என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உமாபதி"

    • அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • ஐஸ்வர்யா அர்ஜுன் 'பட்டத்து யானை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் -நிவேதிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் 2013- ஆம் ஆண்டு 'பட்டத்து யானை' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான 'சொல்லிவிடவா' என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்போது அர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.


    நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இந்த செய்தியை நடிகர் செந்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட செந்தில், உமாபதி, நடிகர் அர்ஜுன் மகளை திருமணம் செய்யப்போகிறார் என்று கூறினார்.


    நடிகர் உமாபதி 2017-ஆம் ஆண்டு வெளியான 'அதாகப்பட்டது மகாஜனங்களே' என்ற படத்தின் மூலம் அறிமுகமான. பின்னர், 'மணியார் குடும்பம்', 'திருமணம்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். உமாபதி 2021-ஆம் ஆண்டு அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பித்தல மாத்தி'.
    • இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார்.

    இயக்குனர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'பித்தல மாத்தி'. இதில் உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி, பால சரவணன், வினுதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், 'ஆடுகளம்' நரேன், 'காதல்' சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    எஸ். என். வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஏ. எல். ரமேஷ் மேற்கொண்டிருக்கிறார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார்.


    படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சரவணா பேசுகையில், '' பித்தல மாத்தி என்றால் கேடித்தனம். தகிடு தத்தம்.. செய்பவர்களை குறிக்கும். ஒருவர் வாழ்க்கையில் நல்லது கெட்டதற்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்பதனை விவரிப்பது தான் இதன் திரைக்கதை. கதையின் நாயகன் அவருடைய வாழ்க்கையில் நல்லது எது? கெட்டது எது? என்பதனை தெரிந்து கொண்டு, எம்மாதிரியான பித்தல மாத்தி வேலைகள் செய்து வாழ்க்கையில் முன்னேறுகிறார்? என்பதுதான் இப்படத்தின் கதை. இந்தத் திரைப்படத்தை செப்டம்பர் 22 -ஆம் தேதியன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது'' என்றார்.

    • நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
    • ஐஸ்வர்யாவும் விஷாலுடன் 'பட்டத்து யானை' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

    'ஆக்ஷன் கிங்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக இந்த நிகழ்வு நடந்தது.

    அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜுனுக்குப் பிடித்துப் போக தனது வீட்டு மாப்பிளையாக பச்சைக் கொடி காட்டினார்.

    உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    ஐஸ்வர்யாவும் விஷாலுடன் 'பட்டத்து யானை' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என தம்பி ராமையா குடும்பம் கேட்டுக் கொண்டதாக தகவல் பரவியது. ஆனால், இது குறித்து ஐஸ்வர்யா இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்து ஆறு மாதங்களான நிலையில் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

    வரும் ஜூன் 10-ம் தேதி கிருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் தோட்டத்தில் தான் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பிதழ் வைக்கும் பணியை அர்ஜுன் ஆரம்பித்துள்ளார்.

    தனது மகள் திருமணத்துக்காக அழைப்பிதழ் வைக்கும் பணியை ஆரம்பித்துள்ள நடிகர் அர்ஜுன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்துடன் சென்று அழைப்பு விடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. தம்பி ராமைய்யாவும் தனது குடும்பத்துடன் உடன் சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்துள்ளது.
    • இன்று இவர்களுடைய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

    'ஆக்ஷன் கிங்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக இந்த நிகழ்வு நடந்தது.

    இந்நிலையில், நேற்று, ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமணம் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இதனையடுத்து திருமணத்தின் பொழுது எடுத்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இன்று இவர்களுடைய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதில் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பேசி முடிவு செய்தோம்.
    • திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பது அவர்களது விருப்பம்.

    நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா-தம்பி ராமையா மகன் உமாபதி ஆகியோரின் காதல் திருமணம் கடந்த 10-ந்தேதி சென்னையில் நடந்தது. தொடர்ந்து சாலிகிராமத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் பேசியதாவது:-

    நடிகராக பலமுறை இந்த மேடையில் ஏறிய நான் இன்று ஒரு பெண்ணை கட்டிக் கொடுத்த தந்தையாகவும் மாமனாராகவும் நிற்கிறேன். என்னுடைய சினிமா வாழ்க்கை மேலே வந்து கீழே விழுந்து திரும்பவும் மேலே வந்து இப்போது சம நிலையில் போய்க்கொண்டிருக்கிறது.

    தம்பி ராமையா உடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இருவரும் சம்பந்தி ஆவோம் என எங்கள் இரண்டு பேருக்கும் தெரியாது. நல்ல பண்பாடு உள்ள குடும்பம் அவர் குடும்பம். வெளிநாட்டில் நான் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் உமாபதி ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அப்போதே எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவர் விரைவில் ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவெடுப்பார். அதற்குரிய அனைத்து தகுதியும் அவரிடம் உள்ளது. கூடிய விரைவில் அதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.

    என் முதல் குழந்தையாக ஐஸ்வர்யா பிறந்தார். அவள் பிறந்ததில் இருந்து எனக்கு நேர் மறையான விஷயங்கள் பல நடந்தன.

    ஒரு நாள் என் இளைய மகள் என்னிடம் வந்து அப்பா ஐசு உங்களிடம் ஏதோ தனியாக பேச வேண்டும் என சொல்கிறார் என்று கூறினார்.

    நான் என்ன விஷயம் என கேட்க எனக்கு தெரியாது உங்களிடம் தான் பேச வேண்டுமாம் என சொன்னார். கதை, திரைக்கதை எழுதி உள்ளதால் காதல் விஷயம் என யூகித்துக் கொண்டேன்.

    ஆனால் மாப்பிள்ளை யார் என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஐஸ்வர்யா என்னிடம் வந்து விஷயத்தை சொன்னார். மாப்பிள்ளை யார் என கேட்டேன் உமாபதி என்றாள்.

    நான் ஷாக் ஆகி உமாபதியா எனக்கேட்டேன். என் மனைவி என்னிடம் நீங்கள் என்ன சொல்றீங்க என கேட்டார். அவரிடம் நான் என்ன சொல்வதற்கு. நல்ல வாழ்க்கையை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். 16 வயது 14 வயது என்றால் நாம் யோசிக்கலாம்.

    அவர்களது வாழ்க்கை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

    நிறைய மிராக்கிள் நடந்துள்ளது என்றேன். ஐஸ்வர்யா இப்போதும் எனக்கு குழந்தையாக தான் தெரிகிறார். ஒவ்வொரு தந்தைக்கும் தனது மகள் திருமணம் ஆனாலும் அவள் என்றும் குழந்தைதான். தொடர்ந்து தம்பி ராமையா குடும்பம் எங்கள் குடும்பம் சேர்ந்து ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பேசி முடிவு செய்தோம். திருமணம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பது அவர்களது விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×