search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்டி நட்ராஜ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீகாந்த் தேவா பக்தி பரவச பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.
    • இந்த பாடலை 'சூப்பர் சிங்கர்' ஸ்ரீநிதா மற்றும் அக்ஷரா லஷ்மி பாடியுள்ளனர்.

    சமீபத்தில் தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, முருகப்பெருமான் குறித்த பக்தி பரவச பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

    தேசிய விருது பெற்ற இயக்குனர் பவண் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. முன்னதாக, ஆடியோவாகவும், வீடியோவாகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ள இந்த பாடலை பிரபல நடிகரும் முருக பக்தருமான யோகிபாபுவும், பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டியும் வெளியிட்டனர்.


    'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர் ஸ்ரீநிதா மற்றும் சூப்பர் சிங்கர் அக்ஷரா லஷ்மி பாடியுள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் உலகெங்கும் வாழும் முருக பக்தர்கள் மெய் சிலிர்த்து கொண்டாடும் வகையில் உருவாகியுள்ளது.


    இந்த பாடலைப் பற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறியதாவது, "வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் மூலம் வெளியாக உள்ள 'முருகனே செல்ல குமரனே' பாடல் முருக கடவுளின் பாடல்களில் வரும் காலங்களில் முக்கிய இடத்தை பெறும். முருகப் பெருமானைப் பற்றி குழந்தைகள் கூட பக்தியோடு பாட வேண்டும் என்ற நோக்கத்தில் எளிய மெட்டில், எளிய தமிழில் இதை உருவாக்கியிருக்கிறோம். இந்த பாடலை கேட்டு தைப்பூசத்தில் முருகனை தரிசனம் செய்து, முருக பக்தியில் எந்நாளும் திளைத்திடுவோம்" என்றார்.


    பாடலை எழுதிய இயக்குனர் பவண், "இந்த வாய்ப்பை மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். சொல்ல சொல்ல இனிக்கும், அள்ள அள்ள அருளும் முருகப்பெருமானை பற்றிய அருமையான பாடல் அவன் அருளாலே மிகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்றார்.

    • சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'.
    • இப்படம் குறித்து நடிகர் நட்டி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.



    இந்நிலையில், 'கங்குவா' படம் குறித்து நடிகர் நட்டி நட்ராஜ் சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் படத்தை பாருங்கள், கங்குவா கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும். படம் மிகவும் அற்புதமாக வந்துள்ளது. படத்தின் திரையில் பிரம்மாண்டத்தை காண்பீர்கள். நானும் இப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் சந்தோஷம் என்றார்.

    • இயக்குனர் ஹாரூண் இயக்கத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெப்'. இந்த படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். மேலும், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, சுதர்ஷன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி 'வெப்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்றது.


    இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் நட்டி நட்ராஜ் பேசும்போது, எங்களுக்கு சம்பளத்துடன் ஜி.எஸ்.டி.யும் சேர்த்து கொடுத்த தயாரிப்பாளர்களில் 'வெப்' படத்தின் தயாரிப்பாளரும் ஒருவர்.


    இயக்குனர் ஹாரூண் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றாவிட்டாலும் அவர் முதல் காட்சியை எடுக்கும் போதே அவர் வேலை தெரிந்தவர் தான் என்பது தெரிந்துவிட்டது. இப்போதைய சூழலில் பலபேர் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அவை ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக் என்பது பற்றி விளக்கும் படம் தான் இந்த வெப் என்று கூறினார்.


    மேலும், இயக்குனர் ஹாரூண் பேசும்போது, பெரும்பாலும் ஒரு கட்டடம் அழகாக தெரிவதைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதன் அடித்தளம் யாருக்கும் தெரியாது. அதுபோலதான் தயாரிப்பாளர்களும் கார்த்திக் ராஜாவிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது, அப்பா (இளையராஜா) சைக்கோ படத்திற்கு ஒரு விதமாக பண்ணினார். நான் இதில் ஒரு புது மாதிரியாக முயற்சிக்கிறேன் என்று ஊக்கமளித்தார். நடிகர் நட்டி புது இயக்குனர் என நினைக்காமல் 100 சதவீதம் எங்களை நம்பினார். இந்த படத்தின் கதாநாயகிகள் தங்களுக்குள் ஆடை சம்பந்தமாக எந்த பிரச்சினையும் வரவில்லை என்று சொன்னார்கள்.. அதற்கு காரணம் இரண்டு பாடல்களைத் தவிர கிளைமாக்ஸ் வரை அனைவருக்கும் ஒரே காஸ்டியூம் தான். ஜெயிலர் திரைப்படம் வரும் அதே மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி" என்றார்.

    ×