என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வடுக்கள்"
- தேன் பாரம்பரியமாகவே முகத்தில் இருக்கும் வடுக்களையும் தழும்புகளையும் போக்க கூடியது.
- வெங்காயம் அழற்சி, எதிர்ப்பு பண்புகளை கொண்டவை.
முகத்தில் அம்மை வடு, தழும்பு, காயங்கள் போகணுமா ? இதை செய்துபார்த்து பயன் அடையுங்கள்
உடலில் காயங்களினால் ஏற்படும் தழும்பு ஆறாமல் இருந்தால் முகம், உடல் என எந்த இடத்தில் இருந்தாலும் அது அசெளகரியாகவே நினைக்க தோன்றும். அதிலும் அவை முகத்தில் வந்தால் அழகையும் குறைத்து காட்டும்.
தழும்புகள், வடுக்கள், காயங்கள் என எதுவாக இருந்தாலும் அதன் பாதிப்பை குறைத்து சருமம் பழைய தோற்றத்தை பெறுவதற்கு வீட்டு வைத்தியங்கள் உண்டு. எளிமையான முறையில் இதை சரி செய்ய உங்களுக்கு இந்த வைத்தியம் உதவும்.
எலுமிச்சை
எலுமிச்சை ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது தழும்புகளின் தோற்றத்தை மங்க செய்யும். குறிப்பாக முகப்பருக்கள், பருக்களினால் வந்த தழும்புகளை குணப்படுத்த இவை உதவும்.
எலுமிச்சை சாறு - 3 அல்லது 4 டீஸ்பூன் அளவு நீர்த்தது
காட்டன் பஞ்சு - சிறு உருண்டை
பாதிக்கப்பட்ட இடத்தை முதலில் க்ளென்ஸ் செய்யுங்கள். பின்னர் எலுமிச்சை சாறில் சிறு பஞ்சு உருண்டையை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை சுத்தம் செய்யவும். பிறகு வெளியில் செல்வதாக இருந்தால் சன்ஸ்க்ரீன் அப்ளை செய்யவும். தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.
சிலருக்கு எலுமிச்சை சாறு சருமத்தில் ஒவ்வமையை உண்டாக்கலாம். அதனால் பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்துங்கள். ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
தேன்
தேன் பாரம்பரியமாகவே முகத்தில் இருக்கும் வடுக்களையும் தழும்புகளையும் போக்க கூடியது. தேனில் இருக்கும் பண்புகள் காயங்களை குணப்படுத்தக்கூடியவை. இதனுடன் பேக்கிங் சோடா இணைந்து பயன்படுத்தும் போது அது சரும வடுக்களை மங்கி காட்டும்.
தேன் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா- 1 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - தேவைக்கு
சுத்தமான மெல்லிய துணி - தேவைக்கு
தேனையும் பேக்கிங் சோடாவையும் நன்றாக குழைக்கவும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு மெல்லிய துணியை வெந்நீரில் நனைத்து அதன் மேல் போர்த்தி பிறகு சுத்தம் செய்யவும். தினமும் இரண்டு முறை செய்யலாம்.
வெங்காயம்
வெங்காயம் அழற்சி, எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. இது கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்ட சருமம் இயல்பு நிலைக்கு திரும்பும்.
வெங்காயச்சாறு - தேவைக்கு
சிறிய வெங்காயமாக இருக்கட்டும். வெங்காயத்தை தோல் உரித்து சாறு எடுக்கவும். இதை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும். முகத்தில் அதிகமான காயங்களும் தழும்புகளும் இருந்தால் தினமும் 3 வேளை இதை செய்து வரலாம். வெங்காயம் சருமத்துக்கு பயன்படுத்தினால் பிறகு மாய்சுரைசர் பயன்படுத்துவதை மறக்க வேண்டாம். கண்டிப்பாக மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.
சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழை அழற்சி எதிப்பு பண்புகளை கொண்டவை. இது சரும எரிச்சலை போக்க கூடியது. சருமத்தில் உண்டாகும் வடுக்களையும் போக்கும். சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும்.
சோற்றுக்கற்றாழை மடல்களில் இருந்து ஜெல் போன்ற பகுதியை எடுக்கவும். கடைகளில் கற்றாழை ஜெல் கிடைக்கும். இதை வாங்கி மசாஜ் செய்யலாம். தேவையான இடத்தில் இதை தடவி மென்மையாக மசாஜ் செய்து விடவும். இதற்கு பிறகு சருமத்தை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வரை இதை பயன்படுத்தலாம்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் வைட்டமின் சி அடங்கிய சிறந்த பொருள். இதை உள்ளுக்கு எடுப்பது போன்று வெளிப்புற பூச்சுக்கும் பயன்படுத்தலாம். இது வடுக்களை குறைக்க செய்யும். இது நாள்பட்ட தழும்புகளையும் வடுக்களையும் மாற்றி சருமத்தை புதியது போல் ஜொலிக்க செய்யும்.
நெல்லிக்காய் பொடி (கொட்டை நீக்கியது)
ஆலிவ் ஆயில் - தேவைக்கு
நெல்லிக்காய் பொடியை தேவைக்கு எடுத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து மென்மையான பேஸ்ட் போல் குழைக்கவும். இதை முகத்தில் அல்லது உடலில் என பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். ஒவ்வொரு மாற்று நாளிலும் இதை பயன்படுத்தலாம்.
உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு சாறு பைட்டோகெமிக்கல் சருமத்தில் இருக்கும் வடுக்களை மந்தமாக்க செய்யும். இது பிக்மெண்டேஷன் போக்குவதோடு கருவளையம், முகப்பரு மற்றும் பருக்களையும் போக்கும் தன்மை கொண்டவை. இது சரும நிறத்தை மீட்டு கொடுக்கும்.
உருளைக்கிழங்கு சாறு - 2 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு துருவி அரைத்து அதன் சாறை எடுக்கவும். அதில் காட்டன் உருண்டையை நனைத்து ஊறவைத்து முகத்தில் தடவி விடவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும். வாரத்தில் மூன்று நாட்கள் வரை இதை செய்து வரலாம்.
தழும்புகள், வடுக்களை போக்க வைட்டமின் ஈ மாத்திரைகள் உதவும். மருத்துவரின் அறிவுரையோடு வைட்டமின் ஈ மாத்திரைகள் எடுக்கலாம். வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் சேர்க்கலாம். இவை எல்லாம் சருமத்தில் இருக்கும் காயங்கள், வடுக்கள், தழும்புகளை அதன் தீவிரம் பொறுத்து மந்தமாக்கும் அல்லது குணப்படுத்தவும் செய்யும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்