search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சிமாநாடு"

    • கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்றது.
    • மேற்கு நாடுகள் இந்த சந்திப்பை பொறாமையுடன் மிகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இன்று மதியம் ரஷியா செல்ல உள்ளார். இன்று மற்றும் நாளை [ஜூலை 8-ஜூலை 9] ரஷியாவில் தங்க உள்ள மோடி அதிபர் புதினிடம் இருநாட்டு பொருளாதார, வணிக மற்றும் ராஜ்ய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலும் வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்றது. அதன்பின் 2022 , 2023 ஆகிய ஆண்டுகளில் மாநாடு நடைபெறாத நிலையில் தற்போது இந்த வருடத்திற்கான மாநாடு நடைபெறுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு பிறகு முதல் முறையாக மோடி ரஷியா செல்ல உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்த பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக கடைசியாக ரஷியா சென்றிருந்தார் மோடி.




     

    மோடியின் வருகை குறித்து ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்லின் செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஷ்கோவ் பேசுகையில், 'மோடி - புதினின் சந்திப்பு விரிவானதாக இருக்கும். மோடியின் வருகையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் கருதுகிறோம். இரு தலைவர்களும் ராஜ்ய உறவுகள் என்பதையும் தாண்டி இயல்பாக பல விஷயங்களை பேசுவர் என்று எதிர்பார்கிறோம்.மேற்கு நாடுகள் இந்த சந்திப்பை பொறாமையுடன் மிகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது. இதனாலேயே இந்த சந்திப்பு மமுக்கியத்துவம் பெருகிறது' என்று தெரிவித்துள்ளார்.  உக்ரைன் போரினால் ரஷியா மீது மேற்கு நாடுகள் பொருளாதர தடைகளை விதித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன், பிரேசில், இந்தியா உள்பட சுமார் 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
    • மாநாட்டில் ரஷியா பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை.

    துபாய்:

    உக்ரைன்-ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரு நாடுகளும் கோதுமை, பார்லி போன்ற உணவு தானியங்களின் ஏற்றுமதி மையமாக உள்ளன.

    ஆனால் இந்த போர் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால் இவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே போரை நிறுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் ரஷியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக உச்சி மாநாடு ஒன்றை அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடத்த உக்ரைன் முடிவு செய்தது. இதற்காக கடந்த மே மாதம் நடைபெற்ற அரபு லீக் மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.

    அப்போது போர் தொடங்கியது முதல் அரபு நாடுகள் நடுநிலை வகித்து வருகின்றன. எனவே இந்த போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்ய உதவும்படி அவர் கேட்டுக்கொண்டார். அதன்படி இதற்கான ஏற்பாடுகளை சவுதி அரேபியா அரசாங்கம் செய்து வருகிறது.

    இந்த மாநாடு செங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமான ஜெட்டாவில் நடைபெற உள்ளது. இதில் உக்ரைன், பிரேசில், இந்தியா உள்பட சுமார் 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் அமெரிக்கா சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனின் உயர் மட்ட அதிகாரி ஒருவரும் கலந்து கொள்ள உள்ளார்.

    அதேசமயம் இந்த மாநாட்டில் ரஷியா பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் இதற்கான தேதி உள்ளிட்ட மற்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த மாநாடு போரை நிறுத்த உதவுமா? என உலக நாடுகள் எதிர்நோக்கி உள்ளன.

    ×