என்று அழைப்பார்கள்.

    லட்சுமி தேவி

    செல்வத்தின் தெய்வமாக விளங்கும் லட்சுமி தேவி. மலரின் அழகும், அருள் பார்வையும் கொண்டு அருள்பாலிப்பவர், கிரியா சக்தியாக இருந்து செயல்படுபவர். விஷ்ணு பிரியையான இந்த தேவி, திருப்பாற்கடலை கடைந்தபோது, அமிர்தம் தோன்றுவதற்கு முன்பாக வெளிப்பட்டவள். இந்த அன்னையும் அமிர்தம் போன்றவள் தான். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பார் இந்த தேவி.

    இந்த தேவியை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கும். செல்வ வளம் தந்து. வறுமையை அகற்றும் சக்தி பெற்றவள். லட்சுமி தேவியின் அம்சமான ஆதி லட்சுமி, மகாலட்சுபி, தன லட்சுமி, தானிய லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி ஆகிய 8 பேரும் "அஷ்ட லட்சுமிகள்' என்று அழைக்கப்படுகின்றனர்.

    சரஸ்வதி தேவி

    கல்வியின் தெய்வமாக போற்றப்படும் சரஸ்வதி தேவி, அமைதியான பார்வையும், வைரத்தின் ஜொலிப்பும் கொண்டவர். ஞான சக்தியாக அருளும் இந்த தேவிக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் மட்டுமே தனிக்கோவில் அமைந்திருக்கிறது. பிரம்ம பிரியையான இந்த தேவியை, நவராத்திரி விழாவின் போது, மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் நேரத்தில் வழிபாடு செய்வது முறையாகும்.

    நவராத்திரி நாளில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபடும் நாளை, 'சரஸ்வதி பூஜை' என்கிறோம். குழந்தைகளுக்கு இந்த நாளில் கல்வியை தொடங்குவதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த நாளில் தொடங்கும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்த ரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய 8 பேரும் "அஷ்ட சரஸ்வதிகள்" என்று போற்றப்படுகின்றனர்.

    • சரபர் வழிபாடு சத்ருக்களை அழித்திடும்.
    • சூரியன், சந்திரன் மற்றும் அக்னியே சரபரின் மூன்று கண்கள்.

    சரபேஸ்வரரை ஞாயிற்றுகிழமை ராகு கால வேளையில் (மாலை 4.30-6) வழிபடுவது விசேஷ பலனைத் தரும். சரபர் பைரவர் அம்சம்.11 நெய்தீபம் ஏற்றி வணங்குவது விஷேசம்.

    ராஜகோபுரத்தின் வாசலில் காற்று வலிமையாக வீசுவதை உணரமுடிந்தது...

    சரபேசர் : 1.சிவன் , 2. விஷ்ணு , 3. காளி(பிரத்யங்காரா தேவி), 4. துர்க்கை(சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம்தான் சரபேசர்.

    எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், இரண்டு இறக்கைகள் கொண்டு பெரும் கோபத்துடன், ஆராவாரத்துடனும் நரசிம்மத்தின் எதிரில் தோன்றி, அசுரனின் ரத்தம் குடித்து மிகச் செருக்குடன் வந்த நரசிம்மத்தின் ஆவி அடங்கும்படி செய்த, பகைவர் குலத்தை அழிக்கும் சரப மூர்த்தி.

    இரணியனது வரத்தின் படியே,அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரணியனை வதம் செய்தார். அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார்.

    நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார்.

    பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் சிவன் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.

     சரபேஸ்வரர் என்ற சொல்லுக்கு எட்டு கால்களை கொண்ட பறவை, இரண்டு தலைகளை கொண்ட வடிவம் எனப் பொருள்.

    பட்சிகளின் அரசன். சிங்கத்தையே வெல்லும் ஆற்றல் கொண்டது சரபம். இத்திருவடிவம் "சிம்மக்ன மூர்த்தி", "சிம்ஹாரி", நரசிம்ம சம்ஹாரர்" என்றும் அழைக்கப்படுகின்றது.

    பறவை போன்ற பொன்னிறம், இரு இறக்கைகள், சிவப்பேறிய கண்கள் இரண்டு, கூரிய நகங்களுடன் கூடிய சிங்கத்தை போன்ற கால்கள் நான்கு. மனித உடல். கிரீடம் தரித்த சிங்க முகம். தந்தங்களை போன்ற கோரைப் பற்கள் என பயங்கர உருவமே சரபர்.

    சூரியன், சந்திரன் மற்றும் அக்னியே சரபரின் மூன்று கண்கள்.

    பிரத்யங்கரா எனும் காளியும், துர்க்கையுமே இறக்கைகள்.

    இந்திரனே நகங்கள். காலனே தொடைகள்.

    சரபர் வழிபாடு சத்ருக்களை அழித்திடும்.

    தீரா பிணிகள், குழந்தைப் பேறு, பில்லி சூனிய தொல்லைகள் போன்றவற்றிற்கு நிவர்த்தி. சரப மூல மந்திரத்தினை 100 அலது 1000 முறை ஜெபித்து, அபிஷேக ஆராதனைகள் செய்தால் வாதம், சூலை போன்ற கொடிய நோய்கள் தீரும். மலட்டுத் தன்மை நீங்கும்.

    சரப காயத்ரி மந்திரம் ஜெபிப்பது பாம்புகளிடமிருந்து காத்திடும்.

    மிக அகோரமாக எல்லா மிருகங்களும் இணைந்த உருவம் திடீரென தன் முன் தோன்றியவுடன் நரசிம்மருக்குகோபம் போய் பயம் வந்தது.

    அந்த பயத்தினால் சரபேஸ்வரை தாக்க முற்பட்டபோது, சரபோஸ்வரின் ஸ்பரிசத்தால் நரசிம்மர் நாராயணானார்.

    சுவாமி நடுக்கம் தீர்த்த பெருமான் என்ற பொருளில் கம்பகரேஸ்வரர் என்ற திருப்பெயருடனும், அம்பாள் அறம்வளர்த்தநாயகி, தர்மசம்வர்த்தினி என்ற திருப்பெயருடனும் அருள் வழங்கும் சிறப்புடையது.

    இரணியனுடைய குருதியைப் பருகிய நரசிம்மம் அறிவு திரிந்து உலகம் அனைத்தையும் அழிக்கத் தொடங்கியபோது இத்தலப் பெருமான் சரபப் பறவை உருக்கொண்டு அதன் கொடுமையை அடக்கியதால் சரபேஸ்வரர் என்ற பெயருடன் தனி மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

    கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் திருபுவனத்தில் ஆலயம் அருமையான அமைப்புடன் அமைந்துள்ளது.

    • துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம்.
    • குலதெய்வ வழிபாட்டு முறை பற்றி கிராமங்களில் வாழ்பவர்களுக்குதான் தெரியும்.

    பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியை பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுவார்கள்.

    குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள்.

    குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோவிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளை தொடங்குவது வழக்கம்.

    சுப நிகழ்ச்சிகளை தொடங்கு பவர்கள் உடனே குல தெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது செலுத்தி விடுவது வழக்கம்.

    சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடரா மல் விட்டு விடுவர். சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எது என்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு. இதனால் சோதனைகள் ஏற்படும்போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்த கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர்.

    குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைக்கலாம். அவர்கள் தெய்வ அருளினால் உங்களுக்கு வழிகாட்டலாம். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம்.

    குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றியமையாதது. இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது, ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

    குலதெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை என்ன செய்வது என்று கவலைப்படாதீர்கள்.

    கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவிலுக்கு சென்று, அந்த துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும்.

    கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாராம்.

    குல தெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்று விக்கப்பட்டதோ, ஆகாசத்தில் இருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர் களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரிய வர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.

    வெள்ளாளர்களின் வரலாறு சொல்லும் பழைய நூல்களில் எல்லாம் நீலி கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தின் ஈடு இணையற்ற வரலாற்று சின்னங்களில் குலதெய்வங்களும் ஒன்று. தமிழர்களின் பழங்கால பண்பாடுகளை எடுத்து சொல்ல இன்னமும் வரலாற்று ஆய்வாளர்கள் குலதெய்வ வழிபாட்டை நம்பி இருக்கிறார்கள்.

    சைவர்களும், வைணவர்களும் சில குலதெய்வங்களை சிவனாகவும், விஷ்ணுவாகவும் மாற்றி விட்டாலும் பெரும்பாலான குலதெய்வங்கள் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவற்றின் மகிமை உணர்ந்து வருடம் தோறும் குலதெய்வ வழிபாடு செய்வது மக்களிடையே பெருகி வருகிறது.

    மதுரைவீரன், கருப்பு, பெரியசாமி, செல்லாயி, மருதாயி என நம் முன்னோர்களின் பெயர்கள் அனைத்தும் குலதெய்வத்தினை சார்ந்தே இடப்பட்டிருக்கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த குலதெய்வ வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் பற்றி கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்குதான் தெரியும்.

    • `து, உ, ரு, க, ஆ' என்ற எழுத்துக்களின் கூட்டு உச்சரிப்பில்தான் `துர்கா' என்ற திருநாமம் வெளிப்படுகிறது.
    • துர்க்கையை பூஜிக்க ராகு காலமே மிகச்சிறந்த நேரம் என்பது சித்தர்கள் கண்ட வழி.

    `து, உ, ரு, க, ஆ' என்ற எழுத்துக்களின் கூட்டு உச்சரிப்பில்தான் `துர்கா' என்ற திருநாமம் வெளிப்படுகிறது. துர்க்கா என்னும் திருநாமம் அசுரர்-தடங்கல் வியாதி- பாவம் மற்றும் பயத்தை போக்கிடும் சக்தி வாய்ந்த எழுத்துக் கோர்வையாகும்.

    ராகு காலம் என்பதும், எமகண்டம் என்பதும் எந்த காரியமும் செய்யக்கூடாத நேரமென்றும், அந்த நேரங்களில் மேற்கொள்ளப்படும் காரியம் வெற்றி பெறாது என்றும் நம்மிடையே ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. எனவேதான், துர்க்கைக்கு ராகு கால பூஜை என்றதுமே பலருக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால் துர்க்கையை பூஜிக்க ராகு காலமே மிகச்சிறந்த நேரமென்பது சித்தர்கள் கண்ட வழி.

    மாபெரும் பிரபஞ்ச சக்தியே துர்க்கை வடிவில் விளங்குகிறது. ராகு என்பதும், கேது என்பதும்கூட மிகச்சக்தி வாய்ந்த அம்சங்கள்தான். கிரகண காலங்களில் சூரியனையும், சந்திரனையும் இவை பிடிப்பதை அறிவோம்.

    இவ்வாறு கிரகண சமயங்களில் மட்டுமின்றி, ஒவ்வொரு கிழமையும், அந்த கிழமைக்குரிய கிரகத்தை குறிப்பிட்ட சில காலம் ராகுவும், கேதுவும் பிடிக்கின்றன. இப்படி பிடிக்கும் காலங்களே தினந்தோறும் ராகு காலம் என்னும் எமகண்டம் என்றும் நிர்ணயிக்கப்படுகின்றன.

    சக்தி வாய்ந்த ராகு, மகாசக்தியான துர்க்கையைப் பூஜித்து பலன் அடைந்ததாக நமது புராணங்களில் சான்றுள்ளது. எனவே ராகு காலத்தில் நாமும் துர்க்கையை வழிபட அதற்கு கைமேல் பலன் கிட்டும்.

    சக்தியில் நல்ல சக்தி, தீயசக்தி என்ற பேதம் இல்லை. எப்படி பயன்படுத்தப்படுகிறதோ, அதைப் பொறுத்தே சக்தியானது நல்ல சக்தியாகவோ, தீய சக்தியாகவோ பரிணாமிக்கிறது.

    ஆகவேதான் ஒவ்வொரு நாளும் மகா சக்தியான துர்க்கையை அந்த நாளுக்குரிய கிரகத்தை ராகு பீடிக்கும் நேரமான ராகு காலத்தில் பூஜை செய்வோமானால் அந்த பூஜைக்கு மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையை விட, அதிக அளவு செயல்வேகம் இருக்கும்.

    மற்ற நாட்களை விட, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜைக்கு உடனடி பலன் கிடைப்பதை சித்தர்களும் உபாசகர்களும் அனுபவப்பூர்வமாக கண்டறிந்து உள்ளனர். ஏனெனில், செவ்வாய்க்கிழமைக்குரிய அங்காரகன், துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு பலன் அடைந்தவனாவான்.

    செவ்வாய்க்கிழமைக்கு மங்கள வாரம் என்பது ஒரு பெயராகும். மங்களகரமான மங்கள வாரத்தில் மஞ்சள் நிறப்பூக்களான தங்கஅரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகிய மலர்களை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிற வாழைப்பழம், பலாச்சுளை, மாம்பழம், மஞ்சள் வண்ண வெண்பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்துக்கும் பயன்படுத்தி துர்க்கையை பூஜிக்க வேண்டும்.

    பூஜையின்போது சொல்வதற்கு `ஸ்ரீதுர்க்கா சந்திர கலாஸ்துதி' என்ற தோத்திரமாலை அனைவருக்கும் உதவக்கூடியது.

    தமிழில் `துர்க்காஷ்டகம்' ராகு கால துர்க்காஷ்டகம், `துக்க நிவாரண அஷ்டகம்', ரோக நிவாரண அஷ்டகம் ஆகியவை ஏற்றவையாக இருக்கும். தீபத்திலோ, கடத்திலோ, சித்திரத்திலோ, யந்திரத்திலோ அல்லது இதயத்திலோ துர்க்கையை வைத்து பூஜிக்கலாம்.

    நவக்கிரகங்களில் மிக வலிமை பொருந்திய ராகு பகவான், மங்கள வார ராகு காலத்தில் துர்க்கையை பூஜித்து, மகிழ்ச்சியான முகத்துடனும், நிறைந்த தனத்துடனும் விளங்குவதால்தான் மங்கள வார ராகு காலத்தில் துர்க்கையைப் பூஜை செய்ய வேண்டுமென்று சித்தர்கள் சொல்கிறார்கள்.

    குறிப்பாக ராகு காலப் பிரீத்தி, செவ்வாய் தோஷ நிவர்த்தி, விவாகப் பிராப்தி, பீடைகள் விலகுதல், பகைகள் நீங்குதல், காரிய சித்தி ஆகிய நோக்கங்களுக்காக இப்பூஜை மேற்கொள்வது நல்லது.

    ராகு காலத்தில் திருக்கோயில்களுக்கு சென்று அங்குள்ள துர்க்காதேவியை வழிபடுவது சிறப்பு. நல்ல மஞ்சள் நிறத்துடன் கூடிய எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி இரு கிண்ணங்களாளகவும் எதிர்பபுறம் மடக்கி குழியாக்கி அவற்றை திரி விளக்குகளாக பயன்படுத்த வேண்டும்.

    சுத்தமான நல்லெண்ணை, நெய், தேங்காய் எண்ணை ஆகியவற்றைத்தான் தீபத்திற்கு பயன்படுத்த வேண்டும் ஆயுள் பலத்துக்காக செய்யப்படும் பூஜையின்போது வேண்டுமானால் இலுப்பை எண்ணையைப் பயன்படுத்தலாம்.

    ராகு காலத்தில் துர்க்கை சந்நிதியில் சுவாசினியை (முதிய சுமங்கலி பெண்களை) நமஸ்கரிக்கின்றவர்கள், எல்லா நலன்களையும் பெறுவார்கள். அங்கு சுவாசினிகளுக்கு தாம்பூலமம், தட்சிணையும் வழங்குகிறவர்கள் துர்க்கையின் அருளுக்குப் பாத்திரமாவார்கள்.

    துர்க்கை சந்நிதியில் கன்னிப் பெண்களுக்கு கால்களில் நலங்கிட்டு, கைகளில் வளையலிட்டு, பூச்சூட்டி, புத்தாடை வழங்கிய பூஜிப்பவர்கள் மற்றவர்களால் பூஜிக்க தகுந்த வாழ்க்கையை அடைவார்கள்.

    தில்லை அம்பலவாணர் (நடராஜர் சன்னதி)

    வடகிழக்கில் தெற்கு நோக்கி வெள்ளித்தேர் மற்றும் வாகன மண்டபம் அருகில் அறங்காவலர் அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

    அடுத்து, நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் நடராஜர் அபிஷேகம் திருவாதிரை உற்சவம்- மாணிக்கவாசகர் விழா சிறப்பு சொற்பொழிவுடன் திருவாசகம் ஓதப்பெற்று நடைபெற்று வருகிறது.

    ×