search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.ஒய்.டி."

    • பி.ஒய்.டி. நிறுவனம் "சீ லயன்" என்ற பெயரை பயன்படுத்த டிரேட்மார்க் செய்து இருக்கிறது.
    • பி.ஒய்.டி. சீ லயன் எலெக்ட்ரிக் எஸ்.யுவி. மாடலில் 82.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம்.

    பி.ஒய்.டி. (பில்டு யுவர் டிரீம்ஸ்) நிறுவனம் உலகின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய சந்தையில் பி.ஒய்.டி. நிறுவனம் அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை விற்பனை செய்து வருகிறது. இது ஐந்து பேர் பயணிக்கக்கூடிய கார் மாடல் ஆகும்.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பி.ஒய்.டி. நிறுவனமும் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், பி.ஒய்.டி. நிறுவனம் "சீ லயன்" என்ற பெயரை பயன்படுத்துவதற்கு இந்தியாவில் டிரேட்மார்க் செய்து இருக்கிறது.

     

    கோப்புப் படம்

    கோப்புப் படம்

    அதிக மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பி.ஒய்.டி. நிறுவனம் டெஸ்லாவுக்கு சவால் விட நினைக்கிறது. இதோடு டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதோடு பூனே நகரில் 5 ஆயிரத்து 850 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை டெஸ்லா லீசுக்கு எடுத்துள்ளது.

    வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்த பி.ஒய்.டி. நிறுவனம் சீ லயன் என்ற பெயரில் எஸ்.யு.வி. மாடல் ஒன்றை டெஸ்டிங் செய்து வருகிறது. இது மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஆகும். இந்த கார் பி.ஒய்.டி. ஏற்கனவே விற்பனை செய்து வரும் அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் மேல் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது.

    பி.ஒய்.டி. சீ லயன் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலில் 82.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 700 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. இத்துடன் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இதில் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷனில் ஒற்றை மோட்டார், 204 ஹெச்.பி. வரையிலான திறன், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. ஆல்-வீல் டிரைவ் வசதி கொண்ட வேரியன்டில் 530 ஹெச்.பி. வரையிலான திறன் வெளிப்படுத்தும் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்படலாம்.

    ×