என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிவகேசரியார்"
- பக்தியின் திருவுருவமாக விளங்கியவர்தான் கண்ணப்பநாயனார்.
- அய்யனே எனக்கு இடையறாத பக்தியை தரவேண்டும்.
இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவன்தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் இந்த நாயன்பார்கள். அந்த வகையில் இன்றைக்கு நாம் கண்ணப்பநாயனார் பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.
பக்தியின் திருவுருவமாக விளங்கியவர்தான் கண்ணப்பநாயனார். இவர் முற்பிறவியில் அர்ஜுனனாக இருந்தார். அர்ஜுனன் மிகப்பெரிய சிவபக்தனாக இருந்தார். மகாபாரதபோரில் தன்னுடைய மகனான அபிமன்யூவை கொன்றவர்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு உணவும் உண்ணாமல், சிவபூஜையும் செய்யாமல் கண்ணபிரான் கூட கயிலாயத்திற்கு சென்றார்.
சிவபெருமானிடம் வரம் கேட்பதற்காக செல்கிறார். அங்கு சென்றபோது ஒரு பன்றியின் காரணமாக அர்ஜுனனுக்கும் வேடன் வடிவில் இருந்த சிவபெருமானுக்கும் இடையே சண்டை நடக்கிறது. வேடன் வடிவில் இருப்பது சிவபெருமான் என்று அறியாமல் வேடன் தானே என்று வேடன் குலத்தை திட்டினான். உடனே தன்னுடைய திருவுருவத்தை அர்ஜுனனிடம் காட்டி அர்ஜுனா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறினார் சிவபெருமான்.
உடனே அர்ஜுனன் தன்னுடைய தவறை உணர்ந்து. அவரிடம் அய்யனே உன்னை என்றுமே மறவாத வரத்தை தரவேண்டும் என்று கேட்டார். ஆனால் வரம் வாங்க வந்ததே தன்னுடைய மகனை கொன்றவர்களை கொல்ல பாசுவதகனி வாங்க வந்தவர் அவ்வாறு கேட்காமல் அய்யனே எனக்கு இடையறாத பக்தியை தரவேண்டும் என்று கேட்டுவிட்டார்.
சிவபெருமான் மகனே அர்ஜுனா... நீ அபிமன்யூவை கொன்றவர்களை கொல்வதற்காக மனதிற்குள்ளேயே கேட்டாயே பாசுவத கனி அதனை நான் இப்போது உனக்கு தருகிறேன். ஆனால் நீ அடுத்த பிறவியில் இப்போது நீ கேட்டாயே ஒருவரம் இடையறாத பக்தியை தரவேண்டும் என்று அந்த வரத்தை நான் அடுத்த பிறவியில் உனக்கு தருவேன்.
ஆனால் நீ என்னை திட்டினாயே வேடன் என்று, எனவே நீ அடுத்த பிறவியில் வேடர் குலத்தில் பிறந்து ஒரு பன்றியின் காரணமாக காளஹஸ்தியில் என்னை கண்டு முக்தி பெருவாய் என்று கூறினார் சிவபெருமான். இதுதான் கண்ணப்பநாயனாரின் முற்பிறப்பு வரலாறு.
வேடர் குலத்தில் ஒரு தலைவர் இருந்தார். அவர் பெயர் நாகன். அவருடைய மனைவி பெயர் தத்தை. இந்த நாகனுக்கும் தத்தைக்கும் நீண்டகாலமாக குழந்தைப்பேறு இல்லை. இதனால் இவர்கள் இருவரும் முருகப்பெருமானை நோக்கி தவம் செய்தனர். முருகப்பெருமானின் திருவருளால் நாகனுக்கும் தத்தைக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தின்னன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
தின்னன் சிறுவயதிலேயே காட்டிற்கு சென்று புலிக்குட்டியை பிடித்து வந்து வீட்டின் முற்றத்தில் கட்டிபோட்டு விடுவான். அந்த அளவிற்கு வீரமுடன் இருந்தான். தின்னன் 7 வயதிலேயே வில்விற்றையை கற்றுக்கொண்டு நல்ல தின்மையாகவும், வேடவர் குலத்திற்கு ஏற்ற தைரியசாலியாகவும் இருந்தார்.
வேடவர் தலைவனாகிய நாகனுக்கு இப்போது வயதாகிவிட்டது. வேட்டைக்கு இவர்கள் செல்லாததால் மலைப் பகுதியில் விளையக்கூடிய பயிர்களை எல்லாம் விலங்குகள் அழிக்கத்தொடங்கின. இதனால் வேடர்கள் எல்லோரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இதனால் வேடவர்களின் தலைவனாகிய நாகன், தன்னுடைய வேடவ இன மக்களை எல்லாம் அழைத்து எனக்கு வயதாகிவிட்டது. என்னால் இனி வேட்டையாட முடியாது. எனவே என்னுடைய மகானான தின்னனை தலைவனாக அறிவிக்கிறேன் என்று கூறினார் நாகன்.
தலைவனான தின்னன் வேட்டையாட வில்லும், வாளும் கொண்டு சென்றார். தின்னனுக்கு நானன், காடன் என்று இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருநாள் தின்னனும், நானனும், காடனும் காட்டுக்கு வேட்டையாட காட்டிற்கு சென்றனர். காட்டில் ஒரு பன்றி தின்னனாரின் அருகிலேயே ஓடி ஓடி வந்து கொண்டிருந்தது. உடனே தின்னனாரும் அந்த பன்றிக்கு பின்னாடி ஓடினார். தின்னனை தொடர்ந்து நாகனும், அவருக்கு பின்னால் காடனும் ஒருவர் பின் ஒருவராக ஓடிச்சென்றனர். கடைசியில் தின்னனார் அந்த பன்றியை தன்னுடைய ஈட்டியால் ஒரு குத்து குத்தி கொன்றுவிட்டார்.
நெடுந்தூரம் ஓடி வந்ததால் இவர்கள் மூவருக்கும் பசி எடுக்கத்தோன்றியது. அப்போது தின்னன் தனது நண்பர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்டார். உடனே அவருடைய நண்பர்களான நாணனும், காடனும் திருகாளத்தி மலைக்கு தின்னனை அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கு நதிக்கரை தின்னனின் நண்பன் காடன் அந்த பன்றியை சாப்பிடுவதற்கு நெருப்புமூட்டிக்கொண்டு இருந்தார்.
அப்போது திருக்காளத்தி மலை உச்சியில் உள்ள சிவபெருமான பார்க்க நாணன் தன்னுடைய நண்பனான தின்னனாரை அழைத்துக்கொண்டு சென்றார். திருக்காளத்தி மலையில் உள்ள சிவபெருமானை பார்த்த தின்னன், அவரை பார்த்து சிவபெருமானே இந்த கொடிய காட்டின் எப்படி தனியாக இருக்கிறீர்கள் என்று கூறி வருத்தப்பட்டார். அதன்பிறகு நான் உடனே உங்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது கொண்டுவருகிறேன் என்று சொல்லி தன்னுடைய நண்பன் காடன் சுட்டு வைத்திருந்த பன்றி இறைச்சியை பார்த்தார்.
அந்த இறைச்சியில் எந்த பகுதி சுவையாக இருக்கும் என்று நினைத்து அந்த பகுதியை சாப்பிட்டு பார்த்து அந்த எச்சில் இறைச்சியை ஒரு இலையில் சேர்த்து வைத்து அதனை சிவபெருமானுக்கு கொண்டுசெல்லலாம் என்று எடுத்துக்கொண்டு செல்ல, ஐயோ இறைச்சி சாப்பிட்டால் சிவபெருமானுக்கு தண்ணீர் தாகம் எடுக்கும். எனவே தண்ணீர் எப்படி கொண்டு செல்வது என்று எண்ணிக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய தண்ணீரை தன்னுடைய வாயில் முகர்ந்து வைத்துக்கொண்டு உடனே திருக்காளத்தில் இருக்கக்கூடிய சிவபேருமானின் ஆலயத்துக்கு சென்றார் தின்னன்.
அதன்பிறகு தான் கொண்டுவந்த இறைச்சியையும் சிவபெருமானுக்கு படைத்தார் தின்னன். பின்னர் வாயில் முகர்ந்து கொண்டுவந்த நீரை மஞ்சன நீராக எண்ணி சிவபெருமான் மீது உமிழ்ந்துவிட்டார். பிறகு சிவபெருமானை பார்த்து சாப்பிடுங்கள் என்று தின்னனார் பவ்யமாக வேண்டிக்கொண்டார்.
இவ்வாறு தொடர்ந்து தின்னனார் தான் சுவைத்து பார்த்து கொண்டுவந்த இறைச்சியையும், வாயில் உமிழ்ந்து கொண்டுவந்த நீரை மஞ்சன நீராகவும் சிவபெருமானுக்கு படைத்து வந்தார். திருகாளத்தி மல்லையில் தினமும் காலையில் சிவபெருமானுக்கு ஆகம முறைப்படி சிவகேசரியார் என்பவர் பூக்கள், மஞ்சன நீர், அமுது கொண்டு பணி செய்வது வழக்கம். அன்று மதியம் தான் தின்னனார், தான் சுவைத்துக்கொண்டுவந்த இறைச்சியையும், எலும்பையும் படைத்தார். மறுநாள் பூஜை செய்வதற்காக பூக்கள், மஞ்சனநீர், அமுது ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வந்தார்.
உடனே சிவபெருமானுக்கு முன்னாள் இறைச்சியும், எலும்புத்துண்டும் இருப்பதை பார்த்த சிவகேசரியார் நடுநடுங்கி போனார். இந்த கொடுஞ்செயலை செய்தவர் யாரோ என்று கூறிக்கொண்டு அதனை எடுத்து சுத்தம் செய்துவிட்டு, அருகில் இருந்த நதியில் குளித்துவிட்டு வந்து சிவபெருமானுக்கு பூஜை செய்தார். இப்படி 4 நாட்கள் சென்றது. இந்த 4 நாட்களும் சிவகேசரியார் பூக்களும், மஞ்சனநீரும், அமுதும் கொண்டு வந்து அபிஷேகம் செய்துவிட்டு செல்வார். மாலையில் தின்னனார் வந்து இறைச்சிகளும், எலும்புகளும் கொண்டுவந்து வழிபாடு செய்வார்.
௪ நாட்களும் தொடர்ந்து இந்த இறைச்சிகளை அப்புறப்படுத்திக்கொண்டே வந்தார். ஐந்தாவது நாள் ரொம்ப வருத்தப்பட்டு இறைவனிடம் நீ எப்படி பொருத்துக்கொண்டு இருக்கிறாய். இந்த கொடுமையை எப்படியாவது நீக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு மனம் வருந்தி வேண்டினார். அன்று இரவு சிவகேசரியார் கனவில் சிவபெருமான் வந்து, என்னிடம் வந்து பூஜை செய்பவனை சாதாரண வேடன் என்று நினைத்துவிடாதே. நீ அவன் செய்யும் பக்தியை நாளை நேரில் வந்து மறைந்திருந்து பார் என்று கூறினார்.
சிவகேசரியார் காளஹஸ்தி மலைக்கு சென்று அங்கு ஒரு மரத்தின் பின்னால் மறைந்திருந்து என்ன நடக்கிறது என்பதை கவனித்தார். வழக்கம்போல் அன்றும் தின்னனார் ரொம்ம மகிழ்ச்சியுர இலையில் இறைச்சியும், வாயில் நீரும் முகர்ந்து வந்தார். அப்போது சிவபெருமானின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடிந்துகொண்டு இருந்தது. உடனே சிவபெருமான் அப்பா... என்று ஓடி வந்து அலறிவிட்டார். இதனால் வாயில் இருந்த மஞ்சனநீர் கீழே வடிந்தது. உடனே ஊனுக்கு ஊன் வினைதீர்க்கும் என்கிற பழமொழி தின்னனாருக்கு நினைவுக்கு வந்தது. சிவபெருமானே உங்களுடைய கண்களில் இருந்து ரத்தம் வடிகிறது என்று கவலைப்படவேண்டாம். என்னிடம் இரண்டு கண்கள் உள்ளன என்று கூறிவிட்டு தன்னுடைய ஒரு கண்ணை பிடுங்கி எடுத்து சிவபெருமானின் ஒரு கண்ணில் வைத்தார்.
அப்போது ரத்தம் வடிவது நின்றுவிட்டது. தின்னனாருக்கு ஒரே சந்தோசம். சிவபெருமானுக்கு கண்களில் இருந்து வடியக்கூடிய ரத்தம் நின்றுவிடவே தின்னனாருக்கு ஒரே சந்தோசம். அந்த சந்தோசம் தீருவதற்குள், சிவபெருமானின் மற்றொரு கண்ணில் இருந்தும் ரத்தம் வடிந்தது. இதை பார்த்ததும் சிவபெருமான் வருத்தப்படாதீர்கள். எனக்கு இன்னொரு கண்ணும் இருக்கிறது. அதையும் நான் உமக்கே தந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு மற்றொரு கண்ணையும் பிடுங்க சென்றார்.
அப்போது சிபெருமானுக்கு வைக்கும் போது அடையாளம் தெரிவதற்காக தன்னுடைய காலின் பெருவிரலை அடையாளத்திற்கு சிவபெருமானின் ரத்தம் வடியக்கூடிய மற்றொரு கண்ணில் வைத்து ஊன்றி வைத்துவிட்டு அம்பை எடுத்து மற்றொரு கண்ணையும் குத்தும்போது சிவபெருமான் திகைத்து நின்று பொறு கண்ணப்பா பொறு என்று அசரிரீயாக தடுத்து நிறுத்தினார். என்னுடைய கண்ணில் ரத்தம் வடிவதை பார்த்தவுடன் உன்னுடைய கண்ணை பிடுங்கி நீ வைத்ததால் நீ கண்ணப்பர் என்று அழைக்கப்படுவாய்.
அதுமட்டுமில்லாமல் நீ எப்போதும் என்னுடனேயே இருப்பாய் என்று கூறி திருக்காளத்தி மலையில் வைத்து முக்தியும் கொடுத்தார் சிவபெருமான். இந்த கண்ணப்பநாயனாரின் வரலாற்றில் இருந்து தெரிவது என்னவென்றால் இறைவனிடம் நாம் எப்போதும் அன்போடும், பக்தியோடும் இருந்தால் முக்தி கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் பிறவிப்பிணிகூட நீங்கும் இதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்துகிறது. பக்தியோடு இருப்போம். முக்தி பெறுவோம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்