என் மலர்
நீங்கள் தேடியது "ஓடிடி"
- கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது.
- படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்தனர். கேரளாவின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.
கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி அவர் குணா படத்தில் நடக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியது. மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் மிக்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.
படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது. படம் இன்று மே 5 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அனைவரும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். நான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற படங்களில் நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.
இந்நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரோமியோ படத்தை தயாரித்துள்ளது. பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் வரும் மே 10 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் மிருணாலினி -க்கும் இடையே திருமணம் நடக்கிறது. இத்திருமணத்தில் மிருணாலினிக்கு விருப்பம் கிடையாது. எப்படி விஜய் ஆண்டனி அவரது காதலை தன் மனைவியான மிருணாலினிக்கு புரிய வைக்கிறார் அதற்க்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் பாரதிராஜா, இவானா, KPY பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
- "கள்வன்" படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் G.டில்லி பாபு தயாரித்துள்ளார். இப்படத்தை இயக்கியதோடு, இயக்குநர் P.V. ஷங்கர் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார்.
இயக்குநர் P.V. ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'கள்வன்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது . இப்படத்தில் பாரதிராஜா, இவானா, KPY பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
காடுகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில், மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன், அற்புதமான விஷுவல், மயக்கும் இசை மற்றும் நடிகர்களின் பாராட்டத்தக்க நடிப்பு என "கள்வன்" படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்தது.
அரசின் வனக்காப்பாளராக மாற விரும்பும் திருடன் கெம்பன், அந்த வேலையில் சேர அவனுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் தேவைப்படுகிறது. அந்த பணத்தைத் திரட்ட அவன் எடுக்கும் முடிவுகள், அவனை எதிர்பாராத பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. அதிலிருந்து அவன் விடுபட்டானா? அவன் கனவு நிறைவேறியதா ? என்பதே இப்படத்தின் கதை.
"கள்வன்" படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் G.டில்லி பாபு தயாரித்துள்ளார். இப்படத்தை இயக்கியதோடு, இயக்குநர் P.V. ஷங்கர் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ரேவா பின்னணி இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பையும், N.K. ராகுல் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளையும் செய்துள்ளார்கள்.
இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை, எழுத்தாளர் ரமேஷ் ஐயப்பனுடன் இயக்குநர் P.V. ஷங்கர் எழுதியுள்ளார்.
வரும் மே 14 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் "கள்வன்" படத்தை கண்டுகளியுங்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரேடியோ ரூம் என்ற புதிய முன்முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது.
- ஆடியோ OTT ரேடியோ ரூம் சென்னையில் அறிமுகம்.
ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் (Regional Story Tellers) குழுமத்தின் தலைவர் AL. வெங்கடாசலம் எனும் வெங்கி தனியார் தொலைக்காட்சிகளில் தலைவராக இருந்துள்ளார். இவர் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பல நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளார்.
வெங்கியின் பரந்த அனுபவத்தினாலும் சீரிய திறமையாலும் ரேடியோ ரூம் என்ற புதிய முன்முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது. ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் குழுமத்தின் புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் செயலி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநர் சசி, இயக்குநர் ஸ்டான்லி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் ஜான் விஜய் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
சுவாரசியமான, ஆழ்ந்து போக செய்யும் அதீத கதைக் கேட்கும் அனுபவத்தை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ரேடியோ ரூம், வெறும் ஆடியோ புத்தகம் மட்டுமே அல்ல. கதைகளும், நாவல்களும் ஆடியோ நாடகங்களாக மாற்றப்பட்டு பொருத்தமான குரல்கள், இதற்காகவே உருவாக்கிய இசை மற்றும் சிறப்பு சப்தங்கள் சேர்க்கப்பட்டு சிலிர்க்க வைக்கும் கேட்கும் அனுபவத்தை ரேடியோ ரூம் வழங்கும்.
ரேடியோ ரூம் செயலியில் பழம்பெரும் எழுத்தாளர்களின் கதைகளும், நடுத்தர கால மற்றும் சமகால எழுத்தாளர்களின் படைப்புகளும் உள்ளன. அறிமுக மற்றும் இளம் எழுத்தாளர்களின் கதைகளும் அரங்கேற இங்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
ரேடியோ ரூமில் தற்சமயம் தமிழ் கதைகளும் ஈழத் தமிழ் கதைகளும் இடம் பெற்றுள்ளன. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட கதைகளும் தயாரிப்பில் உள்ளன. விரைவில் இந்திய மொழிகளில் மராத்தி மற்றும் வங்காள கதைகளும், பன்னாட்டு மொழிகளில் ஸ்பேனிஷ், போர்த்துகீசிய மற்றும் ஜெர்மானிய கதைகளும் அறிமுகப்படுத்தப் படவுள்ளன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜியோபைபர் மற்றும் ஏர்பைபர் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
- அன்லிமிடெட் டேட்டா, ஓ.டி.டி. பலன்கள் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய ஜியோ சலுகை "அல்டிமேட் ஸ்டிரீமிங் பிளான்" என்று அழைக்கப்படுகிறது. இந்த போஸ்ட்பெயிட் சலுகை ஜியோபைபர் மற்றும் ஏர்பைபர் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
மாதம் ரூ. 888 கட்டணத்தில் கிடைக்கும் ஜியோவின் புதிய போஸ்ட்பெயிட் சலுகையில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஓ.டி.டி. பலன்கள் வழங்கப்படுகிறது.

அதன்படி இந்த சலுகையில் நெட்ப்ளிக்ஸ் (பேசிக்), பிரைம் வீடியோ (லைட்), ஜியோசினிமா பிரீமியம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 பிரீமியம், சன் நெக்ஸ்ட், ஹோய்சொய், டிஸ்கவரி பிளஸ், ஆல்ட் பாலாஜி, இரோஸ் நௌ, லயன்ஸ்கேட் பிளே, ஷீமாரோமீ, டாகுபே, எபிகான் மற்றும் இடிவி வின் என 15-க்கும் அதிக ஓ.டி.டி. தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
மேலும், இந்த சலுகையில் ஐ.பி.எல். "தன் தனா தன்" பலன்களும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் பயனர்களுக்கு 50 நாட்கள் வரை இலவச இண்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. எனினும், ஐ.பி.எல். சலுகை மே 31 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும்.
- கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற கதையை மையமாக கொண்டு கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆளவந்தான்’.
- இப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார்.
கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற கதையை மையமாக கொண்டு கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆளவந்தான்'. இப்படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கலைப்புலி தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' இப்படத்தை தயாரித்தது. கமலுடன் ரவீனா டண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கமல்ஹாசன் இப்படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். கதாநாயகனாகவும் வில்லனாகவும் இவரே நடித்திருப்பார். அக்காலக்கட்டத்திலேயே அனிமேஷன் காட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்களை பயன்படுத்தி வித்தியாசமாக படத்தை எடுத்திருப்பர்.
இப்படம் சில மாதங்களுக்கு முன் டிஜிட்டல் மெருகேற்றல் செய்ட்து ரிரீலிஸ் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டிஜிட்டல் மெருகேற்று செய்யப்பட்ட வெர்ஷன் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மார்க் ஆண்டனியின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.
- விஷால் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் மூன்றாவது முறை இணைந்து நடித்த திரைப்படம் ரத்னம் ஆகும்.
மார்க் ஆண்டனியின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
விஷால் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் மூன்றாவது முறை இணைந்து நடித்த திரைப்படம் ரத்னம் ஆகும். இதற்கு முன் அவரது இயக்கத்தில் தாமிரபரணி மற்றும் பூஜை படத்தில் நடித்துள்ளார். ரத்னம் திரைப்படம் விஷாலுக்கு 34- வது திரைப்படமாகும்.
ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தை ஸ்டோன் பென்ச் சார்பாக கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
படத்தின் ஆக்ஷன் காட்சிகளும், படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் ஷாட் காட்சி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது. தற்பொழுது ரத்னம் திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.
- புதிய சலுகைகளில் தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் நெட்ப்ளிக்ஸ் உடன் இணைந்து புதிய பிரீபெயிட் சலுகைகளை வழங்குகிறது. முன்னதாக வி பிரீபெயிட் சலுகைகளில் வி மூவிஸ் & டி.வி., 13 ஓ.டி.டி. சந்தா, 400-க்கும் அதிக லைவ் டி.வி. சேனல்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் வசதியை வழங்கி வந்தது.
தற்போது நெட்ப்ளிக்ஸ் கூட்டணியை தொடர்ந்து வி பிரீபெயிட் பயனர்கள் தங்களது மொபைல், டி.வி. மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களில் நெட்ப்ளிக்ஸ் பயன்படுத்தலாம். ரூ. 1000-க்கும் குறைந்த விலையில் நெட்ப்ளிக்ஸ் சந்தாவை வழங்கும் ஒரே டெலிகாம் நிறுவனமாக வி இருக்கிறது.

அந்த வகையில் வி ரூ. 998 மற்றும் ரூ. 1399 பிரீபெயிட் சலுகைகளில் நெட்ப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் முறையே 70 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. இவற்றில் முறையே தினமும் 1.5 ஜி.பி. மற்றும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. மும்பை மற்றும் குஜராத்தில் வசிக்கும் பயனர்கள் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை ரூ. 1099 விலையில் வாங்க வேண்டும்.
- 'ஒருநாள் கூத்து' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ்.
- சமீபத்தில் நிவேதா பெத்துராஜ், போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது.
'ஒருநாள் கூத்து' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ். 'டிக் டிக் டிக்', 'திமிரு பிடிச்சவன்', 'சங்கத்தமிழன்', 'பொன் மாணிக்கவேல்', 'பார்ட்டி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பல தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாகவும் பேசப்பட்டார்.
சமீபத்தில் நிவேதா பெத்துராஜ், போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது. அதில், போலீசார் நிவேதா பெத்துராஜின் காரை சோதனையிட வேண்டும் என கேட்க, அதற்கு அவர் அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நிவேதா பெத்துராஜ் போலீசாரிடம் மாட்டிக்கொண்டு விட்டாரா? காரை சோதனையிட ஏன் அனுமதிக்கவில்லை? காருக்குள் அப்படி என்ன வைத்திருக்கிறார்? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்தநிலையில், அந்த வீடியோ பற்றிய உண்மை வெளியாகி இருக்கிறது. அது 'பருவு' என்ற வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்துள்ளது. இதனால் அத்தனையும் நடிப்பா? என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
பருவு வெப் தொடரில் பவன் சதினேனி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்த தொடரை சித்தார்த் நாயுடு எழுதி இயக்கியுள்ளார். இத்தொடர் வரும் ஜூன் 14 ஆம் தேதி Zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த தொடரை சிரஞ்சீவி மகளான சுஷ்மிதா கொனிடெலா கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மண்ட் சார்பில் தயாரித்துள்ளார்.
ஆணவ படுகொலையை மையமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொடரின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. நிவேதா பெத்துராஜும் அவரது கணவனான பவன் சதினேனி எதிர்பாராத விதமாக ஒரு கொலையை செய்கின்றனர். கொலை செய்த நபரின் உடலை காருக்கும் மறைத்து வைத்து அதை எப்படி யாருக்கும் தெரியாமல் மறைக்க பெரும் முயற்சிகளை எடுப்பது போன்ற காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
- கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் SK23 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் பல வெற்றி படங்களை தயாரித்தும் வருகிறார்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சூரி நடிக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைதொடர்ந்து 'குரங்கு பெடல்' படத்தை அடுத்து எஸ் கே ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. கமலக்கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ராசி அழகப்பன் எழுதிய சிறுக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சைக்கிள் ஓட்ட தெரியாத அப்பாவுக்கும் எப்படியாவது சைக்கிள் ஓட்டியே ஆகவேண்டும் என்று துடிக்கும் மகனுக்கும் இடையே ஆன போராட்டத்தை மிகவும் நகைச்சுவையான கதைக்களத்துடன் உருவாக்கியுள்ளனர் . கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படம் தற்பொழுது ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சுந்தர் சி இயக்கிய படங்களில் அரண்மனை 1,2,3 போன்ற படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன.
- இதில் தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சுந்தர் சி தமன்னாவிற்கு அண்ணனாக நடித்திருந்தார்.
சுந்தர். சி தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர். தமிழ் சினிமாவிற்கு பல நல்ல திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
அவர் இயக்கிய படங்களில் அரண்மனை 1,2,3 போன்ற படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன. காமெடி கலந்த ஹாரர் படமாக வெளியான இந்த படங்கள் ஹாலிவுட் திரையுலகில் சில திரைப்படங்களை ஃப்ரான்சிஸ் திரைப்படங்கள் சிலவற்றை இருக்கும், ஃபெண்டாஸ்டிக் 4, ஃபைனல் டெஸ்டினேஷன், ஃபாஸ்ட் அண்ட் ஃபுரீயஸ் என்ற அந்த வரிசையில் தமிழ் சினிமாவிற்கு ஃப்ரான்சிஸ் திரைப்படமாக உருவாகிக் கொண்டு வருகிறது அரண்மனையின் 1,2,3 பாகங்கள்,
இந்நிலையில் அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் கடந்த மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இதில் தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சுந்தர் சி தமன்னாவிற்கு அண்ணனாக நடித்திருந்தார்.
மேலும் ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்த படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூலிலும் 100 கோடியை தாண்டி இந்தாண்டின் முதல் வெற்றிபெற்ற தமிழ் படமாக அமைந்தது.
இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்திருந்த நிலையில் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. 30 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் இந்த படமானது வருகின்ற ஜூன் 21ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஸ்டார் திரைப்படம் கடந்த மே 10 அன்று வெளியானது.
- இதில் கவின் உடன் இணைந்து லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன், அதிதி பொஹங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
நடிகர் கவின் சின்னத்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கி தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தார். சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாப்பாத்திரத்தில் நடித்து அவருக்கென நடிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். அதன் பின்னர் தனது கடின உழைப்பினால் ஹீரோவாக உருவெடுத்து `நட்புனா என்னன்னு தெரியுமா' படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகினார்.
அதைத்தொடர்ந்து லிப்ட், டாடா போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். அடுத்ததாக ஸ்டார் திரைப்படம் கடந்த மே 10 அன்று வெளியானது. இந்த படத்தை பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கியிருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.
இதில் கவின் உடன் இணைந்து லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன், அதிதி பொஹங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தின் டிரைலர் மிகப்பெரிய கவத்தை பெற்ற நிலையில் படத்தின் மீது மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
ஸ்டார் திரைப்படம் வெளியானதில் இருந்து மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.ஆனாலும் வசூல் ரீதியாக திரைப்படம் வெற்றியைக் கண்டது. படத்தின் டிஜிட்டல் உரிமையை ஓடிடி தளமான அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. இன்று அமேசான் பிரைமில் ஸ்டார் திரைப்படம் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.