search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேய்பிறை பிரதமை"

    • மாசி மாத பிரதமை உத்தமமானது.
    • அமாவாசை, பவுர்ணமி, அடுத்து வரும் நாள் பிரதமை.

    அமாவாசை, பவுர்ணமி, அடுத்த நாள் பிரதமை. சித்திரை கார்த்திகை மாத விரதங்கள் விசேஷமானவை. இந்த விரதத்தில் நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.

    வலக்கையில் ஜபமாலை, கரண்டி, இடக்கையில் கமண்டலம், உத்தரிணி கொண்டு ஜபம் இருக்க வேண்டும். அன்றைய தினம் விரதமிருந்து பகவானுக்குப் பாயாசம் நிவேதனம் செய்ய வேண்டும்.

    நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் இரவு பொழுது மட்டும் உணவு அருந்தி விரதமிருக்கலாம். அல்லது நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.

    இந்த விரதம் இருப்பதன் மூலம் செழிப்பான வாழ்வு, மரணத்துக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும். மாசி மாத பிரதமை உத்தமமானது. அன்றைய தினம் விரதமிருந்து அன்றிரவு நெய்யால் ஹோமம் செய்து அக்னியை ஆராதிக்க வேண்டும்.

    பிரதமை திதியை பாட்டிமை என்றும் சொல்வார்கள். பவுர்ணமிக்குப் பிறகு சந்திரன் குன்றுதலை அவ்வாறு சொல்வார்கள்.

    பவுர்ணமி முழு மதி நாள். மறுநாள் தேய்பிறை துவக்கம். அன்று சற்றே குன்றுதல். அதனை பாட்டியமை. அதாவது பிரதமை திதி. அமாவாசையாக இருந்தாலும், பவுர்ணமியாக இருந்தாலும் அடுத்த நாள் பிரதமை திதி.

    பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். இதனை ஒவ்வொரு கிராமத்திலும் பாட்டிமை, பாட்டிமுகம் என்றெல்லாம் பலவாறாக அழைப்பார்கள்.

    கதிர்வீச்சுக் குன்றுவதால் அன்று எதையும் செய்யக் கூடாது என்பார்கள். இருந்தாலும் அமாவாசைக்கு மறுநாள்தான் மிகவும் மோசமானது. அன்றைய தினம் எதையும் செய்யக் கூடாது என்பார்கள்.

    போர் தொடுத்தல், ஆநிரை கவர்தல் போன்றவை செய்யலாம் என்று கூறுவார்கள். போருக்கான துவக்கங்களை அன்று செய்யலாம்.

    சூரியனும், சந்திரனும் இணைவது அமாவாசை அன்று. இரண்டுமே இயல்பு நிலை மாறுபட்டவை. அவைகள் ஒன்றாக சேரும்போது சீக்கிரமாகவே ஆவி பிரியும்.

    அதனால்தான் கிராமங்களில், அமாவாசை, அதற்கு முதல் நாள், அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதிகளில் உயிர் நீப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    அதற்கு காரணம், ஆத்ம காரகன் சூரியனுடன், மனோகாரகன், உடலுக்கான சந்திரன் நெருங்கும்போது உடலின் வலிமை, உணவு உட்கொள்ளும் திறன் குறையும். ஏதோ ஒரு அசவுகரியம் உண்டாகும். திடீர் மாரடைப்பு எல்லாம் உண்டாகும்.

    அதனால்தான் உடல்நலம் குன்றி இருப்பவர்கள் பற்றி பேசும்போது, அமாவாசையை தாண்டுமா என்று சொல்கிறார்கள்.

    பிரதமை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.

    அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் முதலாவது திதி பிரதமை ஆகும். பிரதம எனும் வடமொழிச் சொல் முதலாவது என பொருள்படும்.

    15 நாட்களைக் கொண்ட தொகுதியில் முதல் நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள காலம் சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் முதல் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள காலம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் முதல் நாளுமாக இரண்டு முறை பிரதமைத் திதி வரும்.

    அமாவாசையை அடுத்துவரும் பிரதமையைச் சுக்கில பட்சப் பிரதமை என்றும், பூரணையை அடுத்த பிரதமையைக் கிருஷ்ண பட்சப் பிரதமை என்றும் அழைக்கின்றனர்.

    பிரதமைத் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு:

    சந்திர ஆண்டுப் பிறப்பு (சந்திரமான யுகாதி) - சித்திரை மாதச் சுக்கில பட்சப் பிரதமை.

    சக்திக்குரிய பூஜையாகிய நவராத்திரி பூஜைத் தொடக்கம் - ஐப்பசி மாத சுக்கில பட்சப் பிரதமைத் திதி.

    விநாயகருக்கான கார்த்திகைச் சஷ்டி விரதத் தொடக்கம் - கார்த்திகை மாதத் தேய்பிறைப் பிரதமைத் திதி.

    • `ஓம்' என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி
    • இதயமே `ஓம்' என்ற வடிவத்தில் அமைத்திருக்கிறது.

    விநாயகருக்கான ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இது தவிர மாதம் தோறும் தேய்பிறை சதுர்த்தி திதியில் சங்கடஹர சதுர்த்தி விரதம் வரும் கார்த்திகை மாதத் தேய்பிறை பிரதமை திதி வரையில் 21 நாட்கள் விநாயக சஷ்டி விரதம் அனுஷ்டிக்கலாம்.

    `ஓம்' என்பதின் அர்த்தம்

    `ஓம்'-என்பதற்கு நூறுக்கு அதிகமான அர்த்தங்கள் இருக்கின்றன. `ஓம்' என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி பிற மந்திரங்களின் முன்னோடியாக வரும் பீஜமந்திரம் இந்த சொல்லில் இருந்து தான் மற்ற மந்திரங்கள் பிறந்தன. இது படைப்புக்கடவுள் பிரம்மனின் நாத வடிவம். ஓம் என்பது முழுமையை குறிக்கிறது.

    இது பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் பொதுவானது.

    `ஓம்' என்பது சுற்றிக் கொண்டேயிருக்கும் பூமி கடவுளின் சங்கீத சுருதியுடன் சேர்ந்த ஒலி. இந்த `ஓம்' என்ற சொல் மனதை ஒருமுகப்படுத்தும் வித்தையைச் செய்கிறது. `ஓம்' என்ற நாதத்தில் கணபதி முழுமையாக இருக்கிறார். `ஓம்' என்பது ஆத்மாவின் இருப்பிடமான இதயத்தில் இருந்து 108 நாடிகளை இயக்குகிறது. இதயமே `ஓம்' என்ற வடிவத்தில் அமைத்திருக்கிறது.

    விநாயகரை துதிக்க மந்திரம்

    ஓம் சுமுகாய நம

    ஓம் ஏக தந்தாய நம

    ஓம் கபிலாய நம

    ஓம் கஜகர்ணகாய நம

    ஓம் லம்போதராய நம

    ஓம் விநாயகாய நம

    ஓம் விக்னராஜாய நம

    ஓம் கணாத்பதியே நம

    ஓம் தூமகேதுவே நம

    ஓம் கணாத்ய சசாய நம

    ஓம் பால சந்திராய நம

    ஓம் கஜானனாய நம

    ஓம் வக்ரதுண்டாய நம

    ஓம் சூர்ப்ப கன்னாய நம

    ஓம் ஏரம்பாய நம

    ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம

    மேலே உள்ள மந்திரத்தைச் சொன்னாலே, கஷ்டங்கள் நீங்கி வாழ்வு மலர்ந்து மணம் வீசும்.

    ×