search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்த்தங்கள்"

    • காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயர்களாலும் தலபுராணம் இத்திருக்குளங்களை அழைக்கிறது.
    • பூம்புகாரில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்னும் இருதடாகங்கள் இருந்தன

    தீர்த்தச் சிறப்பு மிக்கது திருவெண்காட்டுத் தலம் திருக்கோவிலின் உள்ளேயே அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று பெயர்களில் மூன்று திருக்குளங்கள் உள்ளன.

    காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயர்களாலும் தலபுராணம் இத்திருக்குளங்களை அழைக்கிறது.

    உமையின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவன் இங்கு நடனமாடிய போது அவர் சிந்திய மூன்று துளி

    ஆனந்தக் கண்ணீரும் முக்குளங்களாயினவென்றும், பின்னர் அகோரமூர்த்தியின் மூன்று கண்களும் சிந்திய

    நீர்த்துளிகளும், முக்குளத்திலும் முறையே கலந்தனவென்றும் தலபுராணம் கூறும்.

    பூம்புகாரில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்னும் இருதடாகங்கள் இருந்தனவென்றும் அவைகளில்

    மூழ்கிக் காமவேள் கோட்டத்தைக் கைதொழுவார் தம் கணவரைக் கூடுவர் என்றும் தேவந்தி என்பவள் கண்ணகிக்கு கூறுகிறாள்.

    அவள் குறிப்பிடும் சோம, சூரிய குண்டங்கள் திருவெண்காட்டு சோம, சூரிய தீர்த்தங்களாக இருந்திருக்கக் கூடும் என்று சிலர் கூறுவர் என்று டாக்டர் உ.வே.சா. சிலப்பதிகாரத்தில் குறிப்பு வரைந்துள்ளார்.

    • இந்திரன் இந்த தீர்த்தத்தில் குளித்துதான், தான் செய்த குற்றங்கள் நீங்கப் பெற்றான்.
    • இந்த இந்திர தீர்த்தத்தில் தான் ரமணர் துறவு பூண்டார்.

    திருவண்ணாமலையில் தோன்றிய தீர்த்தங்கள் 320 ஆகும்.

    இங்கு இந்திரலிங்கமும், இந்திர தீர்த்தமும் பல நூற்றாண்டுகளாக சிறந்து விளங்குகின்றன.

    இந்திரன் இந்த தீர்த்தத்தில் குளித்துதான், தான் செய்த குற்றங்கள் நீங்கப் பெற்றான்.

    மேலும் இந்திர பதவியில் நீடிப்பதற்கும் உரிமை பெற்றான்.

    இந்த இந்திர தீர்த்தத்தில் தான் ரமணர் துறவு பூண்டார்.

    அருணாச்சலேஸ்வரருக்கு தென்கிழக்கில் அக்னி லிங்கமும், அக்னி தீர்த்தமும் உள்ளது.

    இந்த தீர்த்தத்தில் தான் அக்னி தேவன் நீராடி, நினைப்பால் உண்டான பாவத்தை நீக்கி கொண்டான்.

    பங்குனி மாதம் பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் நீராடினால் மாதர்களால் வந்து பொருந்திய பாவம் தீரும்.

    • ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர்.
    • மேலும் அழகு, ஆயுள், உடல் நலம் வளம் பெறும்.

    ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர்.

    உலகத்தில் உள்ள சகல தீர்த்தங்களும், தங்களிடம் நீராடி மகள் போக்கிக் கொண்ட பாவங்கள் நீங்க,

    துலா மாதத்தில் காவிரி நதியில் நீராடி புனிதம் பெறுகின்றன என்று சாஸ்திரம் கூறுகிறது.

    பக்தர்களிடம் மிகவும் கருணை கொண்டவள். தட்சிண கங்கை என்ற சிறப்பு பெயரைக் கொண்டவள்.

    சம்சார சாகரத் துன்பங்களிலிருந்து விடுவிப்பவள். மோட்சம் அளிக்கும் அன்னை என்று காவிரி அஷ்டகம் கூறுகிறது.

    தன்னிடம் நீராடுபவர்களின் பாவங்களையும் அஞ்ஞானத்தையும் போக்கி,

    சகல பாக்கியங்களையும் அளிப்பவள் காவிரி என்று காவிரி புஜங்கம் கூறுகிறது.

    துலா மாதத்தில் காவிரியில் நீராடினால் எல்லா பாவங்களும் நசித்து விடும்.

    மேலும் அழகு, ஆயுள், உடல் நலம் வளம் பெறும்.

    செல்வச்செழிப்பு கிட்டும் என்று காவிரி மகாத்மியம் என்ற நூல் கூறுகிறது.

    கங்கையை விட காவிரி புனிதமானது என்பதால், துலா மாதம் ஐப்பசி அமாவாசை அன்று கங்காதேவி,

    மயூரத்துக்கு வந்து, நந்திக் கட்டத்தில் நீராடி, மக்கள் தன்னிடம் கரைத்தப் பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்கிறது சாஸ்திரம்.

    ஐப்பசி அமாவாசையில் காவிரியில் நீராடி, நீர்க்கடன் செலுத்தினால், அவர்களின் முன்னோர்கள் சுர்க்கலோகம் சொல்வார்கள் என்பது நம்பிக்கை.

    துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது.

    இயலாத நிலையில், கடைமுகம் என்று சொல்லப்படும் ஐப்பசி 30ந்தேதி நீராடி பலன் பெறலாம்.

    அன்றும் நீராட முடியாதவர்கள், முடவன் முழுக்கு என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் புனிதம் பெறலாம் என்கிறது சாஸ்திரம்.

    துலாமாதத்தில் பிரம்மா, சரஸ்வதி, பார்வதி, லட்சுமி, இந்திராணி, தேவ மாதர்கள், சப்த கன்னியர்கள் முதலியோர், ஒவ்வொரு நாளும் காவிரியில் நீராடுவதாக ஐதீகம்.

    புராணங்களில் சந்தனு மகாராஜா துலா காவிரி ஸ்நானம் செய்து, ஸ்ரீரங்க நாதரை வழிபட்டு பீஷ்மரைப் புத்திரனாக அடைந்தார் எனவும்,

    அர்ஜுனன் காவிரியில் துலாஸ்நானம் செய்து, ஸ்ரீரங்கநாதரை துதி செய்து சுபத்ராவை மணம் புரிந்தார் என்றும் குறிப்பு உள்ளது.

    மக்களுக்கு புத்தியும் முக்தியும் அளிக்கும் துலா மாதத்தில், காவிரியில் நீராடுபவர்கள் தன்னையும் தங்கள் குடும்பத்தினரையும்,

    முன்னோர்களின் பாவங்களையும் போக்கிக் கொள்வதுடன் வளமான வாழ்வு காண்கிறார்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

    துலா காவிரி நீராடல், அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றைத் தரும்.

    எனவே, காவிரியை நினைத்தாலும், சிறப்பைக் கேட்டாலும் பாவங்கள் விலகும் என்கிறார் பிரம்மா, நதிதேவதைகளிடம்.

    எனவே, பகலும் இரவும் சமமாக இருக்கும் ஐப்பசியில் (துலா மாதம்), நியமம் தவறாமல், பூஜைகளைச் செய்தும், விரதம் மேற்கொண்டும், காவிரி நதியில் நீராடினால் கட்டாயம் பலன் உண்டு.

    • மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றனுள் மூன்றாவதாக உள்ளது தீர்த்தம்.
    • இத்தலத்தின் தீர்த்தங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றனுள் மூன்றாவதாக உள்ளது தீர்த்தம்.

    நம் நாட்டில் விளங்கும் புனிதமுடைய பற்பல கிணறு, குளம், ஆறு, கடற்கரை இவையாவும் சிமயத்தன்மை பெற்றிருப்பதால் நீராடியோரது உடற்பிணியையும், பிறவிப்பிணியையும் அவை போக்குகின்றன.

    இதனை திருநாவுக்கரசர், 'சென்ற நாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே' என்கிறார்.

    இத்தலத்தின் தீர்த்தங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை.

    அவை....மருததீர்த்தம், கன்னி தீர்த்தம், கந்த தீர்த்தம் என்னும் தெய்வத்தன்மை மிக்க மூன்று தீர்த்தங்கள் உள்ளன.

    இத்தீர்த்தங்களில் நீராடுவோர்க்குச் செல்வங்கள் பெருகும் எனவும், உடற்பிணி நீங்குமெனவும் திருத்துடிசைப் புராணம் கூறுகிறது.

    ×