என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கங்கா தேவி"
- வலது புறம் அன்னை பார்வதி தேவியையும் இடதுபுறம் கங்கா தேவியையும் வைத்துக்கொண்டு காட்சி தருகிறார்.
- பவிஷ்ய புராணத்தில் தூர்வான்டமி விரத பூஜையின் மகிமை குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லையிலிருந்து ஐம்பது கி.மீ தொலைவில் உள்ளது காரையார் பாணதீர்த்தம் என்ற அருவி.
அதன்கிழக்குக் கரையில் உள்ள சித்திவிநாயகர் வலது புறம் அன்னை பார்வதி தேவியையும்
இடதுபுறம் கங்கா தேவியையும் வைத்துக்கொண்டு காட்சி தருகிறார்.
பிரம்மஹத்தி தோஷம், இவரை வணங்குவதால் போய்விடும் என்று நம்புகிறார்கள்.
தூர்வாஷ்டமியில் அருளும் கணபதி
தூர்வா என்பதற்கு அருகம்புல் என்று பெயர்.
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமிக்கு தூர்வாஷ்டமி என பெயர் நிலைத்தது விநாயகப்பெருமானது அருள் அன்று கிடைப்பதால் தான்.
இந்த சுபநாளில் விரதம் இருந்து விநாயகரை அருகம் புல்லால் அர்ச்சித்து வணங்குபவர்களுக்கு நல்ல அறிவுள்ள குழந்தைகள் பிறப்பார்கள்.
பவிஷ்ய புராணத்தில் தூர்வான்டமி விரத பூஜையின் மகிமை குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர்.
- மேலும் அழகு, ஆயுள், உடல் நலம் வளம் பெறும்.
ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர்.
உலகத்தில் உள்ள சகல தீர்த்தங்களும், தங்களிடம் நீராடி மகள் போக்கிக் கொண்ட பாவங்கள் நீங்க,
துலா மாதத்தில் காவிரி நதியில் நீராடி புனிதம் பெறுகின்றன என்று சாஸ்திரம் கூறுகிறது.
பக்தர்களிடம் மிகவும் கருணை கொண்டவள். தட்சிண கங்கை என்ற சிறப்பு பெயரைக் கொண்டவள்.
சம்சார சாகரத் துன்பங்களிலிருந்து விடுவிப்பவள். மோட்சம் அளிக்கும் அன்னை என்று காவிரி அஷ்டகம் கூறுகிறது.
தன்னிடம் நீராடுபவர்களின் பாவங்களையும் அஞ்ஞானத்தையும் போக்கி,
சகல பாக்கியங்களையும் அளிப்பவள் காவிரி என்று காவிரி புஜங்கம் கூறுகிறது.
துலா மாதத்தில் காவிரியில் நீராடினால் எல்லா பாவங்களும் நசித்து விடும்.
மேலும் அழகு, ஆயுள், உடல் நலம் வளம் பெறும்.
செல்வச்செழிப்பு கிட்டும் என்று காவிரி மகாத்மியம் என்ற நூல் கூறுகிறது.
கங்கையை விட காவிரி புனிதமானது என்பதால், துலா மாதம் ஐப்பசி அமாவாசை அன்று கங்காதேவி,
மயூரத்துக்கு வந்து, நந்திக் கட்டத்தில் நீராடி, மக்கள் தன்னிடம் கரைத்தப் பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்கிறது சாஸ்திரம்.
ஐப்பசி அமாவாசையில் காவிரியில் நீராடி, நீர்க்கடன் செலுத்தினால், அவர்களின் முன்னோர்கள் சுர்க்கலோகம் சொல்வார்கள் என்பது நம்பிக்கை.
துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது.
இயலாத நிலையில், கடைமுகம் என்று சொல்லப்படும் ஐப்பசி 30ந்தேதி நீராடி பலன் பெறலாம்.
அன்றும் நீராட முடியாதவர்கள், முடவன் முழுக்கு என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் புனிதம் பெறலாம் என்கிறது சாஸ்திரம்.
துலாமாதத்தில் பிரம்மா, சரஸ்வதி, பார்வதி, லட்சுமி, இந்திராணி, தேவ மாதர்கள், சப்த கன்னியர்கள் முதலியோர், ஒவ்வொரு நாளும் காவிரியில் நீராடுவதாக ஐதீகம்.
புராணங்களில் சந்தனு மகாராஜா துலா காவிரி ஸ்நானம் செய்து, ஸ்ரீரங்க நாதரை வழிபட்டு பீஷ்மரைப் புத்திரனாக அடைந்தார் எனவும்,
அர்ஜுனன் காவிரியில் துலாஸ்நானம் செய்து, ஸ்ரீரங்கநாதரை துதி செய்து சுபத்ராவை மணம் புரிந்தார் என்றும் குறிப்பு உள்ளது.
மக்களுக்கு புத்தியும் முக்தியும் அளிக்கும் துலா மாதத்தில், காவிரியில் நீராடுபவர்கள் தன்னையும் தங்கள் குடும்பத்தினரையும்,
முன்னோர்களின் பாவங்களையும் போக்கிக் கொள்வதுடன் வளமான வாழ்வு காண்கிறார்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
துலா காவிரி நீராடல், அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றைத் தரும்.
எனவே, காவிரியை நினைத்தாலும், சிறப்பைக் கேட்டாலும் பாவங்கள் விலகும் என்கிறார் பிரம்மா, நதிதேவதைகளிடம்.
எனவே, பகலும் இரவும் சமமாக இருக்கும் ஐப்பசியில் (துலா மாதம்), நியமம் தவறாமல், பூஜைகளைச் செய்தும், விரதம் மேற்கொண்டும், காவிரி நதியில் நீராடினால் கட்டாயம் பலன் உண்டு.
- மகிமை வாய்ந்த கங்கை அவதாரத்தை கொண்டாடும் திருவிழாவை கங்கா தசரா என்பார்.
- கங்கையை பகீரதன் வரவழைத்த நாள் வைகாசி மாத வளர்பிறை 10ஆம் நாளில் தான்.
கங்கை அவதாரத்திருநாள்
புண்ணியம் தழைக்க செய்வது கங்கை நதி,
தேவலோகத்தில் மந்தாகினியாகவும், பாதாள உலகில் பாகீரதியாகவும், பூமியில் கங்கா நதியாகவும் ஓடும் இந்த நதியை திரிபாதக என்று போற்றுவார்கள்.
மகிமை வாய்ந்த கங்கை அவதாரத்தை கொண்டாடும் திருவிழாவை கங்கா தசரா என்பார்.
மிகவும் கடினமான வேலையை முயற்சியுடன் செய்து சாதிக்கும் செயலுக்கு பகீரதப் பிரயத்தனம் என்பார்கள்.
கங்கை பூமிக்கு வரக் காரணமே பகீரதன் தான். முன்னோர் செய்த பாவங்கள் விலகி அவர்களுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று பகீரதன் விரும்பினான்.
அவன் பாட்டன் முயன்று, அதன்பின் தந்தையும் முயற்சி செய்து முடிவில் பகீரதன் அதை முடித்தான்.
எனவே தான் கடினமான வேலை செய்வதை பகீரத பிரயத்தனம் என்கிறோம்.
இப்படி கங்கையை பகீரதன் வரவழைத்த நாள் வைகாசி மாத வளர்பிறை 10ஆம் நாளில் தான்.
அவன் தன் முன்னோரின் பாவங்களை நீக்கிய இந்நாள்பாஹர தசமியாகும்.
இதையொட்டி கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள திருத்தலங்களில் எல்லாம் கங்கையின் அவதாரத் திருவிழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
காசி, அகமதாபாத்தில் மக்கள் மேலும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். பத்துநாட்கள் நடைபெறும்.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நாளில் புனித கங்கையில் நீராடிவிட்டு இறைவனை வணங்கினால் செய்த பாவங்கள் நீங்கும், பித்ருக்களின் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பக்தர்கள் கங்கை நதிக்கரைக்குச் சென்று, "கங்கைத் தாயே" என குரலெழுப்பி மனமார வணங்குகின்றனர்.
பிரவகிக்கும் கங்கை நீரை கண்ணார தரிசிக்கின்றனர். தொட்டு வணங்கி தலையில் தெளித்துக் கொண்டு கங்கையை போற்றிப் புகழ்ந்தபடி மூழ்கிக் குளிக்கின்றனர்.
நதியிலேயே நின்று பூஜிக்கின்றனர். நீரில் அர்க்கியம் விடுகின்றனர். அதன்பின் நீரில் அடியில் உள்ள மண்ணை எடுத்து வணங்குகின்றனர்.
மாலையில் நதி ஓரம் முழுவதும் ஆலய அர்ச்சகர்கள் அடுக்கு தீபத்தை கங்கைக்கு காட்டி பூஜிப்பார்கள்.
நதி ஓர கடைகளில் இலையால் செய்த சிறுபடகில் விளக்கு வைத்து பூ வைத்து விற்கிறார்கள். அதை வாங்கி பக்தர்கள் ஆற்றில் மிதக்க விடுகிறார்கள்.
நதி நீரில் முதலை முதுகில் வெண்தாமரை அம்மலர் மீது வெண்ணிற ஆடையுடுத்திய கங்காதேவி கையில் தாமரை நீர்க்குடம் ஏந்தி இருகைகள் அபயவரத ஹஸ்தமாக புன்னகையுடன் அமர்ந்து காட்சி தருகின்றாள்.
தலைகிரீடத்தில் பிறை சந்திரனைக் காணலாம். கங்கை நதிக்கரைக்குச் செல்ல இயலாதவர்கள் மேற்சொன்ன கங்கையின் திருவுருவைமனதில் உருவகப்படுத்தி, கங்கையின் திருநாமம் கூறிக்கொண்டு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதை "கங்கை ஜமாக" என்று பூஜித்து வணங்கினால் கங்கை நதிக்கரையில் பூஜித்த பலன் கிடைக்கும்.
- “என் கணவரை யாராவது காப்பாற்றுங்கள்” என்று குரல் கொடுக்கிறாள் அன்னை.
- இந்த நாளில் இரண்டு புண்ணியவான்களையாவது பார்க்க வேண்டும் என்றார்.
கங்கையின் புனிதத்தை நிரூபித்த சிவபெருமான்
ஒரு தடவை விசாலாட்சி சிவபெருமானிடம், சுவாமி! இன்று நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள்.
இந்த நாளில் இரண்டு புண்ணியவான்களையாவது பார்க்க வேண்டும் என்றார்.
அதற்கு விசுவநாதர் "சரி வா" போகலாம். நான் கங்கை நீரில் மூழ்கியவன் போல் அலறுகிறேன்.
நீ கரையிலிருந்து என்னைக் காப்பாற்றச் சொல்லி கத்த வேண்டும். அதோடு "புண்ணியவான்கள் தான் என்னைக் காப்பாற்ற முடியும் என்றும் சொல்வாய்" என்றார்.
கங்கைக்கரையில், தீர்க்க சுமங்கலியாய் விசாலாட்சி நிற்கிறாள். பஞ்சுப் பொதிபோல் நரைத்த தலை விசாலமான விழிகள், லட்சணமான முகவசீகரம், விசுசநாதர் தளர்ந்த சிவந்த மேனியுடன் கங்கையில் மூழ்கி எழுகிறார்.
"என் கணவரை யாராவது காப்பாற்றுங்கள்" என்று குரல் கொடுக்கிறாள் அன்னை.
நீர் கொள்ளாத மனிதத் தலைகள். சிலர் விசுவநாதர் நீரில் போராடும் பக்கமாக விரைகின்றனர். சிலர் மேலிருந்து குதித்து நீந்துகின்றனர். சிலர் நீந்தத் தெரியாதே என தவிக்கின்றனர்.
"ஐயா! கருணை மனம் கொண்டவர்களே! புண்ணியவான்கள் தான் அவரைக் காப்பாற்ற முடியும். பாவிகள் அவரைத்தொட்டால் சுழலில் சிக்கி மாள்வார்கள்" என்றாள் பார்வதி.
பலர் பின்வாங்கி விட்டனர். இருவர் மட்டும் முன்சென்று விசுவாதரை இழுத்து வந்தார்கள்.
"நீங்கள் பாவமே செய்த தில்லையா?" என்று கேட்டாள் அன்னை
"தாயே! நான் பாவம் செய்தேனா... இல்லையா என்று தெரியாது. என் கண்முன் ஒரு உயிர் மரண அவஸ்தையில் தவிக்கும்போது அவரைக் காப்பாற்றும் முயற்சியில் நான் இறந்தாலும் தப்பிலை.
என்றாயிருந்தாலும் போகக்கூடிய உயிர் நல்ல காரியத்திற்காக முயற்சி செய்தோம் என்ற திருப்தியோடு போனால் என்ன?" என்றான் ஒருவன்.
இரண்டாமவன், "அம்மா நான் பாவியாகவே இருந்தாலும் கங்கையில் குதித்தவுடன் என் பாவம் போய் விடுகிறது. அப்படி நம்பித்தானே கோடானு கோடி பேர் இங்கு நீராட வருகிறார்கள்! புண்ணியவானாக மாற்றப்பட்ட நான் அவரைக் காப்பாற்ற தகுதி படைத்தவனாகவே நினைத்தேன்" என்றான்.
இருவரையும் ஆசீர்வதித்துவிட்டு அங்கிருந்து அம்மையும், அப்பனும் சென்றனர்.
"தேவி! இப்போது சொல்! கங்கை என் தலையில் இருக்கத் தகுதி பெற்றவள்தானா?" என்றார் சதாசிவன்.
"ஆம் சுவாமி! இரு நல்லவர்களின் சந்திப்பே என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது. தினம், தினம் எத்தனை தூயவர்களின் உரையாடல்களை தீயவர்களின் குறைகளைக் கேட்டு மவுனமாக இயங்கும் கங்கை மிகப் புனிதமானவள். தலையில் தாங்கிக் கூத்தாடும் அளவு பெருமை பெற்றவள்" என ஒப்புக்கொண்டாள் அன்னை.
அந்த கங்கையை தீபாவளி நாளில் அதிகாலை நினைத்து தொழுது நீராடி, பாவ எண்ணங்களை களைய வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்