என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முடிகொட்டும் பிரச்சினை"
- ஷாம்புக்கு முன் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது.
- முடியை அலசுவது முடியின் ஒட்டும் தன்மையை நீக்குகிறது.
சூரிய ஒளி காரணமாக காற்றில் ஈரப்பதம் இருக்காது. இதனால் முடி உதிர்வு, மற்றும் உயிரற்ற முடி ஒரு பொதுவான பிரச்னையாக மாறும். அதே சமயம் தலைமுடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால், முடி தொடர்பான பல பிரச்னைகளும் ஏற்படும். முடி உதிர்தல், ஒட்டும் முடி, பொடுகு மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகள் இதில் அடங்கும்.
இதுபோன்ற முடி தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபட சிலர் தினமும் தலையை அலசுவார்கள். தினமும் தலைமுடியைக் கழுவுவது முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லதா? இது முடிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விளக்கங்களை இங்கே காண்போம்.
தினமும் தலை குளிப்பது முடி உதிர்வை ஏற்படுத்துமா?
கோடை காலமோ அல்லது குளிர் காலமோ, ஒவ்வொரு நபரும் தவறாமல் தலைமுடியை அலச வேண்டும். முடியை அலசுவது முடியின் ஒட்டும் தன்மையை நீக்குகிறது. இது தானாகவே முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கிறது. முடி உதிர்தலுக்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை.
தலைமுடியை தேவைக்கு குறைவாகக் அலசினால், முடி வலுவிழந்து, உச்சந்தலையில் அதிகப்படியான சருமம் உற்பத்தியாகி, முடியை ஒட்டும் தன்மையுடையதாக்கி, முடி உதிர்வை அதிகரிக்கும். இதேபோல், ஒருவர் தலைமுடியை அலசினால், அது உச்சந்தலையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக, உச்சந்தலையில் அதிக வறட்சி ஏற்படுவதுடன், முடி மிகவும் வறண்டு, உயிரற்றதாக மாறும். இதனால் தினமும் தலைக்கு குளிக்கக்கூடாது.
வாரத்திற்கு எத்தனை முறை தலை குளிக்க வேண்டும்?
வாரத்திற்கு எத்தனை முறை முடியை கழுவ வேண்டும் என்பது நபரின் முடி வகை மற்றும் முடி அடர்த்தியைப் பொறுத்தது. உதாரணமாக, ஒருவருக்கு சுருள் முடி இருந்தால், அவர்கள் 3-4 நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளிக்க வேண்டும். அதே நேரத்தில், ஒருவருக்கு எண்ணெய் பசை இருந்தால், அவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஒருவருக்கு மெல்லிய மற்றும் நேரான முடி இருந்தால், தலைமுடி அழுக்காக இருக்கும் போது தான் தலைக்கு குளிக்க வேண்டும்.
தலைக்கு குளிக்கும் போது கவனிக்க வேண்டியவை
தலைக்கு குளிப்பதற்கு முன், உங்கள் முடி வகையை நினைவில் கொள்ளுங்கள். ஷாம்பூவில் அதிக ரசாயனங்கள் பயன்படுத்தப் படுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தலைமுடியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், மருத்துவர் பரிந்துரைக்கும் ஷாம்பூவை மட்டும் பயன்படுத்தவும்.
ஷாம்புக்கு முன் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது. இது முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
- சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.
- ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது.
பெண்ணுக்கும், ஆணுக்கும் முடிகொட்டும் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. அதிலும் ஆண்களுக்கு முடி கொட்டி வழுக்கை வந்துவிட்டால் தன்னம்பிக்கை இழந்து அதனால் மிகவும் வறுத்த படுகிறார்கள். தற்சமயம் சிறு வயதினருக்கு கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் சமாளிக்க முடியும். ஆனால் தலை முடி உதிர்வதை தடுப்பதும், அதனால் தலையில் வழுக்கை ஏற்படுவதையும் நம்மால் சமாளிக்கவே முடியாது.
அவ்வாறு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட அந்த இடத்தில் எவ்வாறு மீண்டும் முடி வளர வைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க...
வெங்காயம் ஹேர் பேக்
சின்ன வெங்காயத்தை நன்ற அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த பேஸ்டை உங்கள் தலையில் நன்கு மசாஜ் செய்து தலையில் நன்கு படும் படி ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு தலையை அலசுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.
ஆலிவ் ஆயில் மசாஜ்
ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. இதனைத் தொடர்ந்து தலையில் தேய்த்து வர, நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்
தேன்- 1 டேபிள் ஸ்பூன்
பட்டை பொடி- 1 டேபிள் ஸ்பூன்
இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டு விட வேண்டும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.
முட்டை ஹேர்மாஸ்க்:
முட்டையின் மஞ்சள் கருவில் ரத்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒரு முட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கருவை தனித்தனியாக பிரித்துக்கொள்ளுங்கள். பின்னர் மஞ்சள் கருவில் ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
இதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து செய்து பின்னர் தலைக்கு குளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது.
- இளம்பெண்கள் ஹேர் கலரிங் செய்வதில் நாட்டமாக இருக்கிறார்கள்.
- இளம் வயதினர் ஸ்டைலாகவும், அல்ட்ரா மாடர்னாகவும் காட்டுவதாக எண்ணுகிறார்கள்.
அழகு நிலையங்களுக்கு அடிக்கடி அழக செல்வதில் விருப்பமுடைய இன்றைய இளம்பெண்களில் பலர், 'ஹேர் கலரிங்கிலும் மிகவும் நாட்டமாக இருக்கிறார்கள். இது தங்களை ஸ்டைலாகவும், அல்ட்ரா மாடர்ன் ஆகவும் காட்டுவதாக எண்ணுகிறார்கள். ஆனால் இவ்வாறு 'ஹேர் கலரிங்' செய்வது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்? அதன் விவரம் வருமாறு...
முடியின் வேர்களில் சேதம்:
ஹேர் கலர்களில் அமோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனப்பொருட்கள் உள்ளன. இவைமுடியில் முழுமையாக ஊடுருவி நிறத்தை தக்கவைக்க உதவுகின்றன. இவை மட்டுமின்றி மேலும் பல வேதிப்பொருட்களை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஹேர் கலர்களை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தும்போது, முடியில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசை முற்றிலும் அகன்றுவிடும். வறட்சி ஏற்படுதல், உடைதல். உதிர்ந்து போதல், முடியின் வேர்களில் சேதம் ஏற்படுவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம்.
ஒவ்வாமை:
ரசாயனம் கலந்த இந்த ஹேர் கலர்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் வரலாம். சில நேரங்களில் படை நோய், கொப்புனங்கள் உள்ளிட்ட பல உபாதைகளையும் உண்டாக்கக்கூடும்.
புற்றுநோய் அபாயம்:
ஹேர் கலர்களில் காணப்படும் வேதி மூலப்பொருட்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது வரையிலான ஆய்வுகளின் அடிப்படையில், ஹேர் கலர்களில் இருக்கும் ரசாயனத்தின் விளைவாக, சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்கள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
உளவியல்ரீதியான பிரச்சினைகள்:
ஹேர் கலரிங் என்பது சிலருக்கு ஸ்டைல் என்றாலும் பலர் வெள்ளை முடியை கருப்பாக மாற்றவும், சிலர் தங்களின் தோற்றத்தை அழகாக காண்பிக்கவும் இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கையை ஹேர் கலரிங் பூர்த்தி செய்யவில்லை என்றாலோ, அல்லது, இந்த ஹேர் கலர் செய்த காரணத்தால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ அவர்கள் மனதளவில் தளர்ச்சி அடைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.அவர்கள் சகமனிதர்களுடன் இணைந்து இருக்க, பழக, தயக்கம் காண்பிக்கும் நிலை ஏற்படுகிறது.
இவை எல்லாவற்றையும் தாண்டி, ஓரிரு முறை ஆசைக்காக ஹேர் கலரிங் செய்து பார்க்கிறேனே என்று கூறுபவர்கள், கீழ்க்கண்ட விஷயங்களை பின்பற்றுங்கள். ஹேர் கலர் செய்வதற்கு முன்பு முதலில் பேட்ச் டெஸ்ட் செய்துகொள்ளுங்கள்.
* ஹேர் கலர் பயன்பாடு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுங்கள்.
* தலைமுடி இயற்கையான வகையில் ஊட்டச்சத்தைப் பெற தேவையானவற்றை அடிக்கடி செய்யுங்கள்.
* ஹேர் கலரிங் செய்யும்போது நீண்ட இடைவெளி விடுவதை கவனத்தில் கொள்ளுங்கள்.
இவற்றை முழுமையாகப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டும் அல்ல, உடல் மற்றும் உளவியல் நலத்தையும் காத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது
- கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக சீயக்காய் செயல்படும்.
- சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும்.
கூந்தலுக்குப் போஷாக்கு தரும் சீயக்காய் தூளை வீட்டிலேயே இயற்கை செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம். கூந்தல் பிரச்னை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்னைகளும் தீரும்.
தேவையான பொருட்கள்:
சீயக்காய்-1 கிலோ
வெந்தயம்- 100 கிராம்
பாசிபயறு- 200 கிராம்
பூந்திகொட்டை-100 கிராம்
நெல்லிக்காய் (காய்ந்தது)- 50 கிராம்
ஆவரம்பூ- 50 கிராம்
செம்பருத்தி பூ- 20 பூ
நாட்டு பன்னீர் ரோஜா- 20 பூ
வெட்டிவேர்- 25 கிராம்
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து மிஷினில் கொடுத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடி நன்றாக ஆறியதும், அதனை ஒரு டப்பாவில் போட்டு உபயோகப்படுத்திக்கொள்ளலாம். ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது. தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தலைக்கு குளிக்கும் முன்னர் தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து சீயக்காய் குழைத்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் கூந்தல் மிருதுவாக இருக்கும். ஒவ்வொரு எண்ணெய் குளியளின் போதும் இந்த சீயக்காய் பொடியை பயன்படுத்தி பலன் பெறலாம். இந்த பொடி முடியை வளரச்செய்வது மட்டுமல்லாமல், பொடுகுத்தொல்லை, உடல் உஷ்ணம், முடி கொட்டும் பிரச்சினை, நரை முடி மற்றும் கூந்தலுக்கு வலுசேர்க்கும் வகையிலும் இது நமக்கு உதவியாக இருக்கும். செய்து பாருங்கள்.
சீயக்காய் தூள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் தூள் போட்டு தலைக்கு குளித்து வரலாம்.
சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக சீயக்காய் செயல்படும். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருந்து உங்கள் தலைச்சருமம் பாதுகாக்கப்படுகிறது.
சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும். இதனை பயன்படுத்தும் போது உங்கள் கூந்தல் மிருதுவாக மாறும், கூந்தலை வறட்சியாக்காது.
சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இது இயற்கையிலே முடியை மென்மையாக்கும் குணம் கொண்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்