என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிருங்கி முனிவர்"
- சக்தியின் மேனியை பொன்னிறமாக்கியதால் பொன்முகலி என்று மணிகங்கைக்கு பெயர்.
- கணநாதரை வழிபட்டு கல்யாண உற்சவம் செய்பவருக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய தெய்வீக நால்வர் போன்று பிருங்கி முனிவரும் பிறப்புக்கு அப்பாற்பட்ட பரபிரும்மத்தை மட்டுமே வழிபடும் செம்மையான திருநெறியில் நிற்பவர். தோற்றம் அவதாரம் பிறப்பு போன்ற மாசு உள்ள ஜீவராசிகளான ஆண் தெய்வங்களையோ பெண் தெய்வங்களையோ எக்காரணத்தைக் கொண்டும் எந்த சூழ்நிலையிலும் பூஜை செய்து வணங்காத செம்மையான மனம் கொண்டவர். தன்னை பூஜை செய்து வழிபடவில்லை என்பதற்காக பராசக்தி பிருங்கி முனிவருக்கு எலும்புக் கூடாகப் போகுமாறு சாபம் கொடுத்தாள்.
ஒரு சிறந்த சிவபக்தையாக இருந்தும் சிவபக்தர்களின் அருமை பெருமைகளையும் சிவபக்தியின் மகிமையையும் உணர்ந்து கொள்ள முடியாத அஞ்ஞானத்தினால் ஒரு சிறந்த சிவனடியாரை துன்புறுத்திய தீவினையின் பலனை பராசக்தி அனுபவிக்க நேர்ந்தது. அம்மன் மேனி தெய்வத்தன்மையை இழந்து துர்நாற்றம் எடுக்கலாயிற்று.
மீண்டும் நறுமணத்தையும், தெய்வத்தன்மையையும் பெறுவதற்காக பராசக்தி திருக்காளஹஸ்திக்கு வந்தாள். நல்வினை, தீவினை என்ற இருவினைகளுக்கும் அப்பாற்பட்ட ஈசனை நினைத்து தவம் புரிந்தாள்.
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு போவதும், வருவதும் இல்லாமல் எல்லா உலகங்களிலும் எல்லா இடங்களிலும் நிறைந்து மறந்து உள்ள காற்றுப்பெருமான் திருச்சடையிலிருந்து கங்கைநீரைத் தெளித்தருளினார். அந்த நீர்த்துளிகள் நதியாகப் பெருக்கு எடுத்து ஓடின.
கங்கை நீர்த்துளிகள் நதியானதால் அந்த நதி மணிகங்கை என்று பெயர் பெற்றது. சக்திதேவி அந்த மணிமங்கையில் சிவநாமம், ஓதி நீராடியபோது அவள் மேனியின் துர்நாற்றம் நீங்கிப் பொன்னிறமும், தெய்வத்தன்மையும் பெற்றாள். சக்தியின் மேனியை பொன்னிறமாக்கியதால் பொன்முகலி என்று மணிகங்கைக்கு பெயர் உண்டாயிற்று.
பொன்முகலியில் நீராடிய பராசக்தி வாயுலிங்க பரம்பொருளை பூஜை செய்து வழிபட்டாள். அம்மனின் ஆணவத்தையும், அஞ்ஞனத்தையும் நீக்கியருளிய காளத்தீஸ்வரர் பராசக்தியை மெய்ஞானப் பூங்கோதையாக்கி நறுமணம் வீசச்செய்தார். அம்மனுக்கு ஞானஒளி வழங்கியதால் பரமேஸ்வரனுக்கு ஞானப்பிரகாசம் என்று திருநாமம் உண்டானது.
திருமுறை ஞானப்பிரகாசத்தை போற்றுகின்றது. பராசக்தியை நறுமணம் வீசும் ஞானப்பூங்கோதையாக்கி அருளியதையே பரமேஸ்வரன் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி....என்று தொடங்கும் பாடலில் எழுதிப் பாண்டியனிடமிருந்து பரிசில் பெறுவதற்காக தருமிக்குக் கொடுத்தருளினார்.
காளத்தீஸ்வரரின் திருவருளால் மெஞ்ஞானமும், ஆணவமும் துர்நாற்றம் நீங்கி மெய்ஞானமும் பூவின் நறுமணமும் பெற்ற அம்மன் ஞானப்பூங்கோதை என்ற திருநாமத்துடன் தனிச் சன்னதியில் உள்ளாள். தனிக்கோவில் போன்று உள்ள இந்த பெரிய சன்னதி காளத்தீஸ்வரருக்கு பின்புறம் எதிர்திசையை நோக்கியவாறு அமைந்துள்ளது.
கல்யாண உற்சவம்
அம்மன் திருநாமம் வடமொழியில் ஞானப்பிரசுனாம்பா என்று வழங்கப்படுகின்றது. அம்மன் பிரதிஷ்டை செய்து பூஜை புரிந்த லிங்கங்கள் அம்மன் சன்னதியில் உள்ளன. அம்மனை தான பூங்கோதையாக்கி அருளிய கல்யாணசுந்தரர் எழுந்தருளியுள்ள கல்யாண மண்டபத்தில் திருக்கோயிலின் சிறந்த உற்சவங்களில் ஒன்றான கல்யாண உற்சவம் நடக்கின்றது.
காளத்திக் கணநாதரை வழிபட்டு கல்யாண உற்சவம் நடத்துகின்றவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கின்றது. அம்மன் சன்னதிக்கு அருகே அக்கண்ணலிங்கம், நாதள்ளலிங்கம், காளத்தீசர் ஆகிய பல லிங்கங்கள் உள்ளன.
- காளிகாம்பாள் மேற்கு நோக்கி இருந்து பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்து வருகிறாள்.
- குபேரன் இத்தலத்திற்கு வந்து அம்மனை வணங்கி தனவந்தனாக ஆனான் என்பது வரலாறு
இந்த கோவிலில் சிறப்பு அம்சங்களில் ஒன்று அம்மன் மேற்கு நோக்கி எழுந்தருளியிருப்பது. பொதுவாக அம்மன்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருப்பதைப் பார்த்து இருப்போம்.
ஆனால் இங்குள்ள காளிகாம்பாள் மேற்கு நோக்கி இருந்து பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்து வருகிறாள். இவ்வாறான நிலை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
செல்வத்துக்கு அதிபதியான குபேரன் இத்தலத்திற்கு வந்து ஸ்ரீகாளிகாம்பாள் அம்மனை வணங்கிய பிறகு தான் பெரும் தனவந்தனாக ஆனான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதியில் மராட்டிய வீர சிவாஜி படையெடுத்த போது காளிகாம்பாள் கோவிலுக்கு வந்திருந்து அம்மனை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
இத்திருக்கோவிலில் ஸ்ரீகாளிகாம்பாள் அர்த்த பத்மாசனத்தில் பாசங்குசத்தை கையில் ஏந்தி கமலத்தில் புன்னகை செய்து வீற்றிருக்கிறாள். அம்பாளின் திருவடியில் திரிசிரனின் மூன்று தலைகள் நன்கு செதுக்கப்பட்டுள்ளன.
மூலவர் உட்பிரகாரத்தின் மேற்கில் உற்சவர் மண்டபம் அமைந்துள்ளது. ஸ்ரீஅம்பாள் பெரிய நாயகி (உற்சவர்) மகாதேஜசுடன் மகாலட்சுமியாகவும், மகாசரஸ்வதியாகவும் இரு பக்கங்களிலும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள்.
உற்சவ மண்டபத்திற்கு கிழக்கில் சிற்ப வேலைபாடுகளுடன் கருங்கல்லிலான பதினாறு கால் மண்டபம் மிக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தில் அமைந்துள்ள எட்டுத் தண்களில் சிற்சிறு வடிவங்களில் பாலகிருஷ்ணன் வழிபாடும் பெண்தபசி, பெண் சேவார்த்திகள் சிற்பங்கள் கலை வேலைப் பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.
வடமேற்கு பகுதியில் துணைவிகள் சமேதராக காட்சியளிக்கும் சித்தி-புத்தி விநாயகரும் அருகில் உள்ள அகோர வீரபத்திர சுவாமி, மாகாளியும் மகிமை நிறைந்தவர்கள் என்கிறார்கள்.
பவுர்ணமி தினத்தன்று அகோர வீரபத்திர சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தினால் பில்லி,சூனியம் ,பேய், பிசாசு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
தென் மேற்கு மூலையில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மையாருடன் அமர்ந்து அன்னை நெய்தல், நிலக்காமாட்சியாக காட்சி அளிக்கிறாள். வடக்கில் ஸ்ரீ வீரபிரமங்கார் சன்னதி அமைந்துள்ளது.
எலும்புக்கூடாக பிருங்கி முனிவர்
காளிகாம்பாள் சந்நிதியில் பிருங்கி முனிவர் மூன்று கால்களுடன் உடல் இளைத்து எலும்புக்கூடாக நிற்கிறார். அவர் பார்வதிதேவியை அவமதித்து பெற்ற சாபம் காரணமாக பல தலங்களுக்கு சென்று கடைசியாக இங்கு வந்து சேர்ந்தார். சக்தி இன்றி சிவனில்லை என்பதை அவர் உணர்ந்த பிறகே சாபவிமோசனம் பெற்றார்.
வழிபாட்டின் பயன்
தஞ்சம் என்று வருவோரின் சஞ்சலம் போக்கி மங்கலம் அருள்வாள். பல மகத்துவங்களை புரிவதன் மூலம் கலியுகத்தில் ஓர் கண்கண்ட தெய்வமாக காட்சி தருகிறாள்.
அன்னை காளிகாம்பாள் திருத்தலம் திருத்தலம் நோக்கி வருவோர் அம்பாளிடம் சரணடைந்து, அவளைத் தோத்தரித்து ஐந்து வாரங்கள் தொடர்ந்து எலுமிச்சை பழத்தை பெற்றுச் செல்கின்றனர். அதனால் குறைபாடு நீங்கப் பெறுகின்றனர். தாய்மைப்பேறு பேறு அடைகின்றனர்.
தீராத பிணிகள் யாவும் தீர்க்கப் பெற்றுத் திரும்பு-கின்றனர். பேய், பிசாசு, பில்லி சூன்யம் விலகப் பெற்று புத்துணர்ச்சி பெறுகின்றனர். மாங்கலயப் பலம் நிலைக்கப் பெறுகின்றனர்.
பொதுவாக குறைகள் அத்தனையும் விலகி நிறைவு பெற்றுத் திரும்புகின்றார்கள். இவ்வரிய உண்மையை அறிய ஒருமுறை வடசென்னை தம்புச் செட்டித் தெரு அன்னை காளிகாம்பாள் ஆலயத்திற்கு சென்று வந்தால்தான் தெரியும். அன்னை காளிகாம்பாள் அருளடி சரணே!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்