search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகிமை"

    • சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
    • ஸாயி நாதர் திருவடியே ஸம்பத் தளிக்கும் திருவடியே

    'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர்.

    ஷீர்டி சாயிபாபா, மிக உன்னதமான குருநாதர் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். எவருடைய வீட்டில் சாயிபாபாவின் திருநாமம் சொல்லப்படுகிறதோ அந்த வீட்டுக்கு பாபாவின் அருள் கிடைக்கும் என்பது சாயி பக்தர்களின் நம்பிக்கை.

    சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.


    ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

    சச்சிதானந்தாய தீமஹி

    தன்னோ சாய் ப்ரசோதயாத்.

    தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    ஷீரடி சாயி பாபாவின் த்யான ஸ்லோகம்:

    பத்ரி க்ராம ஸமத் புதம்

    த்வாரகா மாயீ வாசினம்

    பக்தா பீஷ்டம் இதம் தேவம்

    ஸாயி நாதம் நமாமி.


    ஷீரடி சாயி பாபாவின் மூல மந்திரம்:

    "ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி".

    ஸ்ரீ ஷீரடி சாய் பாபா தியானச்செய்யுள்:

    சாயிநாதர் திருவடி

    ஸாயி நாதர் திருவடியே

    ஸம்பத் தளிக்கும் திருவடியே

    நேயம் மிகுந்த திருவடியே

    நினைத்த தளிக்கும் திருவடியே

    தெய்வ பாபா திருவடியே

    தீரம் அளிக்கும் திருவடியே

    உயர்வை யளிக்கும் திருவடியே.

    • ஏழுமலையானுக்கு தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது.
    • இதுதவிர வேறு எந்த பாத்திரமும் கருவறையின் குலசேகரபடியை தாண்டது.

    திருப்பதி பிரசாதம்!

    திருமலை வாசனுக்கு படைக்கும் பிரசாதங்கள் தாய் வகுளாதேவி முன்னிலையில் தயாரிக்கப்படுகிறது.

    இதற்காக மடப்பள்ளி முன்பு தாய் வகுளாதேவி சிலை உள்ளது.

    இங்கு ஏழுமலையானுக்கு பிடித்த லட்டு பிரசாதத்துடன் பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்தரன்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரி பருப்பு கேசரி ஆகியவை பெருமளவு தயார் செய்யப்படுகிறது.

    ஆனால் ஏழுமலையானுக்கு தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவும் மண்சட்டியில் வைத்து படைக்கப்படுகிறது.

    இதுதவிர வேறு எந்த பாத்திரமும் கருவறையின் குலசேகரபடியை தாண்டது.

    பெருமாளுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர் சாதமும் ஒரு பக்தனுக்கு கிடைத்தால் அது அவன் செய்த பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது.

    • மூலவர் “சிலா தோரணம்” என்ற அபூர்வ கற்களில் வடிக்கப்பட்டு உள்ளது.
    • ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது.

    திருமலை அதிசயம்

    ஆஜானுபாகுவாய் சுமார் 9 அடிக்கு மேல் உயர்ந்து கமலபீடத்தின் மீது எழுந்து நிற்கும் ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமை மட்டுமே அபிஷேகம் நடக்கும்.

    மற்ற நாட்களில் எல்லாம் பச்சை கற்பூரம், புனுகுதைலம், வாசனை திரவியங்கள் சாத்தப்பட்டு தங்க, வைர, வைடூரிய நகைகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.

    மூலவர் "சிலா தோரணம்" என்ற அபூர்வ கற்களில் வடிக்கப்பட்டு உள்ளது.

    மூலவருக்கு தினமும் பச்சை கற்பூரம் சாத்தப்படுகிறது. இது அரிப்பை ஏற்படுத்தும் ஒருவகை அமிலம்.

    இதனை சாதாரண கருங்கல்லில் தடவினால் அது வெடித்துவிடும்.

    ஆனால் 365 நாளும் பச்சை கற்பூரம் சாத்தப்படும் ஏழுமலையான் மூலவர் சிலை வெடிப்பேதும் இல்லாமல் உள்ளது அதிசயமாக கருதப்படுகிறது.

    ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது.

    திருமலை 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.

    அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்.

    அபிஷேகம் முடிந்ததும் ஏழுமலையானுக்கு வியர்க்கும்.

    இதனால் பீதாம்பரத்தால் வியர்வையை வேதபண்டிதர்கள் ஒற்றி எடுக்கிறார்கள்.

    • ஏழுமலையானை திருமலை ஏறி நேரடியாக அவரை தரிசிக்க கூடாது.
    • அலமேல் மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும்.

    ஏழுமலையானை தரிசிக்கும் முறை!

    ஏழுமலையானை திருமலை ஏறி நேரடியாக அவரை தரிசிக்க கூடாது.

    அதற்கு ஒரு மரபு உண்டு.

    முதலில் கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமானை சேவிக்க வேண்டும்.

    ஏன் முதலில் கோவிந்தராஜனை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் இவர் வேங்கடவனின் அண்ணன்.

    சிதம்பரம் கோவிலில் திருச்சித்திரகூடத்தில் எழுந்தருளி உள்ள கோவிந்தராஜனே இவர் என்று புராண வரலாறு கூறுகிறது.

    தில்லை கோவிந்தராஜன் இந்த பகுதிக்கு வந்ததாகவும், திருப்பதியின் எழிலில் மனதை பறிகொடுத்து இங்கேயே தங்கி விட்டதாகவும், அவருக்காக இங்கு கோவில் எழுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    வேங்கடவன் கோவில் கொள்வதற்கு முன்பே இவர் இங்கே எழுந்தருளியதால் இவரை ஏழுமலையானின் அண்ணன் என்கிறார்கள்.

    முதலில் இவரை தரிசித்து விட்டு பின்னர் அலமேல் மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும்.

    இவரை தரிசித்து திருமலை ஏற அனுமதி பெற வேண்டும்.

    திருமலையில் வராக தீர்த்தகரையில் உள்ள வராகமூர்த்தியை தரிசித்த பின்னரே திருவேங்கடனை தரிசிக்க செல்ல வேண்டும்.

    • “வேங்”என்றால் பாவம்., “கடா” என்றால் தீர்த்து வைக்கும் சக்தியுள்ளவன் என்று பொருள்.
    • அஞ்சனாதேவி தவம் புரிந்து ஆஞ்சநேயரை பெற்ற காரணத்தினால் அஞ்சனாத்திரி.

    திருப்பதி திருமலை!

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 ஆலயங்களையும் "திருப்பதி" என்றுதான் அழைக்கின்றனர்.

    ஆனால் ஊரை சொல்லாமல் திருப்பதி என்று சொன்ன மாத்திரத்திலேயே அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய தலம் வேங்கடவன் கோவில் கொண்டுள்ள திருப்பதிதான்.

    "வேங்"என்றால் பாவம்., "கடா" என்றால் தீர்த்து வைக்கும் சக்தியுள்ளவன் என்று பொருள். அதனால்தான் வேங்கடேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

    கலியுக கடவுளாக பக்தர்களின் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் இஷ்ட தெய்வமாக திகழும் வேங்கடேஸ்வரரை பக்தர்கள் திருமலைவாசா, ஸ்ரீனிவாசா, ஏழுமலையான், ஏழுகொண்டலவாடு, பாலாஜி, கோவிந்தா, மலையப்பான் என்று பலவாறு உள்ளம் உருகி அழைத்து வழிபடுகிறார்கள்.

    அவரது பெயரை போல திருமலைக்கும் ஏழு பெயர்கள் உண்டு.

    ஆதிசேஷன் உருவத்தை ஒத்திருப்பதால் சேஷாசலம்.

    வேதங்கள் நிலை கொண்டு இருப்பதால் வேதாசலம்.

    கருடனால் பூலோகத்தை அடைந்த காரணத்தினால் கருடாசலம்.

    விருஷன் எனும் அரக்கன் மரணம் அடைந்து மோட்சம் பெற்றதால் விருஷபாத்திரி.

    அஞ்சனாதேவி தவம் புரிந்து ஆஞ்சநேயரை பெற்ற காரணத்தினால் அஞ்சனாத்திரி.

    வாயுதேவனுக்கும், ஆதிசேஷனுக்கும் உண்டான சண்டையால் ஆனந்தகிரி.

    பாவங்கள் தீர்க்கும் காரணத்தினால் வேங்கடாசலம் என அழைக்கப்படுகிறது.

    • வீர தீர சூரர்களாக வாழ ஆஞ்சநேயருடைய கடாஷம் அவசியம்.
    • ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.

    1. கிழக்கு முகம் - ஹனுமார் பிரதிவாதி சத்ரு உபத்திரவம் நீங்கும்.

    2. ஹயக்ரீவர் குதிரை முகம் - ஜன வசீகரணம் வாக்குசித்தி வித்தையில் அபிவிருத்தி உண்டாகும்.

    3. நரசிம்மம் சிங்கமுகம் - சகல வித பய தோஷங்களும் பூத ப்ரேத துர்தேவதா தோஷங்களும் நீங்கும்.

    4. வராகர் முகம் - சகல தரித்திரமும் நீங்கி மங்கள கரமான ஐஸ்வர்யம் உண்டாகும்.

    5. கருடன் முகம் - சகல விஷஜ்வர சரீர ரோகங்கள் நீங்கும் ஸகல விதமான தோஷங்களும் நீக்கப்பட்டு மேன்மை பெறலாம். ஸ்ரீ பஞ்சமுப ஆஞ்சநேயரை சேவித்தால் நவகிரஹ தோஷங்களும் நீங்கும்.

    என்றும் நமக்கு வேண்டியது பலம் ஆத்மபலம், மனோபலம், புத்திபலம், தேகபலம், பிராணபலம், சம்பத்பலம் இந்த ஆறு பலங்களையும் பெற்று வீர தீர சூரர்களாக வாழ ஆஞ்சநேயருடைய கடாஷம் அவசியம். ஸ்ரீஅனுமார் நிலம் நீர் மண் காற்று ஆகாயம் போன்ற பஞ்சபூதங்களையும் வென்றவர்.

    அனுமன், மகாபலிஷ்டன், அஞ்சனாகுமாரன், ராமேஷ்டன், வாயுபுத்திரன், அர்ஜுன சகன், அமிதபாராக்ரமன மாருதி, சுந்தரன, பிங்காட்சன, ஆஞ்சநேயன, மாருதிராயன, சஞ்சீவராயன், பஜ்ரங்பலி, ஸ்ரீராமதாசன, அனுமந்தையா, ஆஞ்சநேயலு, மகாவீர் போன்ற பல நாமங்கள் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உண்டு. ஸ்ரீ அனுமான் பஞ்சபூதங்களை மட்டுமா? பஞ்சேந்திரியங்களையும் கர்மேந்திரியங்கள் 5 ஞானேந்திரியம் 5 இவைகளையும் வசப்படுத்தியவர்.

    ×