என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஓடிடி"
- வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்றது. அப்போது, JOOPOP HOME செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது.
- இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டரான ஷெரிப் மாஸ்டர் நடனத்திற்காக பிரத்தியேகமாக "JOOPOP HOME" என்கிற இந்தியாவின் முதல் OTT தளத்தை துவங்கியுள்ளார்.
இதற்கான விழா வடபழனி நெக்ஸஸ் விஜயா மாலில் நடைபெற்றது. அப்போது, JOOPOP HOME செயலி (app) அறிமுகப்படுத்தப்பட்டது.
ஓடிடி ஆப் அறிமுக நிகழ்வில் புகழ்பெற்ற திரைப்பட கலைஞர்களான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் பாபி சிம்ஹா ஆகியோருடன் ஷெரீப்பின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
JOOPOP HOME அறிமுக நிகழ்வில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள், ஷெரிப்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பற்றிய தங்கள் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர்.
இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், " ஷெரிப் ஒரு நடன இயக்குநர் மட்டுமல்ல, அவர் ஒரு கதைசொல்லி. நாங்கள் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது படைப்பாற்றலால் உயர்ந்து கொண்டே வருகிறது. JOOPOP HOME எனும் இந்த ஆப் நடனத்தை அடுத்த படிக்கு கொண்டு செல்வதற்கான அவரது உந்துதலுக்கு ஒரு சான்றாகும்" என்றார்.
மேலும், டான்ஸ் மாஸ்டர் ஷெரிப் கூறுகையில், "ஆரம்பத்தில் இருந்தே நடனம்தான் என் வாழ்க்கை. எனது நடனப் பள்ளியிலிருந்து தொடங்கி, 2009ல் போட்டி, இப்போது ஒரு திரைப்பட நடன இயக்குநர் என, நான் எப்போதும், அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
JOOPOP HOME என்பது சமூகத்திற்கு நான் ஆற்றும் பங்களிப்பாகும். நடனக் கலைஞர்கள் உலகளாவிய அரங்கில் பிரகாசிக்க ஒரு இடத்தை உருவாக்குவதற்கு என்னுடைய ஒரு சிறு முயற்சியாக இது இருக்கும்" என்றார்.
- மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் பேட்டரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். படத்தில் தனது நடிப்பு ஆற்றல் மூலம் அசத்தியுள்ளார் குறிப்பாக காமெடி காட்சிகளில் கலக்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்கியுள்ளார்.இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் , குஞ்சாக்கோ போபன், வீணா நந்த குமார், ஜோதிர்மயி, ஸ்ரீண்டா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தன் நினைவுகளை மறக்கும் ஒரு பெண் அவளுக்கும் காணாமல் போன பெண்களுக்கு உள்ள தொடர்பை மையப்படுத்தி இப்படம் அமைந்துள்ளது.
ஆனந்த சந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்நடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன்.
- ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் தற்போது வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அமரன் திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் "லக்கி பாஸ்கர்" வெளியானது.
- சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான படம் 'பிளடி பெக்கர்'.
என்னதான் திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனாலும்,, அதை ஓடிடி-யில் பார்க்க என ஒரு தனி கூட்டமே உள்ளது. திரையரங்கில் வெற்றி திரைப்படமாக அமையாத பல திரைப்படங்கள் ஓடிடி வெளியீட்டின் பிறகு மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
இப்போ அடிக்கிற மழையில் வீட்டில் அனைவரும் அமர்ந்து பிடித்த உணவை சாப்பிட்டு இந்த வார ஓடிடியில் என்ன படம் பாக்கலாம்-ன்னு பார்ப்போம்
'ராக்கெட் டிரைவர்'
ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரித்துள்ள படம் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்கியுள்ளார். பேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை சுனைனா, ஜெகன் நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் கடந்த 25-ந் தேதி வெளியானது.
'அந்தகன்'
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக 'அந்தகன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக பிரசாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் கடந்த 26-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது
'தீபாவளி போனஸ்'
நடிகர் விக்ராந்த் நடிப்பில் ஜெயபால் இயக்கத்தில் வெளியான படம் 'தீபாவளி போனஸ்'. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்விகா நடித்துள்ளார். ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் பன்னீர்செல்வம், வெங்கட்ராமன் பாலாஜி, மாலிக் ரபிக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 26-ந் தேதி ஆஹா தமிழ் மற்றும் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளது.
'லக்கி பாஸ்கர்'
வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் "லக்கி பாஸ்கர்" வெளியாகி உள்ளது.இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இப்படம் சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவாகி உள்ளது. இப்படம் 28-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
'கா'
சுதீப் மற்றும் சுஜித் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான படம் 'கா'. இவர்கள் இயக்கிய முதல் படம் இதுவாகும். இதில் கிரண் அப்பாவரம் கதாநாயகனாகவும், தன்வி ராம் மற்றும் நயன் சரிகா என இரண்டு கதாநாயகிகளும் நடித்தனர். ஸ்ரீசக்ராஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் நேற்று இடிவி வின் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
'பிளடி பெக்கர்'
நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான படம் 'பிளடி பெக்கர்'. இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் கவின் 'பிச்சைக்காரன்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று அமேசான் பிரைம், டென்டுகொட்டா, சன் நெக்ஸ்ட் போன்ற ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளது.
'பிரதர்'
ஜெயம் ரவி நடிப்பில் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள படம் 'பிரதர்'. இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரில் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
'விகடகவி'
பிரதீப் மடலி இயக்கத்தில் நரேஷ் அகஸ்தியா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தொடர் 'விகடகவி'. இந்த தொடர் பீரியட் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ராம் தல்லூரி இந்த தொடரை தயாரித்துள்ளார். நரேஷ் அகஸ்தியா விக்டகவியாக நடித்துள்ளார், அவர் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு துப்பறியும் நபராக நடித்துள்ளார். இந்த தொடர் ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'பாராசூட்'
இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள புதிய வெப்சீரிஸ் 'பாராசூட்'. இதில் நடிகர் கிஷோர் குழந்தைகளின் தந்தையாகவும், பிரபல நடிகை 'குக் வித் கோமாளி' கனி குழந்தைகளுக்கு அம்மாவாகவும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
- இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக இருப்பவர் சார்லி. இதுவரை 800 மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சார்லி, ஜெகன் பாலாஜி, அதிதி பாலன், சரண்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் லைன்மேன். இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
லைன்மேன் சார்லியின் மகன் ஜெகன் பாலாஜி, சூரிய ஒளி மறைந்தது தானாக தெரு விளக்கு எரிவது போலவும் ஒளி வந்ததும் தானாக அணைவது போலவும் ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கிறார். அதற்கு அரசு அங்கீகாரம் பெற எடுக்கப்படும் முயற்சி, அதனால் ஏர்படும் சிக்கல்களை பற்றி பேசக்கூடிய திரைப்படமாக இது அமைந்துள்ளது.
படத்தை பார்த்த பலர் இணையத்தில் பாராட்டி பதிவு செய்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.
- லக்கி பாஸ்கர் திரைப்படம் உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலித்தது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
லக்கி பாஸ்கர் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில், இப்படம் வரும் 30ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
- அமரன் உலகளவில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் கடந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
. உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் உலகளவில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் கடந்துள்ளது. இப்படமே சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படமாகும்.
திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ரூபாய் 60 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 5 அல்லது 11 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முதல் சீசனில் 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.
- ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் டீசர் வெளியானது.
தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு ஸ்குவிட் கேம். கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடரின் பெயரும் அதுவே. முதல் சீசனில் 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.
இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இந்நிலையில் இந்த ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் உருவாகியுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள 2 வது சீசனின் டீசர் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது.
எனவே சீனன் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தொடரின் இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தொடரை இயக்கிய அனுபவம், அதற்காக தான் மெனக்கிட்டு செய்த வேலைகள் என பலவற்றை பற்றி பேசியுள்ளார்.
அதில், முதல் சீசனை இயக்கும்போது அதிக ஸ்ட்ரெஸ் மற்றும் மன அழுத்தத்தில் தனது 8-9 பற்கள் கொட்டிவிட்டதாக தெரிவித்தார். ஆனால் இதை அவர் வருத்தம் இல்லாமலேயே தெரிவித்திருக்கிறார். முதல் சீசனில் மன ரீதியாக நிறைய இன்னல்களை சந்தித்திருந்தாலும் இரண்டாம் சீசனை இயக்கவும் முன்வந்ததாக அவர் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரிலையன்ஸ் அணி விரும்பினால், இது அவர்களுக்கான சிறந்த டொமைனாக இருக்கும் என நினைக்கிறோம்.
- எங்களை தொடர்பு கொண்டோ, எங்களை வற்றுபுறுத்தியோ நாங்கள் இந்த முடிவுக்கு வரவில்லை.
ஜியோவும் ஹாட்ஸ்டாரும் ஒன்றாக இணைந்து செயல்பட இருக்கும் நிலையில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) டொமைன் துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவர் மற்றும் சிறுமியிடம் (சகோதரன் மற்றும் சகோதரி) வசம் இருப்பது தெரியவந்தது.
இது மிகப்பெரிய பேசும்பொருளாக மாறியது. இந்த நிலையில் இந்த சிறுவர்களுக்கு, டொமைனை எங்களுக்கு தாருங்கள் என பலர் இ-மெயில் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனால் மெயில் அனுப்பியவர்கள் உண்மையாக தங்களிடம் அணுகுகிறார்களா? என்பதை பரிசோதிக்க நினைத்தனர்.
இதனால் தங்களுக்கு வந்த இ-மெயில்களை ஆராய்ந்தனர். இது தொடர்பாக அந்த சிறுவர்கள் கூறியதாவது:-
சிலர் அனுப்பியது போலி எனத் தெரியவந்தது. சிலர் சீரியஸாக வாங்க விருப்பம் தெரிவித்திருந்தனர். சில அதிக அளவில் பணம் தருவதாக தெரிவித்தனர். ஆனால், இந்த அறிவார்ந்த ஆஃபர்கள் வந்த போதிலும், நாங்கள் டொமைனை ஒருபோதும் விற்பனை செய்ய விரும்பவில்லை. டொமைன் விற்பனைக்கு அல்ல என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்துவிட்டோம்.
ஜியோ- ஹாட்ஸ்டார் இணைப்பு தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுப்பப்பட்டது. நாங்கள் அனைத்து குழப்பத்திற்கும் பதில் அளிக்க விரும்புகிறோம். இந்த கவனத்தை நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை மற்றும் எந்த சர்ச்சையையும் ஏற்படுத்த விரும்பவில்லை.
நாங்கள் டெவலப்பருக்கு சப்போர்ட் செய்து, எங்களுடைய சேவை பயணத்தை பகிர வேண்டும் என்பது மட்டும்தான் எங்களுடைய நோக்கம்.
அனைத்து ஆலோசனைகளும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரிலையன்ஸ் அணி விரும்பினால், இது அவர்களுக்கான சிறந்த டொமைனாக இருக்கும் என நினைக்கிறோம். jiohotstar.com டொமைனை அவர்களுக்கு இலவசமாக கொடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதை முறையான ஒப்பந்தங்களில் அடிப்படையில் (proper paperwork) கொடுக்க விரும்புகிறோம்.
இது ஒட்டுமொத்தமாக எங்களுடைய தேர்வு. ரிலையன்ஸ் நிறுவத்தில் இருந்தோ, எந்தவொரு சட்டம் தொடர்பான குரூப் எங்களை தொடர்பு கொண்டோ, எங்களை வற்றுபுறுத்தியோ நாங்கள் இந்த முடிவுக்கு வரவில்லை. நண்பர்கள், குடும்பம் அல்லது மற்ற யாரிடம் இருந்தோ எந்தவித அழுத்தம் இல்லாமல் எங்களுடைய சொந்த முடிவு.
இவ்வாறு அந்த சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக,
அதிக ஓடிடி தளங்களின் வருகையால் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களை இழந்து வருவதால் மற்றொரு ஓடிடி தளத்துடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டது. அதன்படி அம்பானியின் ரிலையன்ஸ் நடத்தும் ஜியோ சினிமாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த இரண்டு தளங்களும் இணைந்தால் அதற்கு ஜியோ ஹாட்ஸ்டார் என்று பெயர் வைக்கப்படும். ஹாட்ஸ்டார் ஜியோ சினிமாவுடன்தான் இணையும் என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து அறிந்த டெல்லியை சேர்ந்த மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் ஒருவர் ஜியோ ஹாட்ஸ்டார் [Jio- hotstar.com] என்ற இணையதள முகவரியை [domain] முன்கூட்டியே கண்டது வருடமே வாங்கி வைத்தார்.
இந்த முகவரியை சொந்தமாக்கினால் மட்டுமே தற்போது ஒருங்கிணைத்து ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உருவாக்க உள்ள ஓடிடி அந்த பெயரில் செயல்பட முடியும். இந்நிலையில் அந்த முகவரியை அவர் ரிலையன்ஸிடம் நல்ல விலைக்கு விற்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அந்த முகவரிக்கு ரூ.1 கோடி வரை அந்த டெவலப்பர் விலை வைத்திருந்தார் என்ற தகவல்களும் வெளியாகின.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் துபாயை சேர்ந்த இருவருக்கு டெல்லி டெவலப்பர் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அந்த இருவரும் குழந்தைகள் என்பது இந்த விவகாரத்தை அதிக சுவாரஸ்யமாகியுள்ளது. துபாயில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜைனம் மற்றும் ஜீவிகா என்ற சகோதர சகோதரி இரட்டையர் அந்த முகவரியை ரூ.1 கோடிக்கு வாங்கியுள்ளனர்.
- ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை காண்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளன.
- எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைப் பார்க்லாம்.
திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களை தாண்டி, ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை காண்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளன.
அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைப் பார்க்கலாம்.
டெஸ்பிகபிள் மீ 4
டெஸ்பிகபிள் மீ 4 அமெரிக்க அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும். யுனிவர்சல் பிக்சர்ஸ் அண்ட் இலுமினேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தை கிறிஸ் ரெனாட் இயக்கினார். 6 பாகங்களை கொண்ட இந்த படத்தின் 4-வது பாகம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் நேற்று (05-11-2024) ஜியோ சினிமா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
கோழிப்பண்ணை செல்லதுரை
இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை'. இந்த படம் கிராமத்துக் கதைக்களத்தில் அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று (05-11-2024) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
பிரசன்ன வதனம்
அறிமுக இயக்குனர் அர்ஜுன் ஒய்.கே இயக்கத்தில் நடிகர் சுஹாஸின் நடிப்பில் வெளியான படம் 'பிரசன்ன வதனம்'. இது ஒரு மர்ம திரில்லர் திரைப்படம் ஆகும். திரையரங்குகளில் வெளியான இப்படம் தொடர்ந்து சிறந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் இன்று (06-11-2024) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
சிட்டாடல் ஹனி பன்னி
சமந்தா மற்றும் வருண் தவான் நடித்துள்ள வெப் தொடர் 'சிட்டாடல் ஹனி பன்னி'. ஆக்சன் திரில்லர் நிறைந்த இந்த தொடரை இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளார். இது ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இந்த நிலையில், இந்த வெப் சீரிஸ் நாளை (07-11-2024) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
வேட்டையன்
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வருகிற 8-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
தேவரா
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் 'தேவரா பாகம்-1''. இதில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்சன் கதைக்களத்தில் வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இப்படம் வருகிற 8-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
ஏ.ஆர்.ஏம்
அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடித்துள்ள படம் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' (ஏ.ஆர்.எம்). இந்த படத்தில் டொவினோ தாமஸ் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வருகிற 8-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
- இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1' படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளார்.
- இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1' படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதித்துள்ளார்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த மாதம் 27-ந்தேதி இப்படம் வெளியானது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வெளியானாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. நவம்பர் மாதம் 8-ந்தேதி தேவரா படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இடப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சட்டம் என் கையில் எனும் படத்தில் சதீஷ் நடித்துள்ளார்.
- இப்படத்தை சிக்சர் திரைப்படத்தை இயக்கிய சச்சி இயக்கியுள்ளார்.
நடிகர் சதீஷ் காமெடியனாக பல படங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காமெடி கலாட்டாக்களை செய்து வந்த இவர் நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக உருமாறினார். அதைத்தொடர்ந்து வித்தைக்காரன் மற்றும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.
கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் சதீஷுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து சட்டம் என் கையில் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி செப்டம்பர் மாதம் 27 ஆம் தெதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை சிக்சர் திரைப்படத்தை இயக்கிய சச்சி இயக்கியுள்ளார்.சதீஷுடன் இணைந்து வித்யா பிரதீப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.
ஓர் இரவு நடக்கும் சம்பவமாக இப்படம் அமைந்துள்ளது. ஒரு கொலை பழியில் இருந்து தப்பிக்க போராடும் கதையாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. திரைப்படம் தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரைப்படத்தை திரையரங்கிள் காணத்தவறவிட்டவர்கள் ஓடிடியில் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்