என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சூப்பர் சிங்கர்"
- இறுதிப்போட்டியில் ஐந்து பேர் பலப்பரீட்சை.
- இறுதிப்போட்டி கொண்டாட்டத்துடன் நடைபெறுகிறது.
தமிழக மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10-வது சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பலதரப்பட்ட பாடகர்கள் கலந்துகொள்ள, களைகட்டிய இந்த சீசனின் இறுதிப்போட்டி, ஐந்து இறுதிக்கட்ட போட்டியாளர்களுடன் இன்று நேரு உள் விளையாட்டரங்கில் கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெறவுள்ளது.
பாடகர்கள் விக்னேஷ், ஜீவிதா, ஜான் ஜோ, வைஷ்ணவி, ஸ்ரீனிதி, ஆகிய ஐந்து போட்டியாளர்கள் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர். விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றிநடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.
இந்த முறை நடந்த சூப்பர் சிங்கர் சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10 வது சீசன், பாடகர்களுக்கான முன்கூட்டியே திரைப்பட வாய்ப்புகள், சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் எனக் களை கட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றனர்.
- மகன், மனைவி உட்பட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
- பாடகருக்குத் தனது கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10-வது சீசன் துவங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் பாடகர் மனோவின் 40 வருட திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில், மனோ ஸ்பெஷல் சுற்று நடத்தப்பட்டது. இதில் சூப்பர் சிங்கர் சீனியர் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், மனோவின் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடினர்.
மனோவை கௌரவிக்கும் விதமாக, இசைத் துறையிலிருந்து இசையமைப்பாளர் சிற்பி, மால்குடி சுபா, உன்னிமேனன், கல்பனா முதல், பல இசை மேதைகள் கலந்துகொண்டனர். இதுவரை எந்த ஒரு மேடையிலும் அதிகமாகக் கலந்துகொள்ளாத, திரை ஆளுமை மனோவின் நண்பர், நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மனோவின் பாடல்களைக் கொண்டாடும் விதமாக சூப்பர் சிங்கர் ஜூனியர் முன்னாள், சீசன் 9 மற்றும் 10 போட்டியாளர்கள் இணைந்து, மனோவிற்காக ஒரு சிறப்புச் சங்கீத நிகழ்வை அரங்கேற்றினர். இதில் மனோவின் மகன், மனைவி உட்பட குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
இறுதியாக பாடகர் மனோ, இது என் வாழ்வில் மிக முக்கியமான மறக்கமுடியாத சந்தோச தருணம் என்று தெரிவித்ததோடு, இந்நிகழ்ச்சியில் மிக அற்புதமாகப் பாடிய சஞ்சீவ் எனும் பாடகருக்குத் தனது கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார்.
- மீடியா மேசன்ஸ்” நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரான ரவூபா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான பதிவிட்டுள்ளார்.
- சில சூழல்கள் சரி இல்லாதக் காரணத்தினால் நாங்கள் எங்கள் பயணத்தை விஜய் டி.வியுடன் தொடரப் போவதில்லை.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இயக்கி வந்த media masons நிறுவனம் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து பல ஹிட்டான ஷோக்களான "சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, Mr.Mrs சின்னத் திரை, சமையல் சமையல், கிச்சன் சூப்பர் ஸ்டார், சூப்பர் மாம்" போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கியது மீடியா மேசன் என்ற நிறுவனம்தான்.
இதுகுறித்து "மீடியா மேசன்ஸ்" நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரான ரவூபா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான பதிவிட்டுள்ளார்.
அதில், "தனது 25 வருட தொலைக்காட்சி பயணத்தை நாங்கள் விஜய் டிவியிடம் பணியாற்றினோம். விஜய் டி.வி எங்களின் இன்னொரு வீடு என்றும், துரதிஷ்ட்டவசமாக , சில சூழல்கள் சரி இல்லாதக் காரணத்தினால் நாங்கள் எங்கள் பயணத்தை விஜய் டி.வியுடன் தொடரப் போவதில்லை. இது வரைக்கும் எங்கள் பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் இயக்குனரும் சமீபத்தில் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி புதிய சீசனில் யார் நடுவராக வரப்போகிறார், யார் அதை தயாரிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10-வது சீசன் துவங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது.
- இம்முறை நடந்துவரும் நிகழ்ச்சியில் பல நெகிழ்வான சம்பவங்கள் நடந்து வருகிறது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 10-வது சீசன் துவங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாகப் பங்கேற்றுள்ளார்கள்.
பல பாடகர்களின் முன்னணி மேடையாகத் திகழும் இந்நிகழ்ச்சியின் இந்த 10-வது சீசனில், கர்நாடக சங்கீதப் பின்னணி, கனா பாடல் பின்னணி எனப் பலவிதமான களத்திலிருந்தும் பலவிதமான போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
இம்முறை நடந்துவரும் நிகழ்ச்சியில் பல நெகிழ்வான சம்பவங்கள் நடந்து வருகிறது. கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி, சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, தற்போது தமிழில் எம்.ஏ பட்டப்படிப்பை படித்து வருகிறார். இவரின் குரலும், பாடல்களும் அனைவரது பாராட்டையும் பெற்றது.
வெட்டிங்க் சுற்றில் பலகுரல்களில் பாடி அசத்திய லின்சி எனும் பாடகியின் கதையும் குரலும் பலரையும் நெகிழ வைத்தது. இசையால் காதலித்து இணைந்த தம்பதியாக ஜொலிக்கும் லின்சி தம்பதியின் திருமணத்தை ஒத்துக்கொள்ளாமல் இருந்த, லின்சியின் தந்தை நிகழ்ச்சிக்கு வந்ததோடு, லின்சியை கட்டியணைத்து பாராட்டியது அனைவரையும் உருக வைத்தது.
பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களுடன் பரபரப்பாக நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இந்த 10-வது சீசனிலும் களைகட்டி வருகிறது.
- சூப்பர் சிங்கர் ஜூனியர் 9-வது சீசன் சமீபத்தில் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியது.
- இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று 9-வது சீசன் சமீபத்தில் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 9-வது சீசன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஶ்ரீநிதா, ஹர்ஷினி, ரிச்சா, அக்ஷரா, அனன்யா, மேக்னா ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 -வது சீசன் டைட்டில் மற்றும் ரூ.60 லட்சம் வீட்டை ஶ்ரீநிதா பரிசாக வென்றவர். இரண்டாவது இடத்தை ஹர்ஷினி வென்றார். இவருக்கு பரிசுத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை பிடித்த அக்ஷராவிற்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
மேலும் மற்ற மூன்று போட்டியாளர்களான ரிச்சா, அனன்யா, மேக்னா ஆகியோருக்கு தலா மூன்று லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
- தமிழ் திரையுலகில் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.
- பிரபலங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் இணையத்தில் பெரும் பேசுப்பொருளாக மாறியது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றி நடைபோட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும்,சிறு வயதினருக்குமாக நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் விட இந்த முறை நடந்த சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசன் பாடகர்களுக்கான முன்கூட்டிய திரைப்பட வாய்ப்புகள், சர்ப்ரைஸ் தருணங்கள், பிரபலங்களின் வருகை, நெகிழ்வான சம்பவங்கள் என களைகட்டியது. பல அற்புத தருணங்கள் நிறைந்த இந்த சீசன் மக்களிடம் பெரும் ஆதரவைப்பெற்றது.
இந்த முறை நடந்த சீசனில் கலந்துகொண்ட திறமையாளர்கள் பலருக்கு நிகழ்ச்சி முடிவடையும் முன்னதாகவே திரைப்படத்தில் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி படத்தில் ஶ்ரீநிதா ஷிவாத்மிகா, ஹர்ஷினி, கோகுல் ஆகிய நால்வரும் இணைந்து ஒரு அட்டகாசமான பாடாலை பாடியுள்ளனர். நடுவராகக் கலந்துகொண்ட இசையமைப்பாளர் தமன் மற்றும் இசையமைப்பாளர் இமான் மூலமும் பல குழந்தைகளுக்கு பாடல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் எனும் பகுதி பலரின் மனதைத் தொட்டது. மிமிக்ரியில் கலக்கிய, எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஹர்ஷினி நேத்ரா, கானாவில் கலக்கிய கலர்வெடி கோகுல், தன் குரலால் கலக்கிய அக்ஷரா என பாடகர்கள் கலக்கிய தருணங்கள் இணையம் முழுக்க வைரலானது.
இது தவிர திரைப்பிரபலங்கள் மாரி செல்வராஜ் கலந்துகொண்ட நிகழ்ச்சி, ராதா அவர்கள் கலந்துகொண்ட போது நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் இணையத்தில் பெரும் பேசுப்பொருளாக மாறியது.
பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களால் களைகட்டிய சூப்பர் சிங்கர் ஜீனியர் சீசன் 9 இறுதிப்போட்டி வரும் ஞாயிறு மாலை நேரு உள் விளையாட்டரங்கத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. ஶ்ரீநிதா, ஹர்ஷினி, ரிச்சா, அக்ஷரா, அனன்யா, மேக்னா ஆகிய ஃபைன்லிஸ்ட்ஸ் கலந்துகொள்ளும் ஃபைனல்ஸ் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.
- சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கோலாகலமாக நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
- முந்தைய நிகழ்ச்சிகளை விட இந்த முறை நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்து வருகின்றது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த்திரையுலகிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும்,சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கோலாகலமாக நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளக் கூடிய போட்டியாளர்களின் பெயர்கள் இந்த வாரம் சின்ன சர்ப்ரைஸுடன் அறிவிக்கப்பட்டது.
இறுதிக்கட்டத்தை எட்டும் பாடகர்களுக்கு திரையில் வாய்ப்புகளை தருவதாக, இசையமைப்பாளர் தமன் வாக்குறுதி தந்திருந்த நிலையில், இறுதிக்கட்டப் போட்டியாளர்கள் விரைவில் நயன்தாரா நடிப்பில் வெளிவரவிருக்கும் அன்னபூரணி படத்தில் ஒரு அழகான பாடலைப் பாடியுள்ளனர்.
முன்னதாக இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஶ்ரீநிதா ஷிவாத்மிகா, ஹர்ஷினி, கோகுல் ஆகிய நால்வரும் இணைந்து அன்னபூரணி படப்பாடாலைப் பாடியுள்ளனர். இவ்வார நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் திறமையாளர்கள் பாடிய அன்னபூரணி பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது போட்டியாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.
முந்தைய நிகழ்ச்சிகளை விட இந்த முறை நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்து வருகின்றது. நடுவராக கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன் பாடகர்களோடு உற்சாகமாக கலந்துரையாடியதோடு, பலரின் வாழ்வை மாற்றும் வகையிலான வாய்ப்புகளையும் வழங்கி வருகிறார்.
மிமிக்ரியில் கலக்கிய, எளிமையான குடும்பத்தைச்சேர்ந்த சிறுமி ஹர்ஷினி நேத்ரா, கானாவில் கலக்கிய கலர்வெடி கோகுல் என பாடகர்களை உற்சாகப்படுத்திய தமன், நிகழ்ச்சியின் நடுவர் ஆண்டனி தாசனுக்கும் ஒரு பாடல் வாய்ப்பு தந்து அசத்தியுள்ளார் தமன்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திறமையாளர்கள் அனைவருக்கும் திரைப்பட பாடல் வாய்ப்பு தருவதாகவும் உறுதியளித்துள்ளார் தமன். இசையமைப்பாளர் தமனின் நெகிழ்ச்சியான செயல்கள் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
- ஏழு நகரங்களில் மக்களுடன், விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி கொண்டாட்ட விழாவைக் கொண்டாடியுள்ளனர்.
- 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்துள்ளது.
முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, நவராத்திரி விழாவைப் புதுமையான முறையில் தமிழக மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளது. தமிழ்நாடு எங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன், விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து, நவராத்திரி கொண்டாட்ட விழாவைக் கொண்டாடியுள்ளனர். 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்துள்ளது.
பொதுமக்கள் கலந்துகொள்ள திருவிளக்கு பூஜை, சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் என பல்வேறு நிகழ்வுகள் மூலம் அசத்தியுள்ளது விஜய் டிவி.
தமிழ் நாட்டில், காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடினர். இவர்களுடன் ஸ்டார் விஜய் முன்னணி பிரபலங்கள் பலரும் இவ்விழாவினில் பங்கேற்றனர்.
- சூப்பர் சிங்கர் ஜுனியர் பாட்டு நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமான 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
- சமூகத்தின் பல பக்கங்களிலிருந்து சிறுவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி இசைத்துறையில் மிகப்பெரும் மாற்றத்தை நிகழ்த்தி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இசைத்திறமையுள்ள பலரின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் சமூகத்தின் பல பக்கங்களிலிருந்து சிறுவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வார எபிசோடிலும் பல அற்புதமான தருணங்கள் நிகழ்ந்து வருகின்றன. நிகழ்ச்சியின் தொடக்க வாரத்தில், பங்கு கொண்ட சிறுவன் கலர்வெடி கோகுல், தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை, கொண்டாட்டத்துடன் பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தைக் கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் ஆசீர்வாதத்தைத் தந்தார் தமன். இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், கலர்வெடி கோகுல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்திருந்தார் இசையமைப்பாளர் தமன்.
நிகழ்ச்சி முடிவடைவதற்கு முன்னதாகவே தான் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி அசத்தியுள்ளார் தமன். கலர் வெடி கோகுலை விமானத்தில் ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு படத்திற்காக வாய்ஸ் டெஸ்ட் எடுத்துள்ளார். மேலும் கலர் வெடி கோகுலுக்கு முதல் சம்பளத்தை தந்து அசத்தியுள்ளார். கலர் வெடி கோகுல் பாடப்போகும் பாடல், படம் மற்றும் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் விவரங்கள் பின் வரும் வார நிகழ்ச்சிகளில் வெளியிடப்படவுள்ளது.
தமன் 'இது கலர் வெடி கோகுலின் திறமைக்குக் கிடைத்த பரிசென்றும் அவர் இன்னும் பல உயரங்களுக்கு செல்வார்' என்றும் பாராட்டினார். நிகழ்ச்சி முடிவடையும் முன்னர் கலர் வெடி கோகுல் சினிமா பாடகராக மாறியது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, போட்டியாளர்களுக்கு பெரும் ஊக்கத்தைத் தந்துள்ளது.
- சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து வெற்றி நடைபோட்டு வருகிறது.
- தற்போது கோலாகலமாக ஜூனியர் சூப்பர் சிங்கர் 9- வது சீசன் நடைபெற்று வருகிறது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடைபோட்டு வருகிறது. தற்போது கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9- வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வாரம் வெகு நெகிழ்வான தருணமாக, இளம் பாடகி ஹர்ஷினி நேத்ராவை, நேரில் பாராட்டி மகிழ்ந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
சாதி மறுப்பு திருமண தம்பதியின் மகள் ஹர்ஷினி நேத்ரா, எளிமையான குடும்பத்தைச்சேர்ந்த சிறுமி. விழுப்புரம் நகரைச் சேர்ந்த இவரின் தந்தை ஒரு சிறு கடை நடத்தி வருகிறார். தன் மகளின் பாடகி ஆசையை நிறைவேற்ற அந்த குடும்பமே உழைத்து வருகிறது. சமூகத்தில் பல இன்னல்களைத் தாண்டி, பல புறக்கணிப்புகளைத் தாண்டி, தங்கள் மகள் ஹர்ஷினி நேத்ராவை இசையில் ஊக்கப்படுத்தி வருகின்றனர் அந்த தம்பதி.
தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா அனைவரையும் கவர்ந்து வருகிறார். முன்னதாக மிமிக்ரி குரலில் பாடி ஆச்சரியப்படுத்தினார். தன் வாழ்வின் வலியைச் சொல்லும் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடி நடுவர்களைப் பிரமிக்க வைத்தார். முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன், பரியேறும் பெருமாள் படங்களிலிருந்து பாடல்களைப் பாடி அசத்தினார்.
ஹர்ஷினி நேத்ரா பாடிய பாடல்களின் வீடியோவை நடுவர் ஆண்டனி தாசன், இயக்குனர் மாரி செல்வராஜுக்கு அனுப்பியிருந்தார். ஹர்ஷினி நேத்ராவின் பாடல்களில் ஈர்க்கப்பட்ட மாரி செல்வராஜ் இந்த வார நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக கலந்துகொண்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் டெடிகேசன் ரவுண்ட் நடைபெற்றது. இந்த ரவுண்டில் பாடகர்கள் தங்களுக்குப் பிடித்த எவருக்கு வேண்டுமானாலும் பாடல்களை டெடிகேட் செய்து பாடலாம்.
இந்த நிகழ்ச்சியில் தனது பெற்றோருக்கு டெடிகேட் செய்து, மாமன்னன் படத்திலிருந்து நடிகர் வடிவேலு பாடிய 'தன்தானத்தானா' பாடலை பாடினார். ஹர்ஷினியின் பாடலை மேடையின் பின்னாலிருந்து மாரி செல்வராஜ் டிவியில் பார்த்தார். இயக்குனர் மாரி செல்வராஜ் நிகழ்ச்சிக்கு வந்திருப்பது, நடுவர்கள் உட்பட எவருக்கும் தெரியாது. ஹர்ஷினி நேத்ரா பாடி முடித்தவுடன் சர்ப்ரைஸாக மேடையேறிய இயக்குனர் மாரி செல்வராஜ் அவரை கட்டியணைத்துப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியதாவது:-
ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது, நம் கருத்து அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று தான் உருவாக்குகிறோம், உண்மையில் இன்றைய தலைமுறை அதைப்புரிந்து கொள்வதை நேரில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த குடும்பம் என்ன வலி அனுபவித்திருக்கும், இந்த குழந்தை என்ன மனநிலையில் இருப்பாள் என்பது எனக்குத் தெரியும், நானும் மேடைக்காக ஏங்கியவன் இன்று இந்த குழந்தை தன் உழைப்பில், இந்த மேடையைப் பெற்றிருக்கிறாள் என்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. யாருக்கும் பயப்படாமல், எந்த தடை வந்தாலும் கவலைப்படாமல் முன்னேறிப்போக வேண்டும் என ஹர்ஷினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது.
- இந்த பிரிவுகளிலிருந்து பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இந்த பிரிவுகளிலிருந்தும் பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில், இளம் சிறுமி சனு மித்ரா தனது அற்புத குரலில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். கடந்த வார நிகழ்ச்சியில் அவரின் கதையை பகிர்ந்து கொண்டபோது, மொத்த அரங்கமும் சோகத்தில் ஆழ்ந்தது. சனு மித்ராவின் இசை ஆசைக்கு, உறுதுணையாக இருந்த பாசமிகு தந்தை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் கட்ட ஆடிசனுக்கு அவரைக் கூட்டி வந்து செல்கையில், விபத்தில் பறிபோன கதையைப் பகிர்ந்து கொண்டார்.
சூப்பர் சிங்கர் இசைப்போட்டியில் ஜெயிக்க வேண்டும் எனும் அவரது தந்தையின் கனவை நனவாக்க, தன் தாயின் துணையுடன் போராடும் சனு மித்ராவின் பயணம் அனைவரையும் உருக வைத்தது. இதைத் தொடர்ந்து தொகுப்பாளிணி பிரியங்கா, என் தந்தையையும் என்னுடைய 11 வயதில் ஹார்ட் அட்டாக்கில் இழந்தேன். என் அம்மா தான் தந்தையை போல் பார்த்து கொண்டார். தந்தை நம்மை எப்போதும், நம்மோடு இருந்து, ஆசிர்வதிப்பார் என்று ஆறுதல் சொன்னார்.
இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் இசையமைப்பாளர் தமன், தன் தந்தை குறித்துப் பகிர்ந்து கொண்டார். அதில், ரயிலில் பயணிக்கையில் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டு என் தந்தை என்னுடைய 9 வயதில் தவறிவிட்டார் என தன் சோகத்தை பகிர்ந்தவர், சனுவிடம் "நாங்கள் அனைவரும் உன் கூட இருப்போம், எதற்கும் கவலைப்படக்கூடாது" என்று ஆறுதல் கூறினார். மேலும் ஆண்டனி தாசன் அவர்கள் அந்த சிறுமியின் துக்கத்தைப் போக்கும் விதமாக, அவர் தந்தை குறித்து ஒரு அருமையான பாடலை பாடி அனைவரையும் உருகவைத்தார். இந்த வாரம் நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்ததாக அமைந்தது.
- சூப்பர் சிங்கர் மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.
- சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல எளிமையானவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இந்த பிரிவுகளிலிருந்தும் பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல எளிமையானவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்து வருகின்றது.
கடந்த வார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா, மிமிக்ரி குரலில் பாடல்கள் பாடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஹர்ஷினி நேத்ரா எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஆவார். விழுப்புரம் நகரை சேர்ந்த இவரின் தந்தை ஒரு சிறு கடை நடத்தி வருகிறார். தன் மகளின் பாடகி ஆசையை நிறைவேற்ற அந்த குடும்பமே உழைத்து வருகிறது.
ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவாராக இருந்தாலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன் திறமையால் அனைவரையும் மயக்கி வருகிறார் ஹர்ஷினி நேத்ரா. கடந்த வார நிகழ்ச்சியில் 'ராசாத்தி' பாடல் பாடி அசத்திய அவர் அடுத்ததாக செய்த மிமிக்ரி தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி மற்றும் பாடகி தீ ஆகியோரின் குரலில் அச்சு அசலாக அவர்கள் பாடிய பாடலை பாடி அசத்தி அனைவரையும் மிரள வைத்தார். நடுவர்கள் அனைவரும் அவரின் திறமையை பார்த்து வியந்து அவரை வெகுவாக பாராட்டினர். அவர் மிமிக்ரியில் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. திறமையால் ஒளிரும் பலருக்கு ஒரு ஒரு சிறப்பான மேடையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்கி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்