search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலன்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோ தானம் செய்தால் பித்ரு சாபம் நிவர்த்தி ஆகும்.
    • தேன் தானம் செய்தால் இனிய குரல் கிடைக்கும்.

    நாம் இல்லாதவருக்கு செய்யும் தானதர்மங்கள் நமக்கு பல்வேறு நன்மைகளை தரும். எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்.

    பூமி தானம் - இகபர சுகங்கள்.

    ஆடை தானம் - சகல ரோக நிவர்த்தி.

    கோ தானம் - பித்ரு சாபம் நிவர்த்தி அடையும்.

    தில தானம் (எள்) - பாப விமோசனம் அடையலாம்.

    வெல்லம் தானம் - குலம் அபிவிருத்தி அடையும்.

    நெய் தானம் - வீடுபேறு அடையலாம்.

    தேன் தானம் - இனிய குரல் கிடைக்கும்.

    சொர்ண தானம் - கோடி புண்ணியம் உண்டாகும்.

    வெள்ளி தானம் - பித்ருகள் ஆசி கிடைக்கும்.

    தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்.

    கம்பளி தானம் - துர்சொப்பனம், துர்சகுன பயம் நிவர்த்தி அடையும்.

    பால் தானம் - சவுபாக்கியம்

    சந்தனக்கட்டை தானம் - புகழ் கிடைக்கும்.

    அன்ன தானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.

    தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்ட வாயால் போதும் என சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே. தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.

    திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது. திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    • நாக தீபம் - உயர் பதவி விருட்ச தீபம் - அரசு பதவி கிடைக்கும்
    • கொடி தீபம் - செல்வ மேன்மை மயூர தீபம் - மக்கட் பேறு

    கோவில்களில் இறைவனுக்கு ஷோடச தீபாராதனை என்னும் 16 வகையான தீப- தூப ஆராதனைகளைச் செய்வார்கள். அந்த ஆராதனைகளையும், அவற்றால் கிடைக்கும் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.

    1. தூபம் - உற்சாகத்தை அளிக்கும்

    2. தீபம் - விழிப்பு தரும்

    3. மகா தீபம் - அரச போகம்

    4. நாக தீபம் - உயர் பதவி

    5. விருட்ச தீபம் - அரசு பதவி கிடைக்கும்

    6. புருஷாமிருக தீபம் - நோய் நீங்கும்

    7. சூல தீபம் - ரோக நிவர்த்தி

    8. ஆமை தீபம் - தண்ணீர் பயம் நீங்குதல்

    9. கஜ தீபம் - செல்வம் கிடைக்கும்

    10. வியாக்ர புயி தீபம் - துஷ்ட நிவர்த்தி

    11. சிம்ம தீபம் - ஆயுள் விருத்தி

    12. கொடி தீபம் - செல்வ மேன்மை

    13. மயூர தீபம் - மக்கட் பேறு

    14. பூரணகும்ப தீபம் - சாந்தி, மங்களம் உண்டாகும்

    15. நட்சத்திர தீபம் - உலகாளும் திறமை

    16. மேரு தீபம் - மேலான நிலையை அடையலாம்.

    • எந்த செயலையும் ஈசியாக கற்று கொள்ள கூடியவராக இருப்பார்கள்.
    • வாழ்க்கையில் ஏதும் பிரச்சனை இருந்தால் அதனை ஈசியாக சமாளித்து விடுவார்கள்.

    குழந்தை பிறப்பது என்பதே ஒரு அற்புதமான நிகழ்வு, ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் என்ன குழந்தை பிறக்கும் என்பதில் அதீத ஆர்வத்தில் இருப்பார்கள். அப்படி குழந்தை பிறந்தவுடன் பிறந்த நேரத்தை குறித்து வைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஜாதகம் எழுதுவதற்கும் ராசி நட்சத்திரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள குழந்தை பிறந்த பின்பு அதை எழுதி வைத்துக் கொள்வார்கள். இந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுவது மூலம் அவர்களின் தலையெழுத்து எப்படி இருக்கும் என்பதை கண்டறிய முடியும்.

    அப்படி இருக்க செவ்வாய் கிழமை கிழமைகளில் குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு அந்த குழந்தைக்கு என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பயம் அதிகமாக இருக்கும். அப்படி செவ்வாய் கிழமை ஆண் குழந்தை பிறந்தால் பிள்ளைகளின் வாழ்நாள் பற்றிய பலன்களை பார்ப்போம்.

    செவ்வாய் கிழமையில் பிறந்த ஆண் குழந்தைகள் மிகவும் தைரியமானவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்தையும் மற்றவர்களின் உதவி இல்லாமல் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

    எந்த செயலையும் ஈசியாக கற்று கொள்ள கூடியவராக இருப்பார்கள். இவர்களிடம், கற்பனை திறன் அதிகமாக காணப்படும். மேலும் இவர்கள் சிறந்த தலைவர்கள் அல்லது விளையாட்டு துறையில் பணிபுரிபவராக இருப்பார்கள்.

    அவர்கள் எழுத்து, இசை, கலை அல்லது சுய வெளிப்பாட்டின் பிற வடிவங்களில் திறமை பெற்றிருக்கலாம்.

    இந்த கிழமையில் பிறந்தவர்கள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய காதல் வாழ்க்கையில் ஏதும் பிரச்சனை இருந்தால் அதனை ஈசியாக சமாளித்து விடுவார்கள். எவ்வளவு தான் பிரச்சனை வந்தாலும் அவர்களுடைய அன்பின் மூலம் ஜெயித்து விடுவார்கள்.

    செவ்வாய் கிழமை பிறந்த ஆண் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் இரத்தம் தொடர்பான பிரச்சனை ஏற்படும். மேலும் வாழ்க்கையில் காயங்கள், விபத்துகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் வண்டியில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்.

    இவர்களிடம் பொறுமை என்பது இருக்காது. இதனால் அவர்கள் செய்ய கூடிய செயல்களை அவசரமாக செய்து விட்டு அதன் பிறகு அதனை பற்றி சிந்திப்பார்கள். இவர்களிடம் கோபம் குணமானது அதிகமாக காணப்படும். இதனால் நிறைய உறவுகளை இழக்க நேரிடும். வெளிப்படையாக மனதில் உள்ள விஷயத்தை மற்றவர்களிடம் பேசுபவர்களாக இருப்பார்கள். இதனால் நிறைய நபர்களிடம் மோதல்கள் ஏற்படும்.

    • உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
    • உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.

    செம்பருத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, அதிகப்படியாக சேர்வதை தடுக்கும். உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். காய்ந்த இதழ்களை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    தேவையானபொருட்கள்:

    செம்பருத்தி இதழ் (காய்ந்தது ) – 5 இதழ்,

    தண்ணீர் 1 கப் – 150 மி.லி,

    நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் – 1 ஸ்பூன்.

    செய்முறை:

    பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் செம்பருத்தி இதழை போட்டு ௫ நிமிடங்கள் கொதித்தபின் வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும். ஒரு நாளைக்கு 2 – 3 தடவை குடிக்கலாம். காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது.

    மற்றொருமுறை:

    ஒரு கப் தண்ணீரில் புதிதாக பூத்த 4 செம்பருத்தி பூக்களை சேர்த்து அதனுடன் நான்கு துளசி இலை, சுக்கு, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். காலை நேரத்தில் பருக உடலும் மணமும் பலப்படும்.

    பலன்கள்

    * மன அழுத்தம் மற்றும் வேலை பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும். இதனால் உடலின் உள்ளுறுப்புகள் பாதிப்படையும். செம்பருத்தி டீ, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயம் சுருங்கி விரிவதற்கு வலிமையைத் தருகிறது.

    சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம்.

    செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. இந்த டீ கருப்பை கட்டிகளைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.

    * தற்போது ப்ளாக் டீ, க்ரீன் டீ போன்றவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளதால் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. செம்பருத்தி செடியில் இருந்து செய்யப்படும் செம்பருத்தி டீ அந்த வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

    செம்பருத்தி பூவிற்கு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு அதிக சளி உள்ளவர்கள், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செம்பருத்தி டீயைப் பருகலாம்.

    * பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி போன்றவற்றைப் போக்க செம்பருத்தி டீயைப் பருகலாம். கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீ பருகுவதால், ஹார்மோன்கள் சமச்சீராக இருக்க உதவுகின்றன.

    * கர்ப்பப்பை கட்டிகள் இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த செம்பருத்தி டீயை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிக விரைவாகவே நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

    • பெண்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் மஞ்சள் குங்குமம் நிலைத்து நிற்கும்.
    • வாலிபர்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் அழகும், அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்.

    ராகு கிரகத்தின் அதிபதியான துர்க்கை அம்மனை ராகு காலத்தில்தான் வழிபட வேண்டும்.

    குறிப்பாக திருமணம் நடைபெறாமல் கால தாமதமாகி வரும் கன்னிப்பெண்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் 13 வாரங்கள் பூஜை செய்து வந்தால் கண்டிப்பாக அந்த கன்னிக்கு மனம்போல் மணமகன் வாய்த்து திருமணம் சிறப்பாக நடக்கும்.

    பிள்ளை பேறு இல்லாமல் மன அமைதியற்ற ஆண்களும் அன்னை துர்க்கா தேவியை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் பூஜித்து வந்தால் அன்னையின் அருட்காடசத்தினால் அவரது மனைவி கருத்தரிப்பாள்.

    இதனால் பிள்ளை பேறு உண்டாகி சந்தோஷமடைவாள்.

    பெண்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் மஞ்சள் குங்குமம் நிலைத்து நிற்கும்.

    குழந்தை செல்வம் கிடைக்கும்.

    வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும்.

    ஆண்கள் துர்க்கையை வழிப்பட்டு வந்தால் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்வார்கள்.

    வியாபாரம் விருத்தியாகும்.

    செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். செல்வ வளம் பெருகும்.

    இளம் பெண்கள் துர்க்கையை வாரம் தவறாமல் செவ்வாய் கிழமைகளில் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும்.

    நல்ல கணவன் அமைவான்.

    வாலிபர்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் அழகும், அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்.

    அதனால் குடும்பம் செல்வக் களஞ்சியமாகும்.

    பிறக்கும் குழந்தைகளும் அறிவுள்ளவர்களாக இருப்பார்கள்.

    இதனால் வாழ்க்கையில் மேலும் மேலும் சந்தோஷம் உண்டாகும்.

    • ஞாயிற்றுக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்வதால் வறுமை நீங்கும்.
    • வெள்ளிக் கிழமைகளில் தேங்காய் சாதம் நைவேத்யம் செய்தால் மாங்கல்ய பலன் பெருகும்.

    ராகு கேது பெயர்ச்சியான ஜாதக ரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது.

    ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விவரம் தரப்பட்டுள்ளது.

    ஞாயிறு

    ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6.00 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும்.

    சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

    திங்கள்

    திங்கள்கிழமைகளில் காலை 7.30-9.00 க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.

    இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

    செவ்வாய்

    ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும்.

    இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    புதன்

    மதியம் 12.00 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும்.

    இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பதும், ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.

    வியாழன்

    வியாழக் கிழமைகளில் மதியம் 1.30-3.00 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும்.

    இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    வெள்ளி

    வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12.00 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம்.

    எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

    தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும்.

    இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

    சனி

    சனிக்கிழமைகளில் காலை 9.00-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.

    இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.

    • கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.
    • சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.

    நவக்கிரக தோஷ பரிகாரங்கள்

    1. சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்த்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி ,யாகத்தீயை எழுப்பி கோதுமை சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சவுராட்டிர ராகத்தில் சூரிய கீர்த்தனைகளைப் பாடி பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.

    2. சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்த்திரம் முத்துமாலை வெள்ளலரி என்பவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி எருக்கஞ்சமித்தினால் யாகத் தீயை எழுப்பி பச்சரிசி, பாலண்மை, தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்து, தூப தீய நைவேத்தியம் கொடுத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.

    3. அங்காரக பகவானுக்கு செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்து சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலி சமித்தினால் யாகத்தீயை எழுப்பித்த வரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரகக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.

    4. புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தாமரை என்பவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி நாயுருதி சமித்தால் யாகத் தீயை எழுப்பிப் பாசிப்பயத்தம் பருப்புப்பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து, நாட்டக்குறிச்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் புதக்கிரகதோஷம் நீங்கும்.

    5. குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம் புஷ்பராகமணி, வெண்முல்லை என்பவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி அரசஞ்சமித்தினால் யாகத்தீயை எழுப்பி கொத்து கடலைப் பொடி அன்னம் எலுமிச்சை பழ அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து அடாணாராகத்தில் குரு கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.

    6. சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்த்திரம் வைரக்கல் வெண்தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி அத்தி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி மொச்சைப் பொடியன்னம் தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சுக்கிரக் கிரகதோஷம் நீங்கும்.

    7. சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்த்திரம், நீலக்கல் நீலோற்பலம் (கருங்குவளை) என்பவற்றால் அலங்காரம் செய்து, சனிபவகானின் மந்திரங்களை ஓதி வன்னி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி, எள்ளுத்தானியம், எள்ளுப்பொடி அன்னம் என்பனவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து நல்ல எண்ணைத் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, யதுகுல காம்போதி ராகத்தில் சனிபகவான் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.

    8. ராகு பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம் கோமேதக மணி நீலமந்தாரை இலுப்பைப்பூ என்பவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி அறுகம் புல்லால் யாகத்தீயை எழுப்பி உளுந்து தானியம் உளுத்தம் பருப்புப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூபதீப நைவேத்தியம் கொடுத்து, ராகப்பிரியா ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ராகுக் கிரகதோஷம் நீங்கும்.

    9. கேது பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் செய்வித்து, பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லிமலர் என்பவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதித் தருப்பையினால் யாகத்தீயை எழுப்பிப் கொள்ளுதானியய் கொள்ளுப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்துச் சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும். 

    ×