என் மலர்
நீங்கள் தேடியது "7ஜி ரெயின்போ காலனி"
- 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டார்.
- 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி, மனோரமா, மயூரி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகி படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
7ஜி ரெயின்போ காலனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரவுள்ளது.
இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டு அறிவித்தார், இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், 7ஜி ரெயின்போ காலனி படம் குறித்து நேர்காணல் ஒன்றில் இயக்குனர் செல்வராகவன் பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
7ஜி ரெயின்போ காலனி பாகம் 2ன் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் 50 சதவீத படப்பிடிப்பு பணி மட்டுமே உள்ளது. அமைதியாக வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் படம் முதல் பாகத்தைப்போன்று ஹீரோ ஹீரோயினை துரத்தும் படமாக இது இருக்காது. கதிர் கதையைதான் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் எடுக்கப்போகிறேன். ஆனால், காலம் மாறிவிட்டது. 10 ஆண்டுகள் கழித்து என்ன என்பது தான் படம்.
2ம் பாகத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது முதல் பாகத்தின் முடிவுலேயே இருக்கிறது.
படங்கள் வெளியிட தேதி கிடைப்பது தீபாவளி, பொங்கலுக்கு தேதி கிடைப்பது போன்று ஆகிவிட்டது. பான் இந்தியா படங்கள், பெரிய பட்ஜெட் படங்களுக்கு மத்தியில் இதுபோன்று சின்ன படங்கள் வெளியிடுவதற்கு போராட வேண்டி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இயக்குனர் செல்வராகவன் தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன் அதன்பின் பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி'. இப்படத்தின் மூலம் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் தீவிரம் காட்டி வருவதாகவும் இதிலும் நடிகர் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, '7ஜி ரெயின்போ காலனி-2' திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிந்துள்ளதால் இதன் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதாகவும் இதில் கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கர் மற்றும் இவானாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
- எனக்கு படங்கள் குறையவில்லை. மலையாளத்தில் பிஹைண்ட் படத்தில் நடித்துள்ளேன்
- தமிழில் 2 படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் 2 படங்கள் தற்போது கைவசம் உள்ளன'.
தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்தவர் நடிகை சோனியா அகர்வால். காதல் கொண்டேன் (2003), 7ஜி ரெயின்போ காலனி (2004) புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் சோனியா அகர்வால் தற்போது ஆனந்த் பால்கி இயக்கத்தில் இசையமைப்பாளர் தரண்குமாருடன் இணைந்து 'பேய் காதல்' பாடல் ஆல்பத்தில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்ததால் பாடல் ஆல்பங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறீர்களா? என்ற நிருபரின் கேள்விக்கு சோனியாஅகர்வால் கூறியதாவது :-
"எனக்கு படங்கள் குறையவில்லை. மலையாளத்தில் பிஹைண்ட் படத்தில் நடித்துள்ளேன். தமிழில் 2 படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் 2 படங்கள் தற்போது கைவசம் உள்ளன'.

நான் நடித்த '7ஜி ரெயின்போ காலனி' படத்தை 'ரீ ரிலீஸ்' செய்து தற்போது வெளியிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். மேலும் நல்ல கதையுடன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் மீண்டும் நடிப்பேன்'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 7ஜி ரெயின்போ காலனி 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
- இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி, மனோரமா, மயூரி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. மேலும், இந்தப் படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
நீண்ட காலமாக இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

முதல் பாகத்தை தயாரித்த ஸ்ரீ சூர்யா மூவிஸ் தான் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
- திரிஷா நடித்த ‘ராங்கி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் '7ஜி ரெயின்போ காலனி' வெற்றி பெற்றதை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர்.
இதையடுத்து, ஆங்கில புத்தாண்டையொட்டி '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டார். இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முதல் பாகத்தை தயாரித்த ஸ்ரீ சூர்யா மூவிஸ் தான் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில், '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன். இவர் திரிஷா நடித்த 'ராங்கி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகியாக அனஸ்வரா ராஜன் வலம் வருகிறார். 2015-ம் ஆண்டு குறும்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் 2017-ம் ஆண்டு வெள்ளித்திரையிலும் 2019-ம் ஆண்டு வெளியான 'தண்ணீர் மத்தன் தினங்கள்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு திரிஷா நடிப்பில் வெளியான 'ராங்கி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 2023-ம் ஆண்டு வெளியான 'யாரியான் 2' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். 14 படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள அனஸ்வரா ராஜன் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.