என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜீவன் தொண்டைமான்"
- இலங்கை மலையக மக்களின் வளர்ச்சிக்காக இந்தியா ரூ.750 மில்லியன் வழங்கி உள்ளது.
- ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்தியா- இலங்கை இடையே தொடர்பு இருந்து வருகிறது.
சென்னை:
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் மந்திரியுமான ஜீவன் தொண்டைமான், இந்தியாவுக்கு ஒரு வார பயணமாக வந்தார். அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு சென்னை வந்தார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். பின்னர் தனது பயணத்தை முடித்து கொண்டு சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இலங்கை மந்திரி ஜீவன் தொண்டைமான், நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை 13-வது சட்டத்திருத்தம் தொடர்பான இலங்கை ஜனாதிபதியின் ஆவணத்தை இந்திய பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளோம். இலங்கை மலையக மக்களின் வளர்ச்சிக்காக இந்தியா ரூ.750 மில்லியன் வழங்கி உள்ளது. இதற்காக இந்திய மக்களுக்கும், மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் நிலை குறித்தும் பேசப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் தமிழக அரசு, இலங்கை மக்களின் வளர்ச்சிக்காக உதவிகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டு உள்ளோம்.
ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்தியா- இலங்கை இடையே தொடர்பு இருந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில்தான் அரசியலாக மாறி பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. கலாசார, பொருளாதார ரீதியாக தொடர்பு கொண்ட நாடு.
தமிழகத்தில் இருந்து அடிமைகளாக போனவர்கள்தான் மலையக மக்கள். தமிழகம் எங்களின் தொப்புள் கொடி உறவு. தமிழக அரசு எங்களுக்கு எந்தந்த உதவி செய்ய முடியுமோ அது சம்பந்தமாக முதலமைச்சரிடம் பேசி உள்ளேன்.
இந்தியா-இலங்கை இடையே உள்ள உறவு பலமானது. வேறு நாடுகளுடன் நெருக்கமான உறவு இருக்காது. இலங்கையில் சில தரப்பினர் இந்தியா பற்றி மக்கள் மத்தியில் தவறாக பரப்பி அரசியல் செய்கிறார்கள். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது உண்மையான நண்பன் யார்? என தெரியவந்தது.
இந்திய ரூபாயை டாலர், யூரோ போன்று இலங்கையில் பொது பணமாக பயன்படுத்த ஆலோசனை செய்து வருகிறோம். பிரதமரை சந்தித்தபோது இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையான யு.பி.ஐ. பண பரிவர்த்தனைச் முறையை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்