search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துக்கள் மீட்பு"

    • எங்களது தலைமுறைகள் அனுபவித்த இடத்தை மீட்டுத்தர வேண்டும்.
    • பழங்கால சொத்து என்பதால் ராதாகிருஷ்ணனின் எதிர் தரப்பினர் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே திருச்செங்காட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 70). இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார்.

    அதில், தனது பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பெயரில் மடம் இருந்தது. இந்த மடம் மற்றும் அப்பகுதியில் உள்ள இடத்தை நாங்கள் பல தலைமுறையாக அனுபவித்து வந்தோம்.

    இந்த நிலையில் அந்த மடத்தை 1996-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெயரில் வகைமாற்றம் செய்து பெயர்மாற்றம் செய்துள்ளனர். காலப்போக்கில் இதை நான் அறிந்தேன். எனவே எங்களது தலைமுறைகள் அனுபவித்த இடத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர், அதில் தெரிவித்து இருந்தார்.

    இந்த மனு நாகை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையில் விசாரிக்கப்பட்டது. இதில் மூலப்பத்திரம் உள்ளிட்ட சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

    பழங்கால சொத்து என்பதால் ராதாகிருஷ்ணனின் எதிர் தரப்பினர் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.

    ஆனால் ராதாகிருஷ்ணன், தன்னிடம் இருந்த சோழர் கால செப்பு பட்டயத்தை சமர்ப்பித்தார். இந்த செப்பு பட்டயத்தை உதவி கலெக்டர் அரங்கநாதன் தலைமையிலான குழுவினர் அலுவலகத்தில் இருந்த ஆவண குறிப்புகளை வைத்து சோதனை செய்தனர்.

    இதில் ராதாகிருஷ்ணன் கொடுத்த சோழர் கால செப்பு பட்டயத்தை ஆதாரமாக ஏற்று அவரது தரப்பை சேர்ந்தவர்களுக்கு சாதகமாக அரங்கநாதன் தீர்ப்பு வழங்கினார்.

    இதனையடுத்து உரிய முறையில் விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகத்திற்கு ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

    • அறநிலையத் துறை அதிகாரிகள் அதிரடி
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது

    கன்னியாகுமரி, ஜூலை.15-

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 36 சென்ட் பரப்பளவு உள்ள தானிய களஞ்சியம் கன்னியாகுமரி சன்னதி தெருவில் பகவதி அம்மன் கோவில் கலைய ரங்கம் அருகில் அமைந்து உள்ளது. இந்த இடம் தனிப்பட்ட நபர் கையில் பல வருடங்களாக இருந்து வந்தது. இந்த சொத்தை மீட்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    பல வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. தற்போது இந்து சமய அறநிலையத்துறைக்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

    இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அந்த இடத்தை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம் முன்னிலையில் நாகர்கோ வில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப் பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், சுசீந்திரம் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், ஆய்வாளர் சுஜித், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை சீல் வைத்து பூட்டி கையகப்படுத்தினர்.

    இந்த சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.18 கோடி ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சொத்தை இந்து சமய அறநிலைய துறையினர் கையகப்படுத்தும் போது கன்னியா குமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது

    ×