search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ ராமர்"

    • நவநதிகளின் கன்னியர்களை சிவ பெருமான் தன்னோடு இங்கு அழைத்து வந்து இந்தக் கோவிலில் தான் தங்க வைத்தார்.
    • மறுநாள் மகாமக குளத்தில் நீராட வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தார்.

    மகாமகக் குளத்தின் வடக்கு கரையில் அமைந்துள்ளது.

    ராவணனைக் கொல்ல உருத்திராம்சம் பெற வேண்டி ராமர் இங்கு வந்து தவம் புரிந்து சிவ பெருமானை வேண்டினார்.

    சிவ பெருமானும் ராமருக்கு உத்திராட்ச ஆரோகணம் கொடுத்தார்.

    நவநதிகளின் கன்னியர்களை சிவ பெருமான் தன்னோடு இங்கு அழைத்து வந்து இந்தக் கோவிலில் தான் தங்க வைத்தார்.

    மறுநாள் மகாமக குளத்தில் நீராட வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தார்.

    காசியிலிருந்து வந்ததால் காசி விஸ்வநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

    இந்தக் கோவில் மேற்கு திசை நோக்கி இருக்கிறது. இறைவனும் மேற்குத் திசையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

    இங்குள்ள அம்பிகை தெற்கு திசையில் இருக்கிறார். அம்பிகையின் திருநாமம் விசாலாட்சி ஆகும்.

    நவகன்னி கன்னியர்கள் இங்கு காட்சி தருகிறார்கள்.

    முதலில் கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, நடுவில் காவிரி அடுத்து கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, சரயு என்று வரிசையாக இருக்கிறார்கள்.

    இதில் கங்கை மட்டும் சங்கு, சக்கரம் அபய வரதத்துடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றார்.

    • மக்கள் குளிர்ந்த மனமும் நிறைந்த வயிறுமாக இருக்க வேண்டுமென்று ஸ்ரீ ராமன் அவதரித்ததாக கூறுவார்கள்.
    • ஆகவே தான் அன்று எளிய பானமான பானகம், நீர் மோர் முதலியன நிவேதனம் செய்யும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

    சிலர் பத்து நாட்களுக்கு முன்பே ராமாயணம் படிக்க ஆரம்பித்து, ராம நவமியன்று பட்டாபிஷேகத்துடன் முடித்து, சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்வார்கள்.

    சாதாரணமாக தினமும் செய்யும் உணவை தயாரித்து பஞ்சாமிர்தம், பானகம், நீர் மோர் இவைகளை அதிகப்படியாக தயார் செய்து அதை நிவேதனம் செய்ய வேண்டும்.

    அதர்மங்கள் ஒழிந்து நன்மைகள் பெருக, மக்கள் குளிர்ந்த மனமும் நிறைந்த வயிறுமாக இருக்க வேண்டுமென்று ஸ்ரீ ராமன் அவதரித்ததாக கூறுவார்கள்.

    ஆகவே தான் அன்று எளிய பானமான பானகம், நீர் மோர் முதலியன நிவேதனம் செய்யும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

    • வெற்றி தரும் வெற்றிலை மாலை
    • ராமர் தந்த கணையாழியை (மோதிரத்தை) சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர்.

    வெற்றி தரும் வெற்றிலை மாலை

    வெற்றியை யார்தான் விரும்பமாட்டார்கள், ஆனால் வெற்றி தேவதையின் அருள்பார்வை நம்மீது பட வேண்டுமானால், என்னதான் அதிர்ஷ்டம் இருந்தாலும், உரிய வழிபாடு மிக, மிக அவசியமாகும்.

    அந்த வகையில் ஆஞ்சநேயருக்கும், வீரபத்திரருக்கும் வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    குறிப்பாக அனுமானுக்கு வெற்றிலை மாலை விசேஷமானது.

    அதன் பின்னணியில் உள்ள புராண சம்பவம் வருமாறு:

    இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டுச் சென்றார்.

    நீண்ட தேடுதலுக்குப் பிறகு சீதை அசோக வனத்தில் இருப்பதை அவர் கண்டு பிடித்தார்.

    ராமர் நலமாக உள்ள விபரங்களை சீதையிடம் அனுமன் தெரிவித்தார்.

    பிறகு ராமர் தந்த கணையாழியை (மோதிரத்தை) சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர்.

    சீதா தேவியும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

    தனது துன்பத்தைப் போக்கிய ஆஞ்சநேயருக்கு, விக்ராந்தன் (பராக்ரமம் உடையவன்), சமர்த்தன் (திறமையாகச் செய்து முடிப்பவர்), ப்ராக்ஞன் (அறிவாளி), வானரோத்தமன் (வானரர்களில் சிறந்தவன்) என்று நான்கு விருதுகளை வழங்கி கவுரவித்தாள்.

    அத்துடன்,பணிவுடன் வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று சீதாதேவி விரும்பினாள்.

    ஆனால் அப்போது சீதைக்கு அட்சதை போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

    இதனால் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து அதன் இலைகளைப் பறித்து, அதை அனுமன் மீது தூவி, மனதார ஆசீர்வதித்தாள்.

    அந்த வெற்றிலைகளை மாலையாகக் கட்டி அனுமனுக்கு போட்டு மகிழ்ச்சியடைந்தாள்.

    சீதா பிராட்டியார் கையால் கிடைத்த இந்த வெகுமதியை ஸ்ரீ ஆஞ்சநேயரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அன்று முதல் அனுமனுக்கு வெற்றிலை மாலை போடும் வழக்கம் ஏற்பட்டது..

    பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்கும் வெற்றிலையை சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது. என்றாலும் அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை சிறப்புக்குரியதாக மாறுகிறது.

    அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும் போது வெற்றிலையின் எண்ணிக்கை 2, 4, 6, 8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

    வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

    ஆகவே, ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாகக் கட்டி போடும் போது, இவ்வாறே இரண்டு வெற்றிலை ஒருபாக்கு அல்லது நான்கு வெற்றிலை மூன்றுபாக்கு என்பதாக இருக்க வேண்டும்.

    மேலும் வெற்றிலையை நரம்பில்லாத முன்பகுதி வெளியில் தெரியுமாறு மடித்து, வாழை நார் போன்றவற்றைக் கொண்டு, மாலையாகத் தொடுத்துப் போடலாம்.

    இதனால் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருளால் நாம் எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி உண்டாகும்.

    அது போல வீரபத்திரரின் அருளைப் பெறவும் வெற்றிலை மாலை வழிபாடே சிறந்தது.

    சென்னைக்கு அருகில் உள்ள அனுமந்தபுரத்தில் இருக்கும் வீரபத்திரர் ஆலயத்தில் வெற்றிலை மாலை வழிபாடு சிறப்பாக நடக்கிறது.

    ×