என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்ரீ காளிகாம்பாள்"
- ஓம் அருள்நிறை அம்மையே போற்றி ஓம் அமுத நாயகியே போற்றி
- ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்டநாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்«ப போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையேபோற்றி
ஓம் அரசிளங் குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி
ஓம் அமுத நாயகியே போற்றி
ஓம் அருந்தவ நாயகியே போற்றி
ஓம் அருள்நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க் கரசியே போற்றி
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி
ஓம் இமையத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றாய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம்ஐயம் தீர்ப்பாய்போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக் குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை யூற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனைக் கடந்த கற்பமே போற்றி
ஓம் காட்சிக் கினியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி
ஓம் காமாட்சி அம்பிகையே போற்றி
ஓம் காளிகாம்பாள் அம்பிகையே போற்றி
ஓம் கிளியேந்திய கரத்தோய்போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாமி சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்த வல்லியே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி
ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி
ஓம் தமிழ்க் குலச்சுடரே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி யம்மையே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமையின் குருந்தே போற்றி
ஓம்பரமானந்தப் பேருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி
ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம் பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவி போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பேரிய நாயகியே போற்றி
ஓம் போன்மயிலம்மையே போற்றி
ஓம் போற்கொடி அம்மையே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மழலைக் கிளியே போற்றி
ஓம் மனோன்மனித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையேபோற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி யம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பேருக்கே போற்றி
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி யம்மையே போற்றி
ஓம் வடிவழ கம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் சவுந்த ராம்பிகையே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி
ஓம் ஸ்ரீகாளிகாம்பாள் அம்பிகையே போற்றி போற்றி
- காளிகாம்பாள் மேற்கு நோக்கி இருந்து பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்து வருகிறாள்.
- குபேரன் இத்தலத்திற்கு வந்து அம்மனை வணங்கி தனவந்தனாக ஆனான் என்பது வரலாறு
இந்த கோவிலில் சிறப்பு அம்சங்களில் ஒன்று அம்மன் மேற்கு நோக்கி எழுந்தருளியிருப்பது. பொதுவாக அம்மன்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருப்பதைப் பார்த்து இருப்போம்.
ஆனால் இங்குள்ள காளிகாம்பாள் மேற்கு நோக்கி இருந்து பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்து வருகிறாள். இவ்வாறான நிலை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
செல்வத்துக்கு அதிபதியான குபேரன் இத்தலத்திற்கு வந்து ஸ்ரீகாளிகாம்பாள் அம்மனை வணங்கிய பிறகு தான் பெரும் தனவந்தனாக ஆனான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதியில் மராட்டிய வீர சிவாஜி படையெடுத்த போது காளிகாம்பாள் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
இத்திருக்கோவிலில் ஸ்ரீகாளிகாம்பாள் அர்த்த பத்மாசனத்தில் பாசங்குசத்தை கையில் ஏந்தி கமலத்தில் புன்னகை செய்து வீற்றிருக்கிறாள். அம்பாளின் திருவடியில் திரிசிரனின் மூன்று தலைகள் நன்கு செதுக்கப்பட்டுள்ளன.
மூலவர் உட்பிரகாரத்தின் மேற்கில் உற்சவர் மண்டபம் அமைந்துள்ளது. ஸ்ரீஅம்பாள் பெரிய நாயகி (உற்சவர்) மகாதேஜசுடன் மகாலட்சுமியாகவும், மகாசரஸ்வதியாகவும் இரு பக்கங்களிலும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள்.
உற்சவ மண்டபத்திற்கு கிழக்கில் சிற்ப வேலைபாடுகளுடன் கருங்கல்லிலான பதினாறு கால் மண்டபம் மிக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தில் அமைந்துள்ள எட்டுத் தண்களில் சிற்சிறு வடிவங்களில் பாலகிருஷ்ணன் வழிபாடும் பெண்தபசி, பெண் சேவார்த்திகள் சிற்பங்கள் கலை வேலைப் பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.
வடமேற்கு பகுதியில் துணைவிகள் சமேதராக காட்சியளிக்கும் சித்தி-புத்தி விநாயகரும் அருகில் உள்ள அகோர வீரபத்திர சுவாமி, மாகாளியும் மகிமை நிறைந்தவர்கள் என்கிறார்கள்.
பவுர்ணமி தினத்தன்று அகோர வீரபத்திர சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தினால் பில்லி,சூனியம் ,பேய், பிசாசு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
தென் மேற்கு மூலையில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மையாருடன் அமர்ந்து அன்னை நெய்தல், நிலக்காமாட்சியாக காட்சி அளிக்கிறாள். வடக்கில் ஸ்ரீ வீரபிரமங்கார் சன்னதி அமைந்துள்ளது.
எலும்புக்கூடாக பிருங்கி முனிவர்
காளிகாம்பாள் சந்நிதியில் பிருங்கி முனிவர் மூன்று கால்களுடன் உடல் இளைத்து எலும்புக்கூடாக நிற்கிறார். அவர் பார்வதிதேவியை அவமதித்து பெற்ற சாபம் காரணமாக பல தலங்களுக்கு சென்று கடைசியாக இங்கு வந்து சேர்ந்தார். சக்தி இன்றி சிவனில்லை என்பதை அவர் உணர்ந்த பிறகே சாபவிமோசனம் பெற்றார்.
வழிபாட்டின் பயன்
தஞ்சம் என்று வருவோரின் சஞ்சலம் போக்கி மங்கலம் அருள்வாள். பல மகத்துவங்களை புரிவதன் மூலம் கலியுகத்தில் ஓர் கண்கண்ட தெய்வமாக காட்சி தருகிறாள்.
அன்னை காளிகாம்பாள் திருத்தலம் திருத்தலம் நோக்கி வருவோர் அம்பாளிடம் சரணடைந்து, அவளைத் தோத்தரித்து ஐந்து வாரங்கள் தொடர்ந்து எலுமிச்சை பழத்தை பெற்றுச் செல்கின்றனர். அதனால் குறைபாடு நீங்கப் பெறுகின்றனர். தாய்மைப்பேறு பேறு அடைகின்றனர்.
தீராத பிணிகள் யாவும் தீர்க்கப் பெற்றுத் திரும்பு-கின்றனர். பேய், பிசாசு, பில்லி சூன்யம் விலகப் பெற்று புத்துணர்ச்சி பெறுகின்றனர். மாங்கலயப் பலம் நிலைக்கப் பெறுகின்றனர்.
பொதுவாக குறைகள் அத்தனையும் விலகி நிறைவு பெற்றுத் திரும்புகின்றார்கள். இவ்வரிய உண்மையை அறிய ஒருமுறை வடசென்னை தம்புச் செட்டித் தெரு அன்னை காளிகாம்பாள் ஆலயத்திற்கு சென்று வந்தால்தான் தெரியும். அன்னை காளிகாம்பாள் அருளடி சரணே!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்