என் மலர்
நீங்கள் தேடியது "கொரோனா குமார்"
- கொரோனா குமார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து விட்டு, படத்தை முடிக்கவில்லை என குற்றச்சாட்டு.
- நடிகர் சிம்புவுக்கு வேறு படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் மனு.
நடிகர் சிம்பு செப்டம்பர் 19-ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும், அளிக்கவில்லை எனில், அவர் மற்ற படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக 2021-ம் ஆண்டு "கொரோனா குமார்" என்ற படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ரூ. 9.5 கோடி சம்பளமாக பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதைத் தொடர்ந்து ரூ. 4.5 கோடி வரையிலான தொகையை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறது.

எனினும், "கொரோனா குமார்" படத்தில் நடிக்க நடிகர் சிம்புவுக்கு ரூ. 1 கோடி முன்பணமாக வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளன. அதன்படி நடிகர் சிம்பு "கொரோனா குமார்" படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடித்து வருவதால், வேல்ஸ் நிறுவனம் நடிகர் சிம்புவுக்கு எதிராக மனுதாக்கல் செய்து இருந்தது.
இந்த மனு மீதான விசாரணையில் தான், சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சிம்பு ரூ. 1 கோடிக்கான உத்தரவாதம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
- விஷ்ணு விஷாலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது
- படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது
'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் கோகுல். அதன் பின் கார்த்தியை வைத்து காஷ்மோரா, விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா போன்ற படங்களை இயக்கினார். கடைசியாக பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கினார்.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் இதனை தயாரித்திருந்தார். 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் வெற்றி விழாவில் தன்னுடைய அடுத்த படத்தையும் வேல்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கும் என இயக்குனர் கோகுல் கூறினார். அந்த படத்தின் கதாநாயகன் யார் என்ற தகவலை அப்போது அவர் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இப்படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சினையால் சிம்பு விலகினார்.
தற்போது விஷ்ணு விஷாலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும், விஷ்ணு விஷால் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க இயக்குனர் கோகுல் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
- தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியது.
- கொரோனா குமார் படம் தவிர மற்ற படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் சிலம்பரசன். இவர் தற்போது இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது சிம்புவின் 48 ஆவது திரைப்படம் ஆகும். இதுதவிர நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பதை படக்குழு சமீபத்தில் உறுதிப்படுத்தியது.
முன்னதாக கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவுக்கு ரூ. 9 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாகவும், அதில் ரூ. 4 கோடி வரை முன்பணமாக சிம்புவுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த படத்தை இயக்குநர் கோகுல் இயக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. எனினும், முன்பணம் பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, கொரோனா குமார் படம் தவிர மற்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதை எதிர்த்து வேல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் நடிகர் சிம்பு செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதம் அளிக்க வேண்டும். உத்தரவாதம் அளிக்காத பட்சத்தில் சிம்பு மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டுருந்தது.
இந்த நிலையில், தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்கக்கூடாது. அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி கொரோனா குமார் படத்தை சிம்பு முடித்துக் கொடுக்கவில்லை. இதனால் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டு இருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கொரோனா குமார் படம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனத்திற்கு இடையிலான பிரச்சினை முடிவுக்கு வந்தது.
- மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பும் திரும்ப பெற்றனர்.
நடிகர் சிம்பு நீதிமன்றத்தில் செலுத்திய ரூ.1 கோடியை வட்டியுடன் திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா குமார் படம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனத்திற்கு இடையிலான பிரச்சினை முடிவுக்கு வந்ததை அடுத்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வட்டியுடன் சேர்த்து ரூ.1.04 கோடியை திருப்பித்தர தலைமை பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பும் திரும்ப பெற்றனர்.
வழக்கை இரு தரப்பும் வாபஸ் பெற்றதால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.