என் மலர்
நீங்கள் தேடியது "ஓலா எலக்ட்ரிக்"
- கடந்த 30-ந்தேதி பகிரப்பட்ட பதிவு இணைய பயனர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
- இதுவரை 1.42 லட்சத்திற்கு மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ள இந்த பதிவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு அறிவிப்பு வைரலாகி வருகிறது. அதில், நிறுவனத்தின் புதிய ஊழியராக பிஜ்லி என்ற நாயை பணி அமர்த்தி இருப்பதாக அறிமுகப்படுத்தி, அதற்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் பகிர்ந்துள்ளார்.
பிஜ்லி என்றால் ஆங்கிலத்தில் மின்சாரம் என்று பொருள். இது நிறுவனத்தின் மின்சார வாகனத்தின் வணிகத்தை குறிக்கிறது. நாயின் பணியாளர் குறியீடு '440வி' ஆகும். இது 440 வோல்ட்டுகளுக்கான அடையாளம் ஆகும். நாயின் அவசர தொடர்பு பி.ஏ. அலுவலகம் என பட்டியலிடப்பட்டுள்ளது. இது பவிஷ் அகர்வாலின் அலுவலகத்தை குறிக்கிறது. அதாவது பிஜ்லியின் இருப்பிடம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலக முகவரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 30-ந்தேதி பகிரப்பட்ட இந்த பதிவு இணைய பயனர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதுவரை 1.42 லட்சத்திற்கு மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ள இந்த பதிவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.