என் மலர்
நீங்கள் தேடியது "போல்டபில் போன்"
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவு வெளியாகி உள்ளது.
- புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியான நிலையில், இது ஒன்பிளஸ் போல்டு அல்லது ஒன்பிளஸ் V போல்டு போன்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
எனினும், சமீபத்திய தகவல்களில் இந்த மாடல் ஒன்பிளஸ் ஒபன் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. தற்போது ஒன்பிளஸ் ஒபன் தான் அந்நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போனின் பெயராக இருக்கும் என்று கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் "We OPEN when others FOLD" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் தென்கொரியாவில் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், ஒன்பிளஸ் இந்த பதிவை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஒபன் பெயரில் அறிமுகமாகும் என்று உறுதியாகி இருக்கிறது.
புதிய ஒன்பிளஸ் ஒபன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இதன் வெளியீடு அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலுடன் ஒன்பிளஸ் நார்டு CE 3 மற்றும் ஏஸ் 2 ப்ரோ மாடல்களும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் இதே பெயரில் தான் விற்பனைக்கு வரும்.
- இந்த ஸ்மார்ட்போன் கொமெட் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 9 ப்ரோ போல்டு எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதே பெயரில் தான் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் 2024 ஆண்டு வெளியாகும் பிக்சல் சாதனங்களின் பெயரை மாற்ற இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக்சல் 9 மாடல் டோகே எனும் குறியீட்டு பெயரிலும், பிக்சல் 9 ப்ரோ கைமேன் என்ற பெயரிலும், பிக்சல் 9 ப்ரோ XL மாடல் கொமோடோ என்ற பெயரிலும் பிக்சல் 9 ப்ரோ போல்டு மாடல் கொமெட் என்ற பெயரிலும் உருவாக்கப்படுகிறது.
முன்னதாக கொமெட் பெயரில் உருவாக்கப்படும் ஸ்மார்ட்போன் பிக்சல் போல்டு 2 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. தற்போது இந்த சாதனம் பிக்சல் 9 ப்ரோ போல்டு பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
பெயரிடும் வழக்கத்தை கூகுள் மாற்றும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 9 சீரிசில் இணைக்கப்படும். இது சாத்தியமாகும் படச்த்தில் பிக்சல் போல்டபில் சாதனங்களில் குறிப்பிடத்தக்க மாற்றமாக அமையும்.
- கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு மாலை 6.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
- கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ, கேலக்ஸி ரிங் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி இந்த ஆண்டின் இரண்டாவது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது.
வழக்கம்போல இந்த நிகழ்வும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளம், யூடியூப் சேல் உள்ளிட்டவைகளில் ஸ்டிரீம் செய்யப்படும். இந்திய நேரப்படி கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வு மாலை 6.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 6, கேலக்ஸி Z ப்ளிப் 6, கேலக்ஸி வாட்ச் 7, கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா, கேலக்ஸி பட்ஸ் 3, கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ, கேலக்ஸி ரிங் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது.
கேலக்ஸி ரிங் மாடல் இந்திய சந்தையில் ரூ. 35 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்தை டிராக் செய்யும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் ப்ளூடூத் 5.4 மற்றும் ஒன்பது வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் என்று தெரிகிறது.
- குறைந்த எடையிலான டிசைன், அதிநவீன ஏ.ஐ. வசதிகளை கொண்டிருக்கிறது.
- 70 வாட் அல்ட்ரா சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது பேண்டம் V2 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்- பேண்டம் V போல்டு 2, பேண்டம் V ப்ளிப் 2 மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய பேண்டம் V2 சீரிஸ் மாடல்களில் ஏர்செல் பேட்டரி தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெல்லிய - குறைந்த எடையிலான டிசைன், அதிநவீன ஏ.ஐ. வசதிகளை கொண்டிருக்கிறது.
பேண்டம் V போல்டு 2 ஸ்மார்ட்போனில் 7.85 இன்ச் மெயின் ஸ்கிரீன், 6.42 இன்ச் கவர் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. பேண்டம் V ப்ளிப் 2 மாடலில் 6.9 இன்ச் மெயின் டிஸ்ப்ளே, 3.64 இன்ச் கவர் ஸ்கிரீன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 8 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

பேண்டம் V போல்டு 2 அம்சங்கள்:
மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்
12 ஜிபி ரேம்
512 ஜிபி மெமரி
50MP பிரைமரி கேமரா
50MP அல்ட்ரா வைடு கேமரா
32MP+32MP செல்பி கேமரா
5750 எம்ஏஹெச் பேட்டரி
70 வாட் அல்ட்ரா சார்ஜ்
15 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

பேணடம் V ப்ளிப் 2 அம்சங்கள்:
டிமென்சிட்டி 8020 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன்
8 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
50MP பிரைமரி கேமரா
50MP அல்ட்ரா வைடு கேமரா
32MP செல்பி கேமரா
4720 எம்ஏஹெச் பேட்டரி
70 வாட் அல்ட்ரா சார்ஜ்
விலை விவரங்கள்:
டெக்னோ பேண்டம் V ப்ளிப் 2 மாடலின் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் V போல்டு 2 விலை ரூ. 79 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை என்று டெக்னோ அறிவித்து இருக்கிறது. இரு மாடல்களின் விற்பனை டிசம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.