search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிங் ஆஃப் கோதா"

    • துல்கர் சல்மான் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
    • இப்படத்தின் முதல் பாடலான 'கலாட்டாக்காரன்' பாடல் இன்று (ஜூன் 28) வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.




    துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'கலாட்டாக்காரன்' பாடல் இன்று (ஜூன் 28) வெளியாகவுள்ளது. இந்நிலையில் துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    ×