என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "களைவது எப்படி"
- சோம்பேறியாக இருந்தால் முன்னேற்றமே இருக்காது.
- ஓய்வுக்கும், சோம்பேறித்தனத்திற்கும் வேறுபாடு உள்ளது.
சோம்பேறித்தனத்தில் இருந்து நாம் எப்படி வெளியே வருவது என்பதை நாம் கொஞ்சம் சோம்பேறித்தனத்தை தவிர்த்துவிட்டு ஒருசில எளிய வழிகளை பார்க்கலாம்.
சோம்பேறியாக இருந்தால் முன்னேற்றமே இருக்காது. இந்த சோம்பேறித்தனம் நம்மகிட்ட ஏற்படுவதற்கு முதலில் என்ன காரணம் என்று பார்த்தால் நாம் எடுக்கும் ஓய்வுக்கும், சோம்பேறித்தனம் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. வேலைநிறைய செய்துவிட்டு அத்தகைய வேலைப்பளுவின் காரணமாக எடுப்பது தான் ஓய்வு.
ஆனால் வேலையே செய்யாமல் வேலைசெய்தமாதிரி ஓய்வு எடுத்துக்கொள்வது தான் சோம்பேறித்தனம். அது ஏன் நமக்கு ஏற்படுகிறது என்றால் பலவகையான காரணங்கள் உள்ளது. அதைவிட்டுவிட்டு சோம்பேறித்தனத்தை எப்படி தவிர்ப்பது என்பதை பார்க்கலாம்.
முதல்வழி என்னவென்றால் நாம் நம்மை ஆராய்ந்து பார்த்து தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதிகமாக வேலை செய்வதால் இந்த சோம்பேறித்தனமா அல்லது நீண்டதூரத்துக்கு பயணம் செய்வதால் சோம்பேறித்தனம் வருகிறதா? ரத்த சோகையால் சோம்பேறித்தனமா, ஹார்மோன் இம்பேலன்ஸ்டு என்னும் நோயால் சோம்பேறித்தனம் உள்ளதா, இந்த சோம்பேறித்தனம் ஏன் என்று நமக்கு ஏற்படுகிறது என்று பார்க்க வேண்டும். அதற்கு நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து தெளிவுபடுத்தி அட்டவணைப்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக சோம்பேறித்தனம் நம்மை விட்டு அகலவேண்டும் என்றால் நாம் நம்முடைய செயலை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். நம் வேலையை பிறகு செய்துகொள்ளலாம் என்னும் வார்த்தையை சொல்லவே கூடாது. ஒரு விஷயம் சொல்வார்கள் நன்றே செய். அந்த நன்றும் அன்றே செய். நாம சொல்லக்கூடிய நல்ல விஷயங்களை இன்றே செய்ய வேண்டும். அதுவும் அன்றே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம் என்றால் கண்டிப்பாக சோம்பேறித்தனம் அண்டவே அண்டாது.
மூன்றாவதாக ஓய்வே இல்லாமல் இருப்பது, சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற விஷயங்கள் நமக்கு ஒருவித சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும். நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டுமோ அதே அளவுக்கு தூக்கம் நமது உடலுக்கு மிகவும் முக்கியம். இரவில் நன்றாக உறங்கினால் மட்டுமே பகலில் சோம்பேறித்தனம் நமக்கு வரவே வராது. ஆனால் நாம் தற்போது நமது உடலுக்கு தேவையான உறக்கத்தை கொடுப்பதில்லை. அதற்கு பதிலாக ஸ்மார்ட் போனை கையில் வைத்துக்கொண்டு நீண்டநேரம் செல்போனிலேயே பொழுதை கழிக்கிறோம். அதுவும் ஒரு காரணம்.
நாம் செல்போனில் பொழுதை கழிப்பதில் ஒரு வரைமுறை வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இல்லையென்றால் நேரம் விரையமாகுமே தவிர எந்த பலனும் இருக்காது. சோம்பேறித்தனம் தான் மிஞ்சும்.
நான்காவதாக ஒரு செயலை செய்கின்றபோது அதனால் நமக்கு என்ன நன்மை கிடைகிறது என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். உதாரணத்துக்கு உடற்பயிற்சி செய்வதால் நமக்கு உடல் இளைக்கும், பார்ப்பவர்கள் நம்மை பாராட்டுவார்கள், ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் அதைவிடுத்து உடற்பயிற்சி எடுக்கவில்லை என்றால் உடல் கெட்டுவிடும், உடல் எடை அதிகரிக்கும், பார்ப்பவர்கள் எல்லோரும் கேட்பார்கள். அது நமக்கு பலவீனத்தை கொடுக்கும்.
ஒரு செயலை நாம் எப்போது சிறப்பாக செய்யும் போது அதனால் கிடைக்கும் பலன்களும் அதிகமாக இருக்கும். ஒரு செயலை செய்யாமல் இருந்தால் அதனால் ஏற்படும் இழப்புகளையும் நாம் யோசித்து செயல்பட்டால் சிறப்பாக செயல்பட ஏதுவாக இருக்கும்.
ஐந்தாவதாக நாம் நம்மை முதலில் உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். நான் சரியாக தான் செய்கிறேன். என்னுடையை வேலையை நான் சிறப்பாக செய்துள்ளேன். என்னால இந்த செயலை செய்ய முடியும். என்னால் வெற்றிபெற முடியும் என்று நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொண்டால் சோம்பேறித்தனத்தில் இருந்து வெளியே வரலாம்.
ஆறாவதாக நாம நமக்கு ஒரு லட்சியத்தை தேர்வு செய்துகொள்ள வேண்டும். எடுக்கும் லட்சியத்தை சிறிய விஷயத்தில் எடுக்க வேண்டும். ஒருவேளை பெரிய லட்சியத்தை எடுத்து அதை சாதிக்க முடியாமல் சென்றால் அதை இந்த சமூகம் கேளிக்கூத்தாகத் தான் பார்க்கும். எனவே நம்மை இன்னும் சோம்பேறித்தனத்திற்குள் தள்ளிவிடும். நாம் நம் முயற்சியை கைவிட்டுவிடுவோம். அதனால் சிறிய சிறிய லட்சியங்களை தேர்வு செய்து வெற்றிபெறலாம். நமக்கு அது ஒரு உற்சாகத்தை கொடுக்கும். எனவே படிப்படியாக வாழ்த்துகளையும், மற்றவர்களின் பாராட்டுகளையும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியும். சோம்பேறித்தனம் நம்மை அண்டவே அண்டாது என்பதை தெளிவாக நாம் புரிந்துகொள்ளலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்