என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அதிபர் வேட்பாளர் கொலை"
- கடந்த 9-ந் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ படுகொலை செய்யப்பட்டார்.
- வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் வருகிற 20-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ படுகொலை செய்யப்பட்டார்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஈக்வடாரில் மேலும் ஒரு அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அதிபர் ரபேல் கொரியாவின் குடிமக்கள் புரட்சி கட்சியை சேர்ந்த தலைவரான பெட்ரோ பிரையோன்ஸ் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். அவர் சான்மேடியோ நகரில் வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டபோது சுட்டுக்கொலை
- நாடு முழுவதும் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது
தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் 8 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் பெர்னாண்டோ வில்லிவிசென்சியோ-வும் ஒருவர். பத்திரிக்கையாளரான அவர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
அதிபர் தேர்தலில் களம் இறங்கிய பெர்னாண்டோ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தலைநகர் குயிட்டோவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட பெர்னாண்டோ காரில் ஏறினார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் பெர்னாண்டோவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்த நிலையில், தலைநகர் குயிட்டோவில், ஆயுதங்களுடன் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஆறுபேரை கைது செய்துள்ளனர். ஆறு பேரும் வெளிநாட்டினர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த கொலை பயங்கரவாத தாக்குதலான அரசியல் குற்றம் என விவரித்த, ஈக்வடார் அதிபர், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே நாடு முழுவதும் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- ஈகுவடாரில் பிரசாரத்தின்போது அதிபர் வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- இதனால் அங்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குயிட்டோ:
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 8 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் பெர்னாண்டோ வில்லிவிசென்சியோவும் ஒருவர் ஆவார். பத்திரிக்கையாளரான அவர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
அதிபர் தேர்தலில் களம் இறங்கிய பெர்னாண்டோ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தலைநகர் குயிட்டோவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட பெர்னாண்டோ காரில் ஏறினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் பெர்னாண்டோவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது.
மேலும் பெர்னாண்டோவின் பாதுகாவலர்கள் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து குற்றவாளியை கைது செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஈக்வடாரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்துக்கு அந்நாட்டின் அதிபர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலையும், கண்டனத்தையும் தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிபர் கில்லர்மோ லாஸ்சோ கூறுகையில், சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது. சட்டத்தின் முழு பலமும் குற்றவாளி மீது காட்டப்படும். திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும். இதற்காக நாடு முழுவதும் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
- அதிபர் தேர்தலில் களம் இறங்கிய பெர்னாண்டோ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
- தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட பெர்னாண்டோ காரில் ஏறினார்.
குயிட்டோ:
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் 8 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் பெர்னாண்டோ வில்லிவிசென்சி யோவும் ஒருவர் ஆவார்.
பத்திரிக்கையாளரான அவர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அதிபர் தேர்தலில் களம் இறங்கிய பெர்னாண்டோ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தலைநகர் குயிட்டோவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட பெர்னாண்டோ காரில் ஏறினார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் பெர்னாண்டோவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. ஈக்வடாரில் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பெர்னாண்டோ, பிரசாரத்தை முடித்துவிட்டு காரில் ஏறியபோது துப்பாக்கியால் சுடப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக அதிபர் கில்லர்மோ லாஸ்சோ கூறும்போது, "இந்த குற்றம் தண்டிக்கப்படாமல் போகாது. குற்றவாளிகள் சட்டத்தின் முழு அளவை எதிர்கொள்ளாதவர்கள். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து ஆலோசித்து உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அவசர கூட்டத்திற்கு அழைத்து உள்ளேன்" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்