என் மலர்
நீங்கள் தேடியது "பரிகாரத் தலங்கள்"
- 108 வைணவ தலங்களில் இதுவும் ஒன்று.
- சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வியாபாரம் விருத்தி அடையும்.
நினைத்ததை அருளும் திருமோகூர் காளமேகப் பெருமாள்!
மதுரையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருமோகூர் தலம் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் காளமேகப் பெருமாள், மோகன வள்ளித் தாயார், சக்கரத்தாழ்வார், ஸ்ரீஆண்டாள் சந்நதிகள் இருக்கின்றன.
108 வைணவ தலங்களில் இதுவும் ஒன்று.
தொடர்ந்து பனிரெண்டு வாரம் அர்ச்சனை செய்தால், நினைத்த காரியம் நடக்கும்.
திருமணம் ஆகாத கன்னிப்பெண்களும், ஆண்களும், தொடர்ந்து 12 வெள்ளி, 12 புதன் கிழமைகளில் அர்ச்சனை செய்து வந்தால் திருமணம் நடைபெறும்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் புதன், வியாழக்கிழமைகளில் 12 வாரம் குழந்தை வேண்டி அர்ச்சனை செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும்.
வியாபார விருத்தி அடைய சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வியாபாரம் விருத்தி அடையும்.
செய்வினைக் கோளாறு உள்ளவர்கள் 12 செவ்வாய்க்கிழமை தோறும் தொடர்ந்து வழிபட்டால் குறைகள் நிவர்த்தி ஆகும்.
- குழந்தைகள் நலம் பெற எத்தனை கோவில்களுக்கு வேண்டுமானலும் செல்ல தயாராகின்றனர்.
- முன்னொரு காலத்தில் இப்பகுதி மழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
பெற்றோர் வேண்டுதலை ஏற்று குழந்தைகளுக்கு நலம் அருளும் மாற்றுரைவரதர்!
குடும்பங்களின் எதிர்காலம் குழந்தைகள் கையில்.
அதனால் தான் அவர்களின் நலனில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
கண்ணின் மணிபோல குழந்தைகளை ேபணி வளர்க்கின்றனர்.
குழந்தைகளுக்கு எதாவது நோய்கள், கஷ்டங்கள் வரும்போது பெற்றோர்கள் துடித்து விடுகின்றனர்.
அப்போது அவர்கள் வேண்டாத தெய்வங்களே கிடையாது.
குழந்தைகள் நலம் பெற எத்தனை கோவில்களுக்கு வேண்டுமானலும் செல்ல தயாராகின்றனர்.
பெற்றோரின் வேண்டுதலை கேட்டு குழந்தைகளுக்கு நலம் அருளும் தெய்வம் திருச்சி அருகே உள்ள திருவாசி கிராமத்தில் வீற்றிருக்கிறார்.
இங்குதான் மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார்.
முன்னொரு காலத்தில் இப்பகுதி மழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
இப்பகுதியை கொல்லி மழவன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.
மன்னனின் மகள் தீராத கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாள்.
மன்னன் எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை.
எனவே, அவளை இக்கோவிலில் கிடத்தி விட்டு, அவளது பிணியை குணப்படுத்தும் பொறுப்பை சுவாமியிடம் விட்டுவிட்டு சென்று விட்டான்.
அச்சமயத்தில் திருத்தல யாத்திரையாக திருஞான சம்பந்தர் இத்தலம் வந்தார்.
அவர் சுவாமியின் முன்பு கிடந்த பெண்ணைக் கண்டார்.
அந்நேரத்தில் சம்பந்தர் வந்திருப்பதை அறிந்த மன்னன் கோவிலுக்கு வந்தான்.
திருஞானசம்பந்தரிடம் மன்னன், தன் மகளின் நோயைக் கூறி அவள் குணமடைய வழி சொல்லும்படி கேட்டுக்கொண்டான்.
மன்னனின் நிலையை அறிந்த சம்பந்தர் நடராஜரைக் குறித்து பதிகம் பாடினார்.
அவரது பாடல் கேட்ட நடராஜர் ஆனந்த நடனம் ஆடினார்.
மன்னன் மகளை பிடித்திருந்த நோயை அழித்து நாகத்தின் மீது ஆடினார்.
மன்னன் மகள் குணமாகி எழுந்தாள். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள நடராஜர் தலையில் சேர்த்துக் கட்டிய சடைமுடியுடன், ஒரு காலை நாகத்தின் மீது ஊன்றி ஆடும் கோலத்தில் இருக்கிறார்.
இவரை "சர்ப்ப நடராஜர்" என்கின்றனர். நடராஜரின் இந்த தரிசனம் அபூர்வமானதாகும்.
இத்தலத்து அம்பாள் பாலாம்பிகை, கமலன் எனும் வணிகனின் மகளாக பிறந்தாள்.
வன்னிமரத்தின் அடியில் சுவாமியை வேண்டி தவம் இருந்து தகுந்த காலத்தில் அவரை மணந்து கொண்டாள்.
இவள் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில், மேற்கு பார்த்தபடி இருக்கிறாள்.
இவளது சன்னதியில் வித்தியாசமாக துவார பாலகிகளுக்கு பெண்கள் மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.
இவர்கள் மூலமாக அம்பாள் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறாள் என்பது நம்பிக்கை.
அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது.
குழந்தை பிறந்தவர்களும், பாலதோஷம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
இவ்வாறு செய்வதால் குழந்தைகள் வாழ்வில் நோய்கள் இன்றி சிறப்பாக வாழ்வர் என்பது நம்பிக்கை.