என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருவிடைமருதூர்"
- திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது சூரியனார் கோவில்.
- கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார்.
இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலும் சேதம் அடைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் காணப்படுவதாக அறிய முடிகிறது. சூரியனை முழுமுதற் தெய்வமாகக் கொண்டதுதான் சவுமார மதம் ஆகும். இந்தியாவில் ஒடிசாவில் பூரி நகருக்கு அருகில் கோனார்க் சூரியனார் கோவில் உள்ளது.
தமிழ்நாட்டிலும் மகாபலிபுரத்தில் சூரியனுக்கு சிலை உள்ளது. மார்க்கண்டேய புராணத்தில் `ஓம்' என்ற ஒலி உலகத்தில் முதலில் தோன்ற, அவ்வொலியின் விளைவாக `ஒளி' தோன்றியதாகக் கூறப்படுகிறது. பன்னிரண்டு ராசிகளில் சிம்ம ராசிக்கு அதிபதி, சூரியன்.
பன்னிரண்டு ராசிகளில் சூரியன் வலம் வருவதைக் கொண்டு, 12 சூரியர்கள் இருப்பதாகவும் சொல்வதுண்டு. சூரியனை வணங்க அகத்தியரால், `ஆதித்ய ஹிருதயம்' என்ற மந்திரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மந்திரத்தை, ராம- லட்சுமணர்களுக்கு விஸ்வாமித்திரர் உபதேசித்ததாக ராமாயணம் மூலம் அறிகிறோம்.
தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது, சூரியனார் கோவில். மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயத்தின், கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார். இவருக்கு இடதுபுறம் உஷாதேவியும், வலதுபுறம் பிரத்யுஷா தேவி என்னும் சாயாதேவியும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். சூரிய பகவான் தன்னுடைய இரு கரங்களிலும் செந்தாமரை மலரை ஏந்தி புன்சிரிப்புடன் அருள்கிறார்.
இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர், காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சியை தரிசித்த பின் சூரியனாரை வணங்குதல் முறையாகும். இந்த கோவிலில் சூரியனைத் தவிர, மற்ற கோள்களான சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன.
- அர்ச்சுனம் என்னும் வடசொல்லுக்கு மருதமரம் என்று பொருள்.
- அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம்.
வடக்கே வடுகநாட்டிலுள்ள மல்லிகார்ச்சுனத்திற்கும் ஸ்ரீ சைலம் , தெற்கே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்புடைமருதூர்க்கும் (புடார்ச்சுனம்)இடையில் இத்தலம் இருப்பதால் இதற்கு இடைமருது (மத்தியார்ச்சுனம்) எனும் பெயர் அமைந்தது.
அர்ச்சுனம் என்னும் வடசொல்லுக்கு மருதமரம் என்று பொருள்.
இம்மூன்று தலங்களிலும் தலவிருட்சம் மருத மரமே. சனிபகவான், சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
காசிப முனிவர்க்கு இடைமருதீசனாகிய மருதவாணர் பால கண்ணனாகக் காட்சி தந்துள்ளார்.
பட்டினத்தாரின் சீடர் பத்திரகிரியாருக்கும் அவரது சீடருக்கும் முக்தி கிடைத்த தலம்.
பட்டினத்தார் இத்தலம் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார். அப்பர், சுந்தரர்,ஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர் என்று நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்.
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம்.
அனுஷ நட்சத்திரத்திற்கு இது பரிகார தலம்.
- மூலவரான மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.
- கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.
மூலவரான மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.
கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.
இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும்.
மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
அப்பர்,சுந்தரர்,ஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர் என்று நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்.
- ஒரு மண்டலம், அரை மண்டலம், கால் மண்டலம் என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும்.
- திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர் பெரும் பயன் அடைவர்.
திருவிடைமருதூரில் மருதப் பெருமானை வழிபடுவதற்குக் கோவிலையடைந்து முதல் மதிலின் உட்புறத்தில் வலம் வருதலை அசுவமேதப் பிரதட்சிணம் என்பர்.
இந்த அசுவமேதப் பிரதட்சிணம் செய்வோர் எல்லா நலன்களும் பெறுவர். தொடங்குங்கால் முருகப்பெருமானை வழிபட்டுத் தொடங்க வேண்டும்.
ஒரு மண்டலம், அரை மண்டலம், கால் மண்டலம் என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும்.
வலம் வருவதும் நூற்றி எட்டு, இருபத்து நான்கு, பன்னிரண்டு, ஏழு என்ற அளவில் அமைய வேண்டும்.
திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர் பெரும் பயன் அடைவர்.
இதனை அடுத்துள்ளது கொடுமுடிப்பிரகாரம்.
கயிலாய மலையை வலம் வருவதாலாகும் பேறு இப்பிரகாரத்தை வலம் வருதலால் கிடைக்கும்.
- கோவிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.
- இந்த விநாயகக் கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை பூஜித்து வருகிறார்.
கோவிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.
இந்த விநாயகக் கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை சிறப்பாகப் பூஜித்து வருகிறார்.
தேவ கணங்கள் குறையாமல் கொண்டு வந்து அளிக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக இறைவனை வழிபடுகிறார்,
மனித சஞ்சாரம் இல்லாத இந்த இடத்தில், தமது அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருவதால்
இவருக்கு ஆண்ட விநாயகர் என்ற காரணப் பெயர் உண்டு.
- இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
- இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம்
இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும்.
இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
அஸ்வமேதப் பிரகாரம்:
இது வெளிப் பிரகாரமாகும்.
இந்தப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.
கொடுமுடிப் பிரகாரம்:
இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும்.
இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
ப்ரணவப் பிரகாரம்:
இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும்.
இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
- கல்யாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தம் சக்தி வாய்ந்தது.
- மேலும் இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கிறது.
கல்யாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தம் சக்தி வாய்ந்தது.
தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர்.
இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு.
இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது.
பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவா பரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான்.
பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முகதி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.
மேலும் இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கிறது.
பிரமஹத்தி தோஷம், நட்சத்திர தோஷம், சந்திர திசை, சந்திர புத்தி இவற்றால் ஏற்படும் தோஷம், சனிதிசை, ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமத்து சனி இவற்றால் ஏற்படும் தோஷம் யாவும் தீர்க்கும் தலமாக திருவிடைமருதூர் விளங்குகிறது.
ஆலய அமைப்பு முறைப்படி
திருவலஞ்சுழி-விநாயகர் ,
சுவாமிமலை-முருகன் ,
சேய்ஞலூர்-சண்டேசுரர் ,
சூரியனார்கோவில்-சூரியன்
முதலான நவகோள்கள்,
சிதம்பரம்-நடராஜர் ,
சீர்காழி-பைரவர்,
திருவாவடுதுறை-திருநந்தி
ஆகிய பரிவாரத் தலங்களுடன் அவற்றின் நடுவில் மூல மூர்த்தியாக இக்கோவிலில் நடுநாயகமாக ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் விளங்குகின்றார் என்பது சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.
- இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது.
- இக்கோவிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோவிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் கோவிலில் உள்ள மூகாம்பிகையைப் போலவே இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவிடைமரூதூர் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள்.
இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது.
வேறு எங்கும் இல்லை.
தனி சன்னதி இங்கு மட்டுமே. இக்கோவிலில் அம்பாள் சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது.
இக்கோவிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோவிற் கோபுர அமைப்பில் அமைந்து விளங்குகிறது.
இந்த சன்னதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார்.
- காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார்.
அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்து உமாதேவியை நினைத்து தவம் செய்தார்.
உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார்.
முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டு விட்டு இறைவனையும் காண வேண்டும் என்று கூற உமையம்மை முனிவர்களுக்காக இறைவனை எண்ணி சிவதவமிருந்தார்.
இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார்.
காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார்.
வியப்பு கொண்டு உமையம்மை இறைவனே பிரம்மன் முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை.
தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே என்று வினவ உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே.
நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர்.
அதனாலே பூசிக்கிறேன் என்றார்.
முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெறுவாராயினர் என்று தல வரலாறு கூறுகிறது.
திருவிடைமருதூரில் மேற்கு திசையில் அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு.
மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழிபாடுகளைச் செய்து,
மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால்
மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.
- பெண்களின் பாவத்துக்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.
- திருவியலூர், திருவிசலூர், திருவிசநல்லூர் என்ற பல பெயர்களில் இவ்வூர் அழைக்கப்பெறுகிறது.
பெண் பாவம் தீர்க்கும் திருவிசநல்லூர்
திருவிசைநல்லூர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்திற்கு கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது.
திருவிடைமருதூர்-வேப்பத்தூர் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.
திருவியலூர், திருவிசலூர், திருவிசநல்லூர் என்ற பல பெயர்களில் இவ்வூர் அழைக்கப்பெறுகிறது.
திருவிசைலூர் என்ற பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல ஊர்கள் காணப்படுவதால் இவ்வூரை பண்டாரவாடை திருவிசைநல்லூர் என்றும் அழைக்கின்றனர்.
திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார்.
எட்டு சிவ யோகிகள் லிங்கத்துடன் இணைந்த இடத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த சன்னதி நான்கு பைரவர்களில் ஒருவரான சதுர் கால பைரவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக எட்டு தீர்த்தங்களும் அமைந்துள்ளன.
இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப்பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும்.
பெண்களின் பாவத்துக்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.
நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் மரண பயம் நீக்கும் திருத்தலமாவும் கருதப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்