என் மலர்
நீங்கள் தேடியது "பரிகாரங்கள்"
- எந்த பொருளையும் இலவசமாக வாங்கக்கூடாது.
- உங்கள் வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்க கூடாது.
வட இந்தியாவில் பலருக்கும் மிகவும் பிரசித்திபெற்ற நூல் லால்கிதாப். இந்திய ஜோதிட கைரேகை சாஸ்திரத்தை பற்றிய பண்டைய நூலான இதில் 12 ராசிகளுக்கும் சில எளிய மற்றும் சிறந்த பலன்களை தரக்கூடிய பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இதை பின்பற்றி வருகின்றனர்.
மேஷ ராசிக்காரர்களுக்கான பரிகாரங்கள்
* எந்த பொருளையும் இலவசமாக வாங்கக்கூடாது. ஒரு சிறு தொகை கொடுத்தாவது அதை வாங்க வேண்டும்.
* சிகப்பு நிற கைக்குட்டையை பயன்படுத்துவது மிகவும் அதிர்ஷ்டவசமாகும்.
* பின்னம் ஏதும் இல்லாத, டிசைன் இல்லாத வெள்ளிக்காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்துகொண்டால் வாழ்வில் நன்மை ஏற்படும். பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.
* சுவீட் அல்லது மிட்டாய் செய்பவராகவோ, சுவீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்பவராகவோ இருக்க கூடாது. இது உங்கள் அதிர்ஷ்டத்தை கெடுக்கும்.
* உங்கள் வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்க கூடாது.
* தாய் மற்றும் குரு போன்ற ஆன்மிக பெரியவர்களுக்கும், ஞானிகளுக்கு முடிந்த அளவு உதவி, சேவை செய்தல் வேண்டும்.
* உறங்கும் போது தலை பக்கத்தில் ஒரு செம்பு நிறைய நீர் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நீரை காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு உற்றி வரவும்.
இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் அனைத்தையும் நீங்கள் செய்து வந்தால் உங்களது வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சுபிட்சம் நிறைந்துவிடும், துன்பங்கள் குறையும்.
- ஒரு ஏழைக்கு பசுமாடு தானம் செய்யலாம்.
- மென்மையான ஆடைகள் மிகவும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.
* ஆடையில் நல்ல வாசனைத்திரவியம் (செண்ட்) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தை பெருக்கும்.
* சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.
* மனைவியை தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக்குறைவு, மன உளைச்சல், பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை.
* மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிற பூக்களை போடச்சொல்லலாம். இது தம்பதிகளுக்கு இடையே உள்ள தோஷ நிவாரணமாகவும், அன்யோன்யத்தை பெருக்குவதாகவும் அமையும்.
* பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்கு பசுமாடு தானம் செய்யலாம்.
* பட்டு, நைலான், பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் மிகவும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.
- பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்.
- பெண்களுக்கான சிறப்பு ராசிபலன்கள்.

மேஷம்
இந்த சனிப்பெயர்ச்சி இனிய பெயர்ச்சியாகவே உங்களுக்கு அமையப் போகின்றது. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் அகலும். புராதனக் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பணிபுரியும் பெண்களுக்கு வீடு, வாகனம் வாங்கக் கேட்ட உதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியிலும் பெருமை சேரும். சுய ஜாதக அடிப்படையில் தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் சொந்தங்கள் போற்றும் விதம் வாழ்வமையும்.

ரிஷபம்
இந்த சனிப்பெயர்ச்சி உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பெயர்ச்சியாக அமையப்போகின்றது. குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகள் நன்மையைத் தரும்.

மிதுனம்
இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் வந்து சேரும். இதுவரை இருந்த பற்றாக்குறை அகலும். கணவன்-மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. ஆரோக்கியம் சீராகும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், சகப்பணியாளர்களின் ஒத்துழைப்பும் திருப்தி தரும். உடன்பிறப்புகளும், உடனிருப்பவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.

கடகம்
இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாகப் பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். எதையும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் எதிர்கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க அனுசரித்துச் செல்வது உத்தமம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகளுக்கு உடனடியாக முடிவெடுக்க இயலாது. விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் உருவாகலாம். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

சிம்மம்
இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அடுத்தடுத்து விரயங்கள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாமல் இணக்கம் ஏற்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வீடு மாற்றம் விரும்பும் விதத்தில் அமையும். உடன்பிறப்புகளையும் கொஞ்சம் அனுசரித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு சகப்பணியாளர்களால் தொல்லை உண்டு. கேட்ட இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கும்.

கன்னி
இந்த சனிப்பெயர்ச்சி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்திலேயே அமைகின்றது. குடும்ப வருமானம் உயரும். கொடுக்கல்-வாங்கல்கள் சீராக இருக்கும். உடன்பிறப்புகள் வழியிலும். தாய் வழியிலும் உதவிகள் கிடைக்கும். கடன்சுமை குறையும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு மட்டுமல்லாமல் ஊதிய உயர்வும், வீடு, வாகனம் வாங்க கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.

துலாம்
இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் செயல்பட எதிர்மறை கருத்துக்களைத் தவிர்த்து நேர்மறை கருத்துக்களை மேற்கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது உத்தமம். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப்பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். கடன் பிரச்சினைகளை சமாளிக்கும் சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர். பக்கத்து வீட்டாரின் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

விருச்சிகம்
இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக வரவிற்கேற்ற செலவுகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தன்னம்பிக்கையும், தைரியமும், அயராத உழைப்பும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உடன்பிறப்புகளை அனுசரித்துச்செல்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் உறவு பலம்பெற விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். கடன் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க சிக்கனத்தைக் கையாள முயற்சி எடுப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும். சகப் பணியாளர்களால் அடிக்கடி தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

தனுசு
இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாகவே அமைகின்றது. பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியும் திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். கல்யாணக் காரியங்களில் இருந்த தடைகள் அகலும். நட்பால் நல்ல காரியங்கள் நடக்கும். ஆபரண சேர்க்கை உண்டு. விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். தடுமாற்றங்களும், தடைகளும் அகலும். ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல்-வாங்கல்களில் திருப்தி ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்து சேரும். வீடு வாங்க கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

மகரம்
இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவால் பெண்களுக்கு செல்வ நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். நல்ல காரியங்கள் இல்லத்தில் அடுத்தடுத்து நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணிபுரியும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தருவதோடு கேட்ட சலுகைகளும் கிடைக்கும். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் செய்ய முன்வருவர்.

கும்பம்
இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். வீடு மாற்ற மும், இட மாற்றமும் திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து செயல் பட்டால் மன அமைதி கிடைக்கும். பிள்ளைகளின் உயர்படிப்பின் விளைவாகவோ, வேலையின் நிமித்தமாகவோ வெற்றி உண்டு. உடன்பிறந்தவர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு சில பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கலாம். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. வழிபாட்டின் மூலம் வளர்ச்சியை கூட்டிக் கொள்ளலாம் என்பதால் குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும், தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் நன் மையை வழங்கும்.

மீனம்
இந்த சனிப்பெயர்ச்சி ஏழரைச் சனியாக உங்களுக்குத் தொடங்குகின்றது. எனவே எந்த நேரமும் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் மருத்துவச்செலவுகள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள் விரும்பும் வண்ணம் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தராது. நீங்கள் என்னதான் சிறப்பாகப் பணிபுரிந்தாலும் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காது. பிள்ளைகளின் வேலைவாய்ப்பு, திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சனிக்கிழமை விரதமும், சனி பகவான் வழிபாடும் நன்மை தரும்.
- அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.
- ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.
மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.
அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.
அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.
ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.
எண்ணெய் தானம் – கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.
காய்கறிகள் தானம் – பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.
காலணி தானம் – பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.
குடை தானம் – தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாக்கும். சுகம் தரும் இனிய குரல் வரும்.
நெய் தானம் – வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.
கம்பளி (போர்வை) தானம் – துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
பால் தானம் – சவுபாக்கியம்
பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர அபிவிருத்தி
தயிர் சாதம் / பால் சாதம் – ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் நிலைக்கும்.
தயிர் தானம் – இந்திரிய விருத்தியாகும்.
வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.
சொர்ண தானம் (தங்கம்) – கோடிபுண்ணியம் உண்டாகும்
பூமி தானம் – இகபரசுகங்கள்

வஸ்த்ர தானம் (துணி) – சகல ரோக நிவர்த்தி
கோ தானம் (பசுமாடு) – பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
திலதானம் (எள்ளு) – பாப விமோசனம்
குல தானம் (வெல்லம்) – குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி
சந்தனக்கட்டை தானம் – புகழ்
விதை தானம் – வம்ச விருத்தியை தரும்
மாங்கல்ய சரடு தானம் – காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.
பாய் தானம் – பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும்.
தீப தானம் – கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
தேங்காய் தானம் – நினைத்த காரியம் வெற்றி அடையும். பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அத்தகைய தானங்கள் பல வகைப்படும். கருட புராணத்தில் சொல்லப் பட்டிருக்கும் தான பலன்கள் என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
அன்னதானம் – விரும்பிய உலகத்தில் சுகித்திருப்பார்.
கோ தானம் – கோலோகத்தில் வாழ்வர்.
பசு கன்றினும் சமயம் தானம் – கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.
குடை தானம் – 1000 ஆண்டுகள் வருண லோகத்தில் சுகம் அனுபவிப்பார்.
தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமக்காளம், பாய் தலையணை இவகளில் ஏதேனும் ஒன்றைத் தானமாக செய்தால் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.
வஸ்திர தானம் – 1000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
ஆலயத்துக்கு யானை தானம் – இந்திரனுக்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.
குதிரையும், பல்லக்கும் தானம் – இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.
நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பர் –வாயுலோகத்தில் வாழ்வார்.
தானியங்கள், நவரத்தினங்கள் தானம் – மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.
பயன் கருதாது தானம் – மரணம் உன்னதமாய் இருப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.
பண உதவி – ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.
தாமிரப்பாத்திரத்தில் எள் தானம் – நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.
சுவையான பழங்களைத் தானம் – ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.
தண்ணீர் தானம் – கைலாச வாசம் கிட்டும்.
நற்செயலை விரும்பிச் செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.
தெய்வம் பவனி வரும் வீதிகளைச் செம்மைப்படுத்துபவர் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.
தானங்களும் அதன் பலன்களும் பற்றி தெரிந்து கொண்டு நமக்கு தேவையான பலனை தரக்கூடிய தானத்தை செய்து பலனை பெறுவோம்.
- நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய் தீபம் ஏற்றலாம்.
- கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு மன சஞ்சலம் அல்லது மனதளவில் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த கஷ்டத்தை ஒரு சில வழிபாட்டு முறைகளின் மூலம் விரட்டி விடலாம்.
1.வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
2. இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை (10.30-12.00) ராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

3. குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.
4. கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.
5. ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

6. ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
7. வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.
8. சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம்,ஏவல்நீங்கும். 21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
9. கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
10. ஜாதகப்படிசனிபகவானின்பாதிப்புகுறைய,திங்கட்கிழமை களில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.சிவன் கோவிலில் கால பைரவரையும்,விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை யும்வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.
11. சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.
12. பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய்,மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால்எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
13. மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.
14. கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.

15. வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்குசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடைபெறும்.
16. சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி,அர்ச்சனை செய்து வழிபட சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.
17. இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபட கடன் பிரச்சனை தீரும்.
18. செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.
19. விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.
20. ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.
21. பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.
22. புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.
23. வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
24. பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
25. வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.
26. தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.
27. எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழைத் தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.