search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுந்தரராஜா"

    • உற்சாகம் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும்.
    • இந்த வைப்-தான் பலபேரை பயமுறுத்தும்

    நடிகர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    இந்த நிலையில், சென்னையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுகமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சவுந்தரராஜா விஜய்யின் அரசியல் பயணம் பற்றி பேசினார். 

     


    அப்போது பேசிய அவர், விஜய் அண்ணா நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களா இருந்து, இன்று தொண்டராக மாறி இருக்கீங்க. நீங்க மட்டுமல்ல அடுத்தடுத்து, லாரி லாரி, டிரெயின், டிரெயின், ஃபிளைட் பிளைட்னு 2026-க்கு வந்துட்டே இருக்காங்க. நான் மிகைப்படுத்தி பேசல, இந்த உற்சாகம்தான் பலருக்கு பயத்தை உண்டாக்கும். அந்த உற்சாகம் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும்.

    ஒரு விஷயம் நண்பா. நாம சின்ன விஷயம் பண்ணாலும், அதை ஃபோக்கஸ் பண்ண கேமரா இருக்கு. நாம வளரக்கூடாதுனு பண்ணுவாங்க. இந்த வைப்-தான் பலபேரை பயமுறுத்தும், பலபேரை சிந்திக்க வைக்கும். நம்ம அண்ணன் தளபதிக்கு பலமா நிற்கும்.

    நம்ம அண்ணன் தளபதி விஜய், இன்னைக்கு ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒருத்தர் சினிமா வேண்டாம்னு, நான் சம்பாதிச்ச பணம், வெற்றி, புகழ், வாழும் வாழ்க்கைக்கு இந்த மக்கள் தான் காரணம். அந்த மக்கள், இந்த மண்ணிற்காக வருகிறார் விஜய். அவர் அரசியலுக்கு வர பேராசை தான் காரணம். அந்த பேராசை, ஒவ்வொருத்தர் குடும்ப ரேஷன் கார்டில் உறுப்பினர் ஆவதுதான்.

    விஜய் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா, அவருக்கு பேசவை தெரியாதுனு நிறைய பேர் என்கிட்ட சொன்னாங்க. நான் அவங்களுக்கு பதில் கொடுக்கவே இல்லை. இப்போ சொல்றேன், மௌனத்திற்கு இருக்கும் சக்தி மிகவும் பெரியது. விஜய் மிகவும் சைலண்ட் ஆன நபர். அந்த சைலன்ஸ்-க்குள்ள மிகப்பெரிய வைலன்ஸ் இருக்கு. அது வைலன்ஸ்-க்கு எதிராக மட்டும் தான் வெளியே வரும்.

    விஜய் மிகப்பெரிய பேச்சாளர், விரைவில் அதை பார்ப்பீங்க. பேச்சாளர் பக்கம்பக்கமா பேசனும்னு அவசியம் இல்லை. ஒரு வார்த்தை பேசினா போதும். தமிழக அரசியலை படிங்க. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ஏன் ரூ. 10 லட்சம் கொடுக்கனும். நீங்கள் ரசிகரா இல்லாமல் தொண்டரா மாறுங்க. அரசியல் படிச்சு கேள்வி கேட்கனும். நீங்க கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கனும்.

    நாம வாழ்ந்து, நம்மால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு நல்லது செய்வோம். விஜய் அண்ணா வழியில் மக்களுக்கும், மண்ணுக்கும் நல்லது செய்வோம், என்று தெரிவித்தார்.

    • மலையாள படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    • இப்படத்தின் கதாநாயகன் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்து இருக்கிறார்.

    தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது மலையாள படங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வசூல் ரீதியாக சாதனை படைத்தது. அந்த வகையில் தற்போது கட்டீஸ் கேங் என்ற மலையாள படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஓசியானிக் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கட்டீஸ் கேங். இதில் உன்னிலாலு, சவுந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் வரும் கதாநாயகன் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்து இருக்கிறார்.

     


    இந்த படம் கேரளா மட்டுமில்லாமல் தமிழ் நாட்டிலும் வெளியாக இருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக சென்னை ரோகிணி தியேட்டரில் கட்டீஸ் கேங் படத்தின் டிரைலரை வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் ரஜினிகாந்த் ரசிகர்களை கவுரவம் செய்யும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் ரஜினி காந்த் ரசிகர் மன்ற தலைவர் சினோரா அசோகன் மற்றும் ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த்தும் தலைமை தாங்கினார்கள். கட்டீஸ் கேங் திரைப்படம் மே மாதம் 16 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் சவுந்தரராஜா, கட்டீஸ் கேங் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேசிய விருது வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
    • விவசாயம் இல்லை என்றால் நாம் இல்லை.

    பிரஜின், காயத்ரி ரெமா மற்றும் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அக்கு". இந்த படத்தை ஸ்டாலின் வி இயக்கி இருக்கிறார். பொன் செல்வராஜ் தயாரித்து பிரஜின் நாயகனாக நடித்து இருக்கும் "அக்கு" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

    இதில் படக்குழுவுடன் நடிகர் சவுந்தரராஜா கலந்து கொண்டார். அப்போது நடிகர் சவுந்தரராஜா பேசியதாவது..,

    "இந்த படத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் பிரஜின் நண்பராக மட்டும் தான் இங்கு வந்து இருக்கிறேன். 2002-ம் ஆண்டு சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர் பிரஜின். அப்போதில் இருந்தே அவர் சினிமாவில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். எங்களுக்குள் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகால நட்பு இருக்கிறது.

    "சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 69-வது தேசிய விருது வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும் மணிகண்டன் இயக்கிய "கடைசி விவசாயி" படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்."

    "கடைசி விவசாயி" படத்தில் விவசாயி-இன் முக்கியத்துவத்தை உணர்த்தி இருந்தனர். மேலும் விவசாயம் இல்லை என்றால் நாம் இல்லை. இந்த கருத்து மாணவர்களிடையே சென்று சேர வேண்டும். இதனால், பள்ளி மாணவர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும். வியாபார ரீதியில் இந்த படம் வெற்றி பெறவில்லை என்ற போதிலும், உலக அளவில் இந்த படம் அங்கீகாரம் பெற்று இருக்கிறது. இதனால், இந்த படத்தை மாணவர்களுக்காக திரையிட்டு காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்தார். 

    ×