search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாங்கல் ஏரி"

    • தாங்கல் ஏரியை நம்பி 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளது
    • நள்ளிரவு ஏரியின் மதகு அருகே கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளது

    நள்ளிரவு ஏரியின் மதகு அருகே கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இந்த ஏரியை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர். ஒரு வார காலத்திற்கு பிறகு மழை ஓய்ந்து இருந்த நிலையில் இந்த ஏரி உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காசி கடந்த 18-ம்தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • காசி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி வட்டம் அனந்த புரம் அருகே குளிர்சுனை பகுதியைச் சேர்ந்தவர் காசி (வயது 70). இவர் கடந்த 18-ம்தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் காணாமல்போன காசியை பல்வேறு இடங்க ளில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் காசி கிடை க்கவில்லை.

    இந்நிலையில் நேற்று குளிர்சுன்ன பகுதி அருகில் உள்ள தாங்கல் ஏரியில் காசி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அனந்தபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காசியின் அண்ணன் மகன் ஜோதி கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது ஏரியின் பரப்பளவு சுருங்கி வருகிறது.
    • தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    செங்குன்றம்:

    மாதவரம் மண்டலம், 32-வது வார்டுக்கு உட்பட்ட புத்தாகரம், மதுரவாயல் மற்றும் புழல் பைபாஸ் சாலை சந்திக்கும் பகுதியில் புத்தாகரம் தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஏரியில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

    இந்நிலையில் தாங்கல் ஏரியை சுற்றி பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி ஏற்கனவே பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் தற்போது தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஏரிக்கரையோரம் வீடு, கடைகள் மற்றும் குடோன்கள் கட்டி உள்ளனர். இதனை சிலர் வாடகைக்கும் விட்டு பணம் வசூலித்து வருகிறார்கள். ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது ஏரியின் பரப்பளவு சுருங்கி வருகிறது.

    இதேபோல் ஏரிக்கு வரும் தண்ணீர் பாதையும் ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் மழை பெய்யும்போது ஏரிக்கு தண்ணீர் வராமல் ஆங்காங்கே தடைபட்டு நின்று பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதன்காரணமாக ஏரியில் வழக்கமான தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த படியே உள்ளன. இதனால் ஏரிக்கரையை சுற்றிலும் தற்போது கட்டிடங்களாக காட்சி அளிக்கின்றன.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதவரம் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை, வீடுகளை இடித்தனர். இப்போது மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடந்து வருகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும். ஆக்கிரமிப்பு கட்டிடங்களை மட்டும் இடித்து விட்டு செல்வதால் சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் முளைத்து விடுகின்றன.

    மேலும் தற்போது ஏரியில் உள்ள தண்ணீர் மாசு அடைந்து காணப்படுகிறது. முட்செடிகள் படர்ந்து உள்ளன. இதனையும் அகற்றவேண்டும். ஆக்கிரமிப்பை தடுக்க ஏரியை சுற்றி தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.

    இந்த ஏரியில் கூடுதலாக தண்ணீரை தேக்கி வைத்தால் சூரப்பட்டு, மேட்டூர், பாரதிதாசன் நகர், சண்முகபுரம் மற்றும் மாதனாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×