என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இளநீர் ஜெல்லி"
- உஷ்ணத்தை தணிப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பது இளநீர்.
- வித்தியாசமாக இளநீர் அல்வா செய்யலாம் வாங்க.
உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பது இளநீர். இந்த இளநீரை வைத்து பலர் இளநீர் பாயாசம், இளநீர் சர்பத் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் இதுவரை நீங்கள் எத்தனையோ அல்வாவை சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இளநீர் அல்வா செய்யலாம் வாங்க. இது பார்ப்பதற்கு கிளாசியா இருப்பது மட்டுல்ல சுவைப்பதற்கு சூப்பராக இருக்கும். நாக்கில் வைத்தவுடன் கரைந்துவிடும் அளவிற்கு சுவையாக இருகும் இந்த இளநீர் அல்வா.
தேவையான பொருட்கள்:
இளநீர்- 1
கார்ன்பிளார் மாவு- ஒரு கப்
சர்க்கரை- அரை கப்
ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்
முந்திரி, பாதாம்- 10
செய்முறை:
ஒரு பவுலில் இளநீரின் தண்ணீரை ஊற்றி அதில் கான்பிளார் மாவினை கட்டி இல்லாமல் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரி, பாதாம் துண்டுகளை போட்டு வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் நாம் ஏற்கனவே கரைத்து வைத்துள்ள இளநீர் கலவையினை ஊற்ற வேண்டும். இதனை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த கலவை சிறிது கெட்டியாக ஆரம்பித்தவுடன் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
பின்னர் இளநீர் துண்டுகளில் உள்ள வலுக்கைகளை சிறிது சிறிதாக பொடித்து அந்த அல்வாவில் சேர்க்க வேண்டும். இளநீர் அல்வா கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் மற்று சிறிதளவு நெய் சேர்த்து கிளறி இறக்கலாம்.
அல்வா சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கண்டிப்பாக இளநீர் பிரியர்களுக்கு ஃபேவரட் அல்வாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
- நாம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே எளிய முறையில் ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுக்கலாம்.
- ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் சாப்பிடலாம்.
"பிரிக்க முடியாதது எதுவோ?" என்ற உடனே நினைவுக்கு வருவது திருவிளையாடல் டயலாக் தான். அதுபோல 'குழந்தைகளும் ஸ்நாக்சும்' என்று தான் பதில் வரும். அந்தளவுக்கு குழந்தைகள் தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
ஆனால் அவை உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறதா? அவர்கள் விரும்பும் வகையில் நாம் குழந்தைகளுக்கு வீட்டிலேயே எளிய முறையில் ஆரோக்கியமான ஸ்நாக் வகைகளை செய்து கொடுக்கலாம். ஆனாலும் குழந்தைகள் கடைகளில் விற்பனை செய்யக்கூடிய விதிவிதமான ஜெல்லிகளை வாங்கி சாப்பிடுகின்றனர்.
அதை நாம் குழந்தைகளுக்கு ஏற்றவகையிலும், ஆரோக்கியமாக எவ்வாறு என்று யோசிக்கும்போது இந்த இளநீர் ஜெல்லி நினைவுக்கு வந்தது. இந்த இளநீர் ஜெல்லி வித்தியாசமாகவும், குழந்தைகள் நிச்சயம் விரும்பும் வகையிலும் இருக்கும். வாங்க இந்த இளநீர் ஜெல்லி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடல்பாசி- 10 கிராம்
இளநீர்- 1
உப்பு- ஒரு சிட்டிகை
சர்க்கரை- 100 கிராம்
செய்முறை:
கடல்பாசியை நீரில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 250 கிராம் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ந்ததும் ஊறவைத்த கடல்பாசியை அதில் சேர்க்க வேண்டும். அதில் ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
அதன்பிறகு 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு அதில் இளநீரை சேர்க்க வேண்டும். அதனுடன் இளநீநில் உள்ள வழுக்கைகளை நீட்ட நீட்டமாக வெட்டி அதில் சேர்க்க வேண்டும். அதனை நன்றாக கிளறி ஒரு தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். ஆறியதும் ஜெல்லி பதத்தில் இருக்கும் இளநீர் ஜெல்லிகளை சதுரம் சதுரமாக வெட்டி பரிமாறவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் சாப்பிடலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்