என் மலர்
நீங்கள் தேடியது "கருப்பு உளுந்து சோறு"
- வயதுக்கு வந்த பெண்கள் முதல் வயதானவர்கள் வரை உண்பதற்கு ஏற்றது.
- கருப்பு உளுந்தஞ்சோறு எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.
இன்றும் பல கிராமங்களில் உளுந்தஞ்சோறு மக்களின் விருப்பமான உணவாக உள்ளது. உளுந்தில் நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் பி மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது வளர் இளம் பெண்களுக்கு ஏற்ற உணவாகும். இதை களி செய்து உண்பதால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.
இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது.
அரிசி மற்றும் உளுந்து கொண்டு செய்யப்படும் உளுத்தம் சோறு தமிழகத்தின் பராம்பரிய உணவு. இன்றும் பல கிராமங்களில் உளுத்தம் சோறு மக்களின் விருப்பமான உணவாக உள்ளது. பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உளுந்து சோறு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி- ஒரு கப்
கருப்பு உளுந்து (உடைத்தது)- அரை கப்
பூண்டு- 10 பல்
தேங்காய் துருவல்- கால் கப்
சீரகம்- ஒரு டீஸ்பூன்
வெந்தயம்- ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய்- ஒரு குழி கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை:
கருப்பு உளுந்தை ஒரு கடாயில் 5 நிமிடம் சிறிது நிறம்மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அரிசியையும், உளுந்தையும் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு அடி கனமான குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்கி (பூண்டு நிறம் மாறக்கூடாது) அதனுடன் அரிசி ஒரு பங்குக்கு 3 பங்கு என்ற அளவில் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.
பின்னர் ஒரு கொதி வந்தது. தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதையடுத்து குக்கரை மூடி 3 விசில் வரை விட்டு அடுப்பை அணைக்கவும். 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அதில் சிறிதளவு கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
சாப்பிடுவதற்கு முன்னர் சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும். இதற்கு நாட்டுக்கோழி குழம்பும், கறிக்குழம்பும் அல்லது எள்ளு துவையல் சேர்த்து சாப்பிடுவது சூப்பரான காமினேஷன்.