என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜேசிடி பிரபாகர்"
- அதிமுக ஒன்றுபட வேண்டும் என பலர் நினைக்கின்றனர்.
- இரண்டாம் இடத்திற்கு தேசிய கட்சிகள் வர நாங்கள் அனுமதிக்க முடியாது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி, கே.சி.பழனிசாமி ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது, ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி, கே.சி.பழனிசாமி கூட்டாக அறிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் இருந்து வெளியே வருகிறோம். அதிமுக ஒருங்கிணைப்பு குழு என ஒன்றை அமைத்து அதிமுகவை இணைக்க உள்ளோம்.
அதிமுக ஒன்றுபட வேண்டும் என பலர் நினைக்கின்றனர். எப்போதும் எவ்வளவு சதவீதம் வந்தது என பார்ப்போம். ஆனால் தற்போது 7 இடத்தில் டெபாசிட் போய்விட்டது.
ஒரு தொகுதியை கூட அதிமுக வெல்லவில்லை. யாரோ அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள்.
இரண்டாம் இடத்திற்கு தேசிய கட்சிகள் வர நாங்கள் அனுமதிக்க முடியாது.
திமுகவை எதிர்த்து போராட வேண்டிய நிலையில் தயவு செய்து ஒன்றாக சேருங்கள். ஒற்றுமை வேண்டும் என்ற காரணத்திற்காக அதிமுக ஒருங்கிணைப்பு குழு தொடங்கப்பட்டுள்ளது.
தொடர் தோல்விகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஈபிஎஸ் ஈகோ பார்க்க வேண்டாம்.
இதுபோன்ற தோல்வியை அதிமுக ஒருபோதும் சந்தித்தது இல்லை. அதிமுக ஒன்றுபட வேண்டும் ஒன்பதை தமிழக மக்கள் உணர்த்தியுள்ளனர்.
தமிழகத்தில் திமுக vs பாஜக என்று இருப்பதை எங்களால் பார்க்க முடியவில்லை. தேசிய கட்சிகளுக்கு அடி பணிந்தோ, சார்ந்தோ அதிமுகவில் செயல்பட கூடாது.
ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா மூவரும் ஒன்றுசேர வேண்டும் என்ற குரல் நான்கு திசையில் இருந்தும் எழுகிறது.
அதிமுக ஒற்றுமை தான் எங்கள் விருப்பம், யாரையும் எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. நாடாளுமன்ற தேர்தல் முடிவு, அதிமுக தொண்டர்களுக்கு பேரிடி.
மாவட்ட வாரியாக பயணம் செய்து, தொண்டர்களின் கருத்தை கேட்க உள்ளோம். சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும்.
1991ல் அதிமுக ஒருங்கிணைப்புக்கு எதிராக ருஇந்த தலைவர்கள், தொண்டர்களால் ஒதுக்கப்பட்டனர். 1991 போலவே தற்போதும் அதிமுக ஒன்றுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உண்மையான புள்ளி விவரங்களை அளித்தவர் அம்மாதான்.
- தவறான புள்ளி விவரங்களை அளித்தவர் கருணாநிதி.
சென்னை:
ஓ.பி.எஸ். அணி துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குள்ளும் சரி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு வெளியேயும் சரி, தி.மு.க. செய்த தவறுகளை, தி.மு.க. தமிழ் நாட்டிற்கு இழைத்த துரோகங்களை, புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டு தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தவர் புரட்சித் தலைவி அம்மா. உண்மையான புள்ளி விவரங்களை அளித்தவர் அம்மாதான். தவறான புள்ளி விவரங்களை அளித்தவர் கருணாநிதி.
இந்த உண்மைக் கூட தெரியாமல், தன் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போரை அழைத்து "விவாதங்களை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் நமக்கு முன்னோடி. அவர் ஒரு ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டும் என்றால், அனைத்து விபரங்களையும் கையில் வைத்த படி பேசுவார். அதுபோல நீங்களும் எல்லாவிதமான புள்ளி விபரங்களுடன் விவாதத்தில் பங்கேற்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக செய்தி வந்து உள்ளது.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் ஊழகுழலாக செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்