search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஸ்கி"

    • விஸ்கி ஐஸ்கிரீம் தொடர்பாக பேஸ்புக்கில் அவர்கள் விளம்பரம் செய்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
    • ஒரு கிலோ ஐஸ்கிரீமில் 60 எம்எல் விஸ்கி என்ற வீதத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விஸ்கி ஐஸ்க்ரீம் விற்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் சரத் சந்திரா ரெட்டி என்பவர் நடத்தி வந்த ஐஸ்கிரீம் பார்லரில் ஒரு கிலோ ஐஸ்கிரீமில் 60 எம்எல் விஸ்கி என்ற வீதத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    இது தொடர்பாகக் கிடைத்த தகவலின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 11.5 கிலோ எடையுடைய 23 விஸ்கி ஐஸ்கிரீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் விஸ்கி ஐஸ்கிரீம் தொடர்பாக பேஸ்புக்கில் அவர்கள் விளம்பரம் செய்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற கடைகள் வேறு எங்கும் செயல்பட்டு வருகிறதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • எந்த மதுவை குடித்தாலும் அவர்களுக்கு அது ஒத்துப்போகாது.
    • விஸ்கி குடிப்பது உடல் சூட்டை அதிகரித்து பாலியல் உணர்வை தூண்டி விடும் என்கிற கருத்தும் குடிமகன்கள் மத்தியில் பரவலாகவே நிலவி வருகிறது.

    நாளைல இருந்து அந்தக் கருமத்தை கையில தொடவே கூடாது என்று சபதம் எடுக்கும் குடிமகன்கள் அடுத்த நாளே சபதத்தை முடித்துவிட்டு மீண்டும் உற்சாக உலகில் மிதக்க தொடங்கி விடுகிறார்கள்.

    இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் போதை பழக்கம் மிகவும் அதிகரித்தே காணப்படுகிறது. விதவிதமான மது வகைகள் இருந்தபோதிலும் விஸ்கி, பிராந்தி, பீர் ஆகியவற்றை மட்டுமே அதிக அளவில் மது பிரியர்கள் குடித்து வருகிறார்கள். மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற போதிலும் மது பிரியர்களால் அதனை முழுமையாக விட முடிவதில்லை.

    குறிப்பிட்ட வகை மதுவை அருந்தி பழகி விட்டவர்கள் வேறு எந்த பிராண்டையும் தொடுவதில்லை. அதே நேரத்தில் ஒரு சிலர் எது கிடைத்தாலும் ஒரு பிடி பிடித்து விடுவதும் உண்டு. காக்டைல் என்று அழைக்கப்படும் மது கலவையும் பார்களில் பரிமாறப்படுவது உண்டு. இப்படி மது குடிப்பவர்களை விதவிதமாக பட்டியல் போட்டுவிடலாம்.

    விஸ்கி பிராந்தியை மட்டுமே குடிப்பவர்களில் பலர் அதற்கு மட்டுமே அடிமையாகி தொடர்ந்து பிராந்தியையே குடித்து வருவார்கள். வேறு எந்த மதுவை குடித்தாலும் அவர்களுக்கு அது ஒத்துப்போகாது. அதேபோன்று பீர் மட்டுமே குடிப்பவர்களும் உண்டு. இந்த இரண்டும் நமக்கு ஆகவே ஆகாது. நமக்கு ஏத்த சரக்கு விஸ்கி மட்டும்தான் என்று கூறிக்கொண்டு போதையில் மூழ்கிக் கிடப்பவர்கள் ஏராளம். விஸ்கி குடிப்பது உடல் சூட்டை அதிகமாக்கி விடும் என்று கூறுவார்கள். இதனால் விஸ்கி குடிப்பது உடல் சூட்டை அதிகரித்து பாலியல் உணர்வை தூண்டி விடும் என்கிற கருத்தும் குடிமகன்கள் மத்தியில் பரவலாகவே நிலவி வருகிறது. இதனால் புது மாப்பிள்ளைகளுக்கு குடிமகன்கள் பலர் மாப்ள... அப்பப்ப விஸ்கிய உள்ள தள்ளிக்க... சரியா ? என்று கிண்டலாக கூறுவதும் உண்டு.

    இப்படி போதையில் விழுந்து கிடக்கும் விஸ்கி பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியாகியிருக்கிறது. தொடர்ச்சியாக விஸ்கி குடிப்பவர்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு அவர்கள் பெண்ணாக மாறிவிடும் ஆபத்து இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சி முடிவுகள் எச்சரிக்கின்றன.

    இது தொடர்பாக 100 குடிமகன்களுக்கு விஸ்கியை ஊற்றி கொடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்குள் 8 முறை மது கிண்ணங்களில் விஸ்கியை ஊற்றி கொடுத்து பரிசோதித்து பார்த்ததில் இது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் என்கிற அமிலம் விஸ்கி சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக சுரந்து அதுவே ஆண்மைத் தன்மையை காலி செய்வதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்று விஸ்கி சாப்பிடுபவர்கள் நாளடைவில் முழு மங்கையாக மாறி விடுவதாகவும் கூறப்படுகிறது. எனவே விஸ்கி பிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் சமூக வலைதள பதிவு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    இந்த சோதனை முடிவில் விஸ்கி சாப்பிடுபவர்கள் பெண்களைப் போல அமைதி சொரூபமாக காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. யாருடனும் அதிகமாக வாதாடாமல் அவர்கள் அடக்க ஒடுக்கமாக பெண் தன்மையுடன் மாறி இருந்ததாகவும் கூறப்படுகிறது. சில பெண்கள் என்னதான் தவறு செய்தாலும் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கமாட்டார்கள்.

    அது போன்ற உணர்வுகளையும் விஸ்கி குடித்த ஆண்களிடம் காண முடிந்துள்ளது. அதே நேரத்தில் அவர்கள் சம்பந்தம் இல்லாமல் அதிகமாக பேசிக் கொண்டிருந்ததும் தெரிய வந்திருக்கிறது. எனவே விஸ்கி பிரியர்களே உஷாராக இருங்கள். ஒருவேளை உங்கள் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு நீங்கள் பெண்ணாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் உங்களது வரலாறே மாறி விடும். ஆபத்தும் உள்ளது. நீங்கள் வசந்தாக இருந்தால் வசந்தியாக மாற நேரிடும். கண்ணனாக இருந்தால் கண்ணம்மாவாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    உஷார் உஷார் உஷார்....

    • மதுபான விற்பனையில் உலகின் 5-வது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.
    • ரெடி-டு ட்ரிங்க் பானங்கள் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக உருவெடுத்துள்ளன.

    சென்னை:

    இந்தியாவில் சமீபகாலமாக மதுப்பிரியர்கள் அதிகரித்து வருகின்றனர். எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்ற நிலை வந்துவிட்டதால் மது விற்பனையும் அதிகமாகி வருகிறது. மதுபான விற்பனையில் உலகின் 5-வது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.

    மதுபான வகைகளை ஒயின், ஜின் விற்பனை அதிகரித்த நிலையில் தற்போது விற்பனையில் விஸ்கி முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவின் மது விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு விஸ்கி விற்பனை ஆவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் 85 சதவீதம் 10 உள்நாட்டு பிராண்டுகள் பிடித்துள்ளன. விஸ்கியின் விற்பனை சதவீத 66 ஆக அதிகரித்து உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி 3.3 சதவீதம் விற்பனை ஆவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விஸ்கி சந்தையில் 96 சதவீத இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்புகளுக்கு பின்னர் மது வணிகம் மீண்டும் முன்னேற்ற பாதையில் உள்ளது. வோட்கா ரகம் விற்பனையில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இந்தியாவை பொருத்தவரை ரூ.53 பில்லியன் மதுபானங்கள் விற்பனை ஆவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் இதன் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெடி-டு ட்ரிங்க் பானங்கள் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக உருவெடுத்துள்ளன. கடந்த ஆண்டு 40 சதவீதம் இது விற்பனை ஆகி உள்ளது.

    மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் கூட இதன் எண்ணிக்கை விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் ஐந்தில் ஒரு பங்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒயின்களே விற்பனை ஆகின்றன. இதில் ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட ஒயின்களே அதிகம். தடையற்ற வர்த்தகம் காரணமாக இவை அதிகமாக இறக்குமதி ஆவதால் விற்பனையும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கிகளும் விற்ப னையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அமெரிக்க, ஜப்பானிய, கன்னட விஸ்கிகள் இருந்தா லும் இந்திய தயாரிப்பை மதுப்பிரியர்கள் விரும்புவதாக இந்திய மதுபான விற்பனை சங்கத்தின் தலைமை அதிகாரி நிதா கபூர் தெரிவித்தார். 

    ×