என் மலர்
நீங்கள் தேடியது "ஆப்பிரிக்க பெண்கள்"
- இந்தியப் பெண்ணை கால்களால் எட்டி உதைத்தும் தாக்குகிறார்.
- இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நெதர்லாந்தில் ஒரு கடையின் முன்பு இந்திய பெண் ஒருவரை ஆப்பிரிக்க பெண் மற்றும் அவருடன் இருந்த பெண்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.
அந்த வீடியோவில் இந்தியப் பெண்ணை நோக்கி ஆப்பிரிக்க பெண் ஒருவர் எதிர்ப்பு குரலை எழுப்பினார். அதற்கு இந்தியப் பெண்ணும் பதில் கூறுகிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இந்திய பெண் கையில் வைத்திருந்த கருப்பு கைப்பையை ஆப்பிரிக்க பெண் இழுக்கிறார். இந்திய பெண் அதை தடுக்கும் நேரத்தில் ஆப்பிரிக்க பெண் அவரது முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி கொடூரமாக தாக்கப்படுகிறார்.
இந்தியப் பெண்ணை அடித்தும், கால்களால் எட்டி உதைத்தும் தாக்குகிறார். ஆப்பிரிக்க பெண்ணுடன் இருந்த மற்ற ஆப்பிரிக்க பெண்களும் தாக்குதலை தடுக்காமல் அவருடன் சேர்ந்து மேலும் இந்தியப் பெண்ணை தாக்கினர்.
அங்கிருந்த பலர் பிரச்சினையை தடுக்காமல் செல்போன்களில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த சண்டையின் பின்னணியில் உள்ள சரியான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
An INNOCENT Indian student mobbed by African people (Black people), gets robbed and beaten by the crowd. War between immigrants. ATROCIOUS pic.twitter.com/n1jiN7J9pK
— Epic Rage Fights (@epic_rage_fight) September 6, 2023
- தமிழ் திரைப்பட பாடல்களால் நமது தமிழ் மொழி பல்வேறு நாட்டினருக்கு சென்றடைந்துள்ளது.
- பிறமொழியைத் தாய் மொழியாகக் கொண்டோரையும் நம் தமிழ் மொழியை உச்சரிக்கத் தூண்டும் திரை இசைக்கு நன்றி
தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் தமிழ் மொழியை பேசி வருகின்றனர். இணையம் உருவான பிறகு கணினி மொழியாகும் இந்தியாவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழியாகவும் தமிழ் மொழி உள்ளது.
குறிப்பாகத் தமிழ் திரைப்பட பாடல்களால் நமது தமிழ் மொழி கண்டங்களை கடந்து மொழிகளை கடந்து பல்வேறு நாட்டினருக்கு சென்றடைந்துள்ளது.
அவ்வகையில் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அழகிய குரலால் தமிழ் பாடல்களை பாடும் வீடியோ நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற 'அடியாத்தி' பாடலையும் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற அனல் மேலே பனித்துளி பாடலையும் அச்சு பிசகாமல் தமிழில் அப்பெண் அழகாக பாடியுள்ளார்.
இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நபர், "நமது தாய் மொழியை பிறர் உச்சரிக்கக் கேட்கும் போது பிறக்கும் உவகை, சொல்லால் விளக்க முடியாத உணர்வு. பிறமொழியைத் தாய் மொழியாகக் கொண்டோரையும் நம் தமிழ் மொழியை உச்சரிக்கத் தூண்டும் திரை இசைக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.